உணவாகும் மருந்து (மிளகு குழம்பு )

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி அன்றைய வழக்கத்தில் இருந்தது. இது மிளகின் பெருமையை உணர்த்துகிறது. அன்று மிளகை வெறும் உணவுக்காக மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை மருந்துக்காகவும் சேர்த்துக்கொண்டனர்.நாம் உண்ணும் உணவின் மூலமே மருந்தை நம் முன்னோர்கள் நமக்கு ஊட்டினார்கள். பாட்டிமார்கள் செய்யும் மிளகு குழம்பு முறையை இங்கு காண்போம் milagu kulambu.

தேவையானவை:

சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 15 பல்
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க

வர மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
வெள்ள உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி – 1 டீஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

melagu kolambu

செய்முறை :

1) சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2) புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

3)ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னறிமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

4)பின் அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிய பின், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 20 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும்.

5)அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி எண்ணெய் தெளிய இறக்கினால்,மிக எளிய முறையில் மணக்கும் மிளகு குழம்பு ரெடி. சளி ,இருமல் ,கபம் மற்றும் காய்ச்சலுக்கு கூட நல்ல உண(மருந்து)வாகும்.

மிளகில் இருக்கு ரகசியம்

1. ஒரே ஒரு மிளகு போமும் … உண்ணும் உணவு சுவையாக.

2. இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

3. மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவன்ற வளரும்.

4. நான்கு மிளகும், சுங்க சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லைமல் போகும்.

5. ஐந்து மிளகும் சுக்கும் துப்பிலியும் இணைந்தால் கோழை ஓடிய போகும்.

6. ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ணும், மூலநோய் வந்த சுவடின்றி தானே மறக்கும்.

7. ஏழு பிளிவு பொடி செய்து நெய் கலந்து அன்னம் பசைந்து உண்டால் நல்ல பாசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கால் விட்டுப் போகும்.

8. எட்டு மிளகடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திக்கூட எட்டி நிற்கும்.

9. ஒன்பது மிளகும் துளசி, ஒவ்வாமை (அலர்ஜியை) துரத்துகிறது.

10. பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மெதுவாக விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயில்றி விருந்துண்ணலாம்.

You may also like...