கேப்பை கடலைப் பருப்பு பக்கோடா

இன்று நாம் ஒரு எளிய சுவையான நொறுக்குத் தீனி செய்முறை ஒன்றைப் பார்ப்போம் – keppai kadalai paruppu pakoda

கேப்பை
கடலைப் பருப்பு
பக்கோடா

தேவையான பொருள்கள்

கேப்பை மாவு – 1 கப்
பச்சை்மிளகாய் – 5
கடலைப் பருப்பு – அரைக் கப்.
சின்ன வெங்காயம் – 20.
பச்சரிசி மாவு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு.
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனோடு பச்சை மிளகாய் சிறிதளவு சீரகம் சோ்த்து சற்று வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அந்ந கலவையுடன் கேப்பை மாவை சேர்த்து உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும் – keppai kadalai paruppu pakoda.

அதில் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவையும் சேர்த்து. பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும் எண்ணெய்யை அடுப்பில் காய வைத்து பக்கே்டா செய்வது போல் கிள்ளி போட்டு பொரிக்கவும். சுவையான ஆரோக்கியமான கேப்பை பக்கோடா தயார். நல்ல மொறு மொறுவென்று இருக்கும். அனைவரும் விரும்பி உண்பர்.

– ஏஞ்சலின் கமலா, மதுரை

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    சுவையான சத்தான செய்ய எளிதான சிற்றுண்டி. ராகிமாவு கால்சியம் சத்து நிரம்பியது என்பதால் குழந்தைகளுக்கு நல்லது.. ஆரோக்கியமான சிற்றுண்டியை பகிர்ந்த சகோதரி ஏஞ்சலின் கமலா அவர்களுக்கு நன்றி