தீபாவளி சிறப்பு கவிதைகள்
காத்திருந்து வந்தவிழா
காரிருளை போக்கிடுமே
புத்தாடை பளபளக்க
புதுவெடியும் படபடக்க
தீயவை ஓடி
தித்திப்பை தேடி
நல்லவர்கள் கூடி
நல்லதை பாடி
உள்ளங்கள் கூடி
உவகையில் ஆடி
சொந்தங்கள் கூடி
சொர்க்கத்தை நாடி
திசையெங்கும் திருநாளாய்
தீப ஒளி பெருநாளாய்
மனமெங்கும் மகிழ்ச்சி ஒலி
மத்தாப்பாய் சிரிக்கட்டும்
அந்தியூரான்
(ஸ்ரீராம் பழனிசாமி)
தீபஒளி நாள்
மழையோடு பனியும்
இதமாகப் பொழிய
அழையாத மேகமும்
கருணையது காட்ட
உழைக்கும் ஏழையின்
உளமது களிக்க
தழைக்கவே பசுமை நிலைக்கவே இயற்கை
பொன்னான நன்னாளை
பொலிவோடு வரவேற்று
அன்போடு பெரியோரை
வணங்கி மகிழ்ந்திட
தீப ஒளி திருநாள்
திகட்டாது வந்ததுவே
இருளது அகற்றி
பயம்தனை போக்கி
மகிழ்ச்சியை நிரந்தர
குடியமர்த்த வந்ததுவே
கவிஞர் பாலாஜி
சுந்தரம் புத்தகக்கடை, போளூர்
தீப ஒளி
தீப ஒளி தீபாவளி
திருநாளாம்
தித்தித்த நாளாம்
திகைக்கவைத்த திருநாளாம்
உறவுகளோடு உறவாடி
உல்லாசம் பொங்கும் தீபாவளி
பேரின்பம் கண்டதுவே
பெருமிதம் தந்ததுவே
புதுவித ஆடைகளை உடுத்தி
பூரிக்கவைக்கும் தீபாவளி
வெடிகள் வெடித்து
வெற்றிக்களிப்பில்
கொண்டாடும் தீபாவளி
தீப ஒளி
தீபாவளி
இருளை அகற்றி
இன்பத்தை அள்ளித் தந்திடும்
மதிப்புறு முனைவர்
இரா. இரமணி ஆசிரியை, சேலம்.