உடலின் கழிவுகளை வெளியேற்ற சில குறிப்புகள்

12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது. அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது udalin kalivugalai agatra.

1. உப்பு
2. புளி
3. வெள்ளை சர்க்கரை
4. வெங்காயம், பூண்டு
5. ஆங்கில மருந்து
6. கெமிக்கல் உணவு
7. உருளைக்கிழங்கு
8. அசைவ கொழுப்பு
9. பால் பதார்த்தங்கள்
10. பச்சை, வர மிளகாய்
11. ரீபைண்டு ஆயில்
12. மைதா, முட்டை

மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ? என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்த மகத்துவம் உண்டு. *எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உண்டு பயன் பெறவும்*.

udalin kalivugalai agatra

*உப்பை வெளியேற்றும் விதி*

தீர்வு : காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி பருகவும்.


*புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி*

தீர்வு : ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.


*வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி*

தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும்.


*வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி*

தீர்வு : காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும் நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.


*கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நஞ்சை உடலிருந்து வெளியேற்றும் விதி*

காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும்.


*கடைகளிலும், பாக்கெட்டிலும் உள்ள கெமிக்கல் கொண்ட உணவு மற்றும் முக்கியமாக அரிசியில் கலந்துள்ள நஞ்சை வெளியேற்றும் விதி*

தீர்வு : இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதையுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பருகவும்.


*உருளைக்கிழங்கால் குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்றும் விதி*

தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் விதை ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும்.


*நார்சத்தே இல்லாத அசைவ உணவானது குடலில் ஒட்டுக்கொண்டு வராமல் கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி*

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும்.


*அதிகமாக பால், தயிர், மோர் மற்றும் பால் பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி*

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை முற்றிய முருங்கை விதை இரண்டை உணவுக்கு பின் 15 நிமிடம் சப்பி விட்டு இறுதியில் மென்று முழுங்கவும்.


*பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகிய இரண்டின் உபயோகித்தல் ஏற்பட்ட இழப்பை மாற்றி மீண்டும் உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் விதி*

தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.


*உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலை உட்கொண்டதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. அதனை வெளியேற்றும் விதி*

காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து பருகவும்.


*மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி*

தீர்வு : காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொருமையாக சப்பி குடிக்கவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *