மணக்கும் நெய் சோறு

இனிப்பு இல்லாத பண்டிகை இல்லை, நெய் இல்லாத பலகாரம் இல்லை என்பது போல நெய் முக்கியத்துவம் பெறுகிறது. சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை. உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும் ghee ghee rice ghee benefits.

தேவையானவை

அரிசி – ஒரு கப்,
தேங்காய்ப் பால் – இரண்டு கப்,
கீறிய பச்சை மிளகாய் – நான்கு ,
பொடியாக நறுக்கிய தக்காளி – இரண்டு,
நெய் – கால் கப்,
கொத்தமல்லி, புதினா – ஒரு கைப்பிடி,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
நெய் (அல்லது) எண்ணெய் – கால் கப்,
மெலிதாக நீளமாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்,
இஞ்சி-பூண்டு விழுது – இரண்டு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க தேவையானவை

ஏலக்காய் – நான்கு,
பட்டை – நான்கு,
கிராம்பு – இரண்டு,
பிரிஞ்சி இலை – ஒன்று ,
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை

கடாயில் நெய் ஊற்றி உருகியதும் தாளிப்புப் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளிக்கவும். அதில் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் கொத்தமல்லி, புதினா, இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய்,தக்காளியைபோட்டு நன்றாக வதக்கவும். பின் அரிசி போட்டு வதக்கி, தேங்காய்ப் பால் ஊற்றி இரு மடங்கு தண்ணீரும் அளந்து ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு குக்கரில் விசில் வரும் வரை வைக்கவும். சாதத்தை இறக்கி, மீதமிருக்கும் 1/4 கப் நெய்யை ஊற்றிப் கிளறி விட்டு பரிமாறவும். மணக்கும் நெய் சோறு தயார்.

பயன்கள்

நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பதால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து அதிகப்படியான கொழுப்பை கரைத்துவிடும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *