யாமம் – நூல் அறிமுகம்

திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக இதனை எழுதத் துவங்கினேன் – yaamam nool mathippedu.

யாமம்

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் தனது படைப்புகளை நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார். உலகமே இந்தியாவை, அதன் அறிவியல் வளர்ச்சியை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இந்த இரவில் நாமும் இந்தியாவின் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த நாவல் வாய்ப்பாக அமைகிறது.

யாமம் என்பது இரவைக் குறிக்கும் ஒரு தமிழ்ச்சொல். அவரவரின் சுகதுக்கங்களை அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப் போல முடிவற்று எல்லாப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதன் சுகந்தமும் என்றும் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

yaamam nool arimugam

தாகூர் இலக்கியப் பரிசு

இரவை ஒரு வாசனை திரவியமாக்கி, 300 ஆண்டு கால வரலாற்றின் ஊடாக சென்னை மாநகரின் வாழ்வின் அனுபவங்களை நாவல் விவரிக்கிறது. மதராப்பட்டிணமும் அது உருவான காலமும் வரலாறும் நாவலின் பின்புலமாக இல்லாமல் நாவலின் அடித்தளமாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்நாவல் தாகூர் இலக்கியப் பரிசை எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.

எஸ்ரா அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு, நம்முடைய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நம்முடைய சமையலறைக்குச் செல்ல வேண்டும். ஆம், அங்குள்ள பொருள்கள்தான் நம் வரலாற்றை சொல்கின்றன.

இந்தியா அடிமைப்பட காரணம்

ஒரு சிறு குறு மிளகு தான் இந்தியாவை 400 ஆண்டுகள் அடிமைக் கூண்டில் நிறுத்தியது என்றால் நம்ப முடிகிறதா..? – yaamam nool mathippedu

ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து டச்சுக்காரர்கள் மட்டுமே மிளகு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர். 16 ஆம் நூற்றாண்டின் ஒரு கிறிஸ்துமஸ் இரவில் டச்சுக்காரர்கள் மிளகுக்கான விலையை உயர்த்தினர். மேலும் மிளகுக்கான செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கினர்.

s ramakrishnan writer

ஆங்கிலேயர்களின் உணவில் மிளகு என்பது பிரதானம். சூப்பிலும், இறைச்சி வகை உணவுகளிலும் குளிருக்கு இதமாக மிளகு காரத்தை விரும்பி உண்பர். இந்த செயற்கை தட்டுப்பாடு அங்கிருந்த 24 வியாபாரிகளை ஒன்று கூடி ஆலோசிக்கச் செய்தது. அவர்கள் நாம் ஏன் இந்தியாவில் இருந்து மிளகை இறக்குமதி செய்யக்கூடாது என்ற கேள்வியுடன் கூடினர். முடிவாய் அரசியின் ஒப்புதலுக்காக அந்தத் திட்டம் அனுப்பப்பட்டது. அரசி எலிசபெத்தும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

ராயல் மொனார்க் என்ற முதல் கப்பல் தனது பயணத்தை இந்தியாவை நோக்கிச் செலுத்தியது. ஆனால் அது வழி தவறி சென்றது. பின்னர் ஹெக்டர் என்ற கப்பல் இந்தியாவை வந்தடைந்தது.

அதன் மூலம் உருவான கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை 400 வருடம் ஆட்சி செய்யப்போகிறது என்று அந்தக் கப்பலில் இருந்த ஒருவர் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

சென்னை மாநகரம்

பிரான்சிஸ் டே என்னும் கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர் மஸ்லின் துணி தயாரிப்பை விரிவுபடுத்தவும், பருத்தி துணிகளை நெய்யும் நெசவாளர்களையும் தேடி மசூலிப்பட்டினம் செல்கிறார். அங்கிருந்து வடக்காக செல்லும் போது கடற்கரை ஓரமாக இருக்கும் நிலப்பகுதியை ஆற்காடு மணியக்காரர்களைக்கொண்டு லண்டன் ராணி ஒப்புதலுடன் விலை பேசி முடிக்கிறார். பின்னர், ஆயுதங்களையும் வெடி மருந்தையும் பாதுகாப்பாக வைக்க ஒரு கோட்டையைக் கட்டி கொண்டார். அதுவே செயின்ட் ஜார்ஜ் கோட்டை. அன்று விலைக்கு வாங்கிய சிறிய பகுதியே இன்று அகண்டு விரிந்து நிற்கும் சென்னை மாநகரம்.

இப்படி உருவான மதராப்பட்டிணத்தின் மக்கள் வாழ்ந்த கதையை நான்கு மாந்தர்களை மையமாகக் கொண்டு இந்த நாவல் விளக்குகிறது. எஸ்ரா அவர்களின் படைப்புகளில் எது கற்பனை, எது வரலாறு, எது புனைவு என்பதை கண்டறிவது கடினம். வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலின் கதைக்களம் அமைந்துள்ளது.

அத்தர்

அத்தர் தயாரிக்கும் குடும்பத்தின் கதையே இந்த நாவலின் மையம். அவர்கள் தோட்டத்தின் ரோஜா இதழில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட அந்த நறுமணம் மிக்க அத்தரின் பெயரே “யாமம்”.

1857 ஆம் வருடம், ஒரு இரவில் மதுராப்பட்டிணத்தின் அமீர்சாகிப் பேட்டையில் வணிகம் செய்து கொண்டிருந்த அப்துல் கரீமின் கனவில் அல் அசர் முசாபர் என்ற பக்கீர் தோன்றி,
“நீயும் உன் முன்னோர்களும் அவர்களது பாட்டன் பூட்டன்களும் காலம் காலமாக எந்த ரகசியத்தை கதையாக்கி தங்களுக்குள்ளாக மட்டும் வைத்து இருக்கிறீர்களோ அந்தக் கதையை வெளிப்படுத்தும் நேரம் வரப்போகிறது. இரவு என்னும் ரகசிய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை நீ உன் புதல்வனுக்கும், அவன் அவனது புதல்வனுக்கும் தெரியப்படுத்தும் வரை நீ தயாரிக்கும் அத்தர் என்றும் சுகந்தத்தை தரும், அது தவறும் சமயத்தில் அந்த அத்தர் சுகந்தத்தை இழக்கும்” என்று கூறியது – yaamam nool mathippedu.

அப்துல் கரீமுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ரஹ்மான்யா, இரண்டாவது மனைவி வஹிதா. தனது தொழிலை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்குத் தனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லை என்ற ஏக்கத்திலேயே கரீமின் காலம் கடக்கிறது. ஆற்காட்டில், வாசனையின் தோட்டம் எனும் மிகப்பெரிய ரோஜா தோட்டம் அமைத்து, ஆட்கள் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய சுவர் எழுப்பப்பட்டிருந்தது.

ரோஜா இதழ்களிலிருந்து அத்தர் பிரித்தெடுக்கும் 15 நாட்களுக்கு முன்பிருந்தே நோன்பைக் கடைபிடிப்பார் கரீம். அத்தர் தயாரிப்பை கரீம் சிரத்தையோடு செய்து முடித்து நகரத்தில் விற்பனைக்கு வரும்போது நகரத்தில் உள்ள அனைவரின் உடலிலும் அந்த வாசனை கமழும். இந்தக் காலகட்டத்தில் கரீமின் மனைவி ரஹ்மானியாவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆண் வாரிசை எதிர்பார்த்த அவருக்கு இது அதிர்ச்சியாக அமைந்ததால் கரீம் மூன்றாவதாக சுரையா எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.

மதராப்பட்டிணத்தில் மக்கள் வசிக்கும் பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் வசிக்கும் பகுதி White Road, நம்மவர்கள் வசிக்கும் பகுதி Black Road. நம்மவர்களுடன் ஆர்மேனியர்களும் சேர்ந்து வாழ்ந்தனர். ஆர்மேனியர்களின் கல்லறைத் தோட்டமும் தேவாலயமும் அவர்களின் வாழ்க்கைக்குச் சான்றாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அருகில் இன்றும் உள்ளது.

பத்திரகிரி

யாமம் நாவலில் அடுத்ததாக சித்தரிக்கப்படுவது பத்திரகிரியின் வாழ்க்கை. தந்தையின் கொடூரத்தால் தாயை இழந்து, அவனது தாயின் தங்கை மூலம் வளர்க்கப்படுகிறார்கள் பத்திரகிரியும் அவனது தம்பி திருச்சிற்றம்பலமும். பத்ரகிரி வானத்து நட்சத்திரத்தை ஆய்வு செய்வதிலும், திருச்சிற்றம்பலம் கணிதத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.

இந்தியாவின் நில அளவியலைத் தலைமை ஏற்று நடத்தியவர் திரு லாம்டன். அவரது குழு சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் என்று அழைக்கப்படும் பரங்கிமலையில் இருந்து இந்தியாவின் நிலப்பரப்பை அளக்கத் தொடங்கியது. இந்த தொடக்கம் தான் உலகின் மிகபெரிய சிகரமான எவரெஸ்டை கண்டறிய உதவியது.

இந்த நில அளவைக்காக தியோடலைட் எனும் கருவி லண்டனிலிருந்து சூரத் கொண்டு வரப்பட்டு, ராணுவ பாதுகாப்புடன் மதராப்பட்டிணம் வந்தடைந்தது. யானையின் உதவியுடன் அந்தக் கருவி மலைமீது கொண்டு செல்லப்பட்டது.

பரங்கிமலையில் இருந்து பார்க்கும்போது சையத்சாபேட்டையில் (இன்றைய சைதாப்பேட்டை) செல்லும் மாட்டு வண்டியும் அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கோபுரமும் தெரிந்ததாக வரலாற்று பதிவு. திரு. வில்லியம் லாம்டன் அவர்களுடைய மார்பளவு சிலை பரங்கிமலை தேவாலய வளாகத்தில் 17.09.2003 அன்று நிறுவப்பட்டது. இவ்வாறு இந்தியாவை ஒவ்வொரு இடமாகச் சென்று நில அளவை செய்த லாம்டனின் குழுவில் பத்திரகிரியும் வேலை செய்கிறான்.

பத்ரகிரியின் மனைவி விசாலம், அவர்களுக்கு ஒரு குழந்தை என மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது அவரது வாழ்க்கை. திருச்சிற்றம்பலம் கணிதத்தில் மேற்படிப்பு படிக்க பத்ரகிரி முயற்சி செய்து, அதில் வெற்றியும் அடைந்தான். திருச்சிற்றம்பலம் லண்டன் செல்ல முடிவாகி, அவனது மனைவி தையல்நாயகியை பத்ரகிரியின் இல்லத்தில் இரண்டு வருடம் விட்டுச் செல்வது என முடிவு செய்தான். தையலும் விசாலமும் சகோதரிகள் போல் வாழ்ந்து வந்தனர். விசாலம் தான் பயன்படுத்திய அத்தரை தையலுக்கு அறிமுகப்படுத்தினார்.

கிருஷ்ணப்ப நாயக்கர்

அடுத்ததாக இந்த நாவலில் வரும் மாந்தர், கிருஷ்ணப்ப நாயக்கர். இவர் தனது சகோதரருடன் சொத்துக்காக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மதராப்பட்டணத்தில் நீதிக்காக காத்துக் கிடந்தார். இந்த நாளில் கொஞ்சம் கொஞ்சமாக அவரது செல்வத்தை இழக்கத் தொடங்கினார். வயதான கிருஷ்ணப்ப நாயக்கர் தனக்குப் பிடித்தமான ஆங்கிலப் பெண்மணியுடன் தனக்குச் சொந்தமான மேல்மலைக்கு வந்து விடுகிறார். அங்கு அவர்களுக்கு இயற்கை சூழ்நிலை பிடித்துப்போக தனது சகோதரனிடம், தன் அனைத்து சொத்துக்களையும் எடுத்துக்கொண்டு, இந்த மேல்மலையை மட்டும் அவருக்குக் கொடுக்கும்படி கேட்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்த சகோதரரும், அந்த மேல்மலையை கிருஷ்ணப்ப நாயக்கர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த ஆங்கிலப் பெண்மணி பெயரில் எழுதி வைத்தார்.

சதாசிவ பண்டாரம்

கிருஷ்ணப்ப நாயக்கர் மதராப்பட்டணத்தில் இருந்து மேல்மலைக்குச் சென்றது போல, சதாசிவ பண்டாரம் என்னும் சன்யாசி திருவிடைமருதூரில் இருந்து மதராப்பட்டணத்தை நோக்கி வருகிறார்.

சதாசிவ பண்டாரம் தந்தையை இழந்து தாயால் வளர்க்கப்பட்டவர். பட்டினத்தடிகள் பாடல்களால் ஈர்க்கப்பட்டு சிவத்தை நோக்கி தனது வாழ்க்கையை நகர்த்தியவர். தனது தாய் அழுது புலம்பிய போதும் சிறிதும் தன் நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் சந்நியாசத்தைக் மேற்கொண்டு, கோவிலில் படுத்திருந்தார். அங்கு ஒரு நாய் பண்டாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தது. பார்வையை பண்டாரத்தை விட்டு விலக்கவேயில்லை. அந்த நாயின் கண்களில் இருந்த கருனையும், ஈர்ப்பையும் கொண்டு அது சிவன் தான் என்று உணர்ந்து, அதற்கு நீலகண்டம் என பெயர் சூட்டினார். தன்னை வழிநடத்தப் போவது நாய் தான் என பண்டாரம் தீர்மானித்து, அதற்கு ஏற்றார்போல் நாய் செல்லும் திசையெல்லாம் அலைந்து திரிந்தார்.நாய் உறங்கினாள் பண்டாரமும் உரங்கினார், நாய் ஓடினால் பண்டாரமும் ஓடினார்.

இப்படி நான்கு கதை மாந்தர்களின் கதைகளில், மதராப்பட்டணமும் அத்தரும் இணைப்புப் பாலமாக அமைந்துள்ளது. இந்த அறிமுகத்தில் இருந்து அடுத்து அவர்களது வாழ்க்கை அத்தரினால் ஒவ்வொருவருடைய அடிமனதில் காம இச்சைகளும் அவர்கள் எடுத்துக்கொண்ட காரியத்தை முடிப்பதற்கு ஒன்றை இழந்து அதை அடைய துடிப்பதும் மனித மனநிலைகளை படம் பிடித்துக் காட்டுவதாக இந்த நாவல் அமைந்துள்ளது – yaamam nool mathippedu.

நான்கு கதை மாந்தர்களின் நிலை

  • அப்துல் கரீம் குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெரும் ஆசையில் தனது சொத்தை இழந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். அதனால் அவனது மூன்று மனைவிகளும் தங்களாக மீன் வியாபாரம் செய்து சாப்பாட்டுக்கு வழிதேடிக்கொண்டனர்.பின் ஒரு கட்டத்தில் மதராபட்டிணத்தில் பரவிய காலரா நோயால் கரிமின் குடும்பம் சிதைகிறது.
  • திருச்சிற்றம்பலம் லண்டன் சென்ற நேரத்தில் பத்திரகிரிக்கு தையல் மீது மோகம் ஏற்படுகிறது அந்த மோகத்தால் அவனுடைய வாழ்வும் சிதைந்து தையலும் தன் குணத்தை இழக்கிறாள்.விசாலம் பத்திரகிரியை பிரிந்து வாழ்கிறாள்.
  • பண்டாரம் தன் பயணத்தில் ஒரு இடத்தில் திருநீலகண்டத்தின் வழிகாட்டலால் நீண்ட நாட்கள் தங்க நேரிடுகிறது அங்கு ஒரு பெண்னின் மீது மோகம் கொண்டு வாழ்க்கை நடத்துகிறது பண்டாரம். ஒரு கட்டத்தில் மனைவிக்கு பிரசவ வலி ஏற்ப்பட மருத்துவச்சியை கூப்புட செல்கையில் திரு நீலகண்டம் வேரொரு பாதையில் செல்கிறது. மனைவியின் பிரசவத்தை பார்பதா அல்லது நீலகண்டதின் திசையில் செல்வதா? ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு பண்டாரம் தள்ளப்படுகிறார். இந்த சூழலில் தான் சாதரண மனிதர்கள், சாதனை மனிதர்களாக செல்லும் பாதையை தேர்ந்தெடுகிறார்கள்.
  • கிருஷ்ணப்ப நாயக்கர் மேல் மலையை பெற்ற பிறகு அவரது வாழ்க்கை எவ்வாறாக மாற்றம் அடைகிறது என யாமம் நாவல் அறிமுக கதைகள் இருந்து ஒவ்வொன்றாக முடிக்கப்படுகிறது.

yaamam nool mathippedu

மனதின் ஆழ்மனது களியாட்டங்கள் இரவினில் முழித்துக் கொள்கின்றன, அந்தக் களியாட்டங்களுக்கு வரவேற்பு செய்வதற்கு யாமம் எனும் அர்த்தர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனிதன் தான் தவறும் இடங்களை சரியாக சுட்டிக் காட்டி நம்மை விழிப்படைய செய்ய சரியான நாவல் “இந்த யாமம்”.

hemanathan

– ஹேமநாதன்

S. Raa

You may also like...