யோசிக்க வேண்டிய தருனம்

50வருடங்களுக்குபிறகு தண்ணீர் பிரச்சனையால்
என்னவெல்லாம் நடக்கும்னு ஒரு சின்ன கற்பனை

 • ரேஷன்கடையில் கடத்த முயன்ற1,000 லிட்டர்
  தண்ணீர் பாட்டில்களை பொதுமக்கள்மடக்கி பிடித்தனர்.
  தண்ணீர் குவிப்பு வழக்கில்(சொத்துகுவிப்பு) மாஜி MLA கைது.
 • மாதம் 50லிட்டர் தண்ணீர் வழங்கப்படுமென முதலமைச்சர் சட்டசபையில் அறிக்கை வெளியிட்டார்.
 • ஆற்றில் தண்ணீர் இருப்பதாகநினைத்து குதித்த வாலிபர் மண்டை சிதறி பலியானார்.
 • ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால்தமிழக அரசு சார்பில் 500லிட்டர் குடிநீர் வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவிப்பு.
 • அளவுக்கு அதிகமாக குடிநீர்பதுக்கி வைத்திருந்த பிரபல நடிகர் ZOOM STAR வீட்டில் TWAD அதிரடி சோதனை.
 • தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக18,500 இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேறினர்.
 • 10அடியில் சுவையான குடிநீர்கிடைக்குமென நிலங்களை விற்ற ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்கியவர்களால் அடித்து கொல்லப்பட்டார்.
 • 1000லிட்டர் தண்ணீர்கேட்டு வரதட்சனை கொடுமை செய்ததால்புதுப்பெண் தற்கொலை.
 • தண்ணீர் பிரச்சனையால் ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் ஈ.கு.கா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது, நாளை முதல்(01/01/2064) ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வருகிறது.
 • தண்ணீர் கிடைக்காததால் மண்ணெண்னெய் குடித்த வாலிபருக்கு வாந்தி பேதி மயக்கம்.
 • தண்ணீர் பிரச்சனைக்காககர்நாடகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்போன 6அமைச்சர்கள் கர்நாடகாவிலேயே குடிபெயர்ந்தனர்.
 • உப்புமா கிண்டும்போது தண்ணீர் குறைவானதால் உப்புமா  கெட்டியாகி இட்லியானது, விவாகரத்து கேட்டு மனைவி மீது கணவன்வழக்கு.
 • Aqua badu 1லிட்டர் கேன் வாங்கினால் 2 லிட்டர்  கொக்கமக்காகோலா (கொக்கோ கோலா)இலவசமென ரீல்ரிலயன்சு அறிவிப்பு.
 • பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்த பெரியவருக்கு விக்கல் ஏற்பட்டது, அருகிலிருந்தவர் தண்ணீர் தராததால் பெரியவர் விக்கி விக்கியே இறந்தார்.
 • திருமண பந்தியில் மணமகளின் தாய்மாமனுக்கு தண்ணீர் தராததால் இருவீட்டாரின்பேச்சுவார்த்தை அடிதடியில்  முடிந்தது.
 • தண்ணீர் பிரச்சனை சம்மந்தமாக காரசாரமாக பேசிய எதிர்கட்சி MLAவை அவையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
 • குடிக்க தண்ணீர் தராததால் 3வது அணி MLAக்கள் சட்டசபையை புறக்கனித்தனர்.
 • 8மாதங்களுக்கு பிறகு பெரியமழை பெய்ததால் தமிழக மக்கள் ஓராண்டுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் குடும்பம் குடும்பமாக மொட்டை மாடியில்நின்று சோப்பு பொட்டு மாங்கு மாங்கென்று அழுக்கு தேய்த்து குளித்தனர்.

 

NOTE:
இப்பயெல்லாம் நடக்கக்கூடாதுன்னா…!!
மரம் வளர்ப்போம். இயற்கை வளம் காப்போம்
தண்ணீர் பிரச்சனையை போக்குவோம்……!!!

இப்படிக்கு முகமறியா நண்பர்

You may also like...