மசாலா கஞ்சி

இது ஒரு எளிமையான மற்றும் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு. இரவு நேரங்களில் இவ்வுணவை எடுத்துக் கொள்ளவும் – masala kanji

masala kanji

தேவையான பொருட்கள்

  1. சாதம் – 1 கப்
  2. உளுந்து – 2 தேக்கரண்டி
  3. பாசிப் பருப்பு – 2 தேக்கரண்டி.
  4. சீரகம் – 1 தேக்கரண்டி
  5. வெந்தயம் – 1 தேக்கரண்டி
  6. பூண்டு – 10 பற்கள்
  7. சின்ன வெங்காயம் – 10
  8. மிளகு – 5

செய்முறை

அனைத்து மசாலா பொருட்களையும் கடாயில் எண்ணெய் இன்றி சிறிது வாசம் வரும் வரை வதக்க வேண்டும். பூண்டு மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். பிறகு ஒரு குவளை சாதத்தை அதில் சேர்த்து ஒரு குவளை சாதத்திற்கு இரு குவளை நீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வந்தவுடன் இறக்கவும்.

சாதம் நன்கு குழைந்து மாசாலா பொருட்களின் வாசத்தோடு நம்மை உண்ண அழைக்கும். காய்ச்சல் உடல் அசதி வாய் கசப்பு போன்றவற்றிற்கு ஏற்றது. துவரம் பருப்பு துவையல் அல்லது கொள்ளுத் துவையல் ஏற்றது – masala kanji.

குறிப்பு

காலையில் வடித்த சாதம் மிஞ்சி இருந்தால் அதை தாராளமாக பயன்படுத்தலாம். அன்னத்தை வீணாக்காமல் இவ்வாறு செய்து பாருங்கள் அனைவரும் விரும்புவர். – ஏஞ்சலின் கமலா, மதுரை

You may also like...

2 Responses

  1. Rajakumari says:

    அனைவரும் இதனை விரும்புவர்

  2. தி.வள்ளி says:

    மிகவும் அருமையான எளிமையான செயல்முறை.. அதுவும் வீட்டில் சாதம் மிஞ்சும் போது இதை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்… பகிர்தலுக்கு நன்றி சகோதரி ..