ஆரோக்கிய நீரோடை (பதிவு 6)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் தி.வள்ளி அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 6

arogya neerodai wellness

பீட்ரூட் பேரீச்சை ஜாம் ..

பீட்ரூட் 2
பேரிச்சம் பழம் 10
கல்கண்டு கால் கப்
பால் 100 ml
தேன் 2 ஸ்பூன்

செய்முறை

பேரிச்சம் பழத்தை பாலில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.பீட்ரூட்டை தோல் சீவி வேக வைத்து கொள்ளவும். பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை மிக்சியில் அரைக்கவும்..பிறகு வேக வைத்த பீட்ரூட்ஐயும் மிக்ஸியில் அரைத்துக் ககொள்ளவும்.பின் அத்துடன்,அரைத்த பேரீச்சை, கல்கண்டு எல்லாவற்றையும் அடி கனமான பாத்திரத்தில் போட்டு ஜாம் பதத்திற்கு கொண்டு வரவும்.(மிதமான தீயில் வைத்துக் கிளறவும்)
ஜாம் பதத்தில் வரும் போது இரண்டு ஸ்பூன் தேன் சேர்க்கவும். விருப்பமெனில் அரை ஸ்பூன் நெய் சேர்க்கலாம். மிகவும் சத்துள்ளது.

இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் .பீட்ரூட், பேரிச்சம் பழம், தேன் என எல்லாமே குழந்தைகளுக்கு மிகவும் சத்துள்ளது .பிரட், சப்பாத்தியிலும் வைத்து கொடுக்கலாம்.

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் நல்ல பலன் கொடுக்கும் – ஆரோக்கிய நீரோடை 6

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

1 Response

  1. லோகநாயகி.சு says:

    அருமையான பதிவு அம்மா