பஞ்ச தானிய பூரி

பூரி என்றாலே அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு சிற்றுண்டி, அதிலே ஆரோக்கியத்தையும் சுவையையும் சேர்த்தால் எப்படி இருக்கும் என இந்த பதிவில் வாசிக்கலாம் – panja thaaniya poori.

panja thaaniya poori

தேவையான பொருட்கள்

கோதுமை – 200 கிராம்
ராகி – 50 கிராம்
சோளம் – 50 கிராம்
 கம்பு – 50 கிராம்
அரிசி (அல்லது கடலை) – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கோதுமை, ராகி, சோளம், கம்பு, அரிசி அல்லது கடலை ஆகியவற்றை சேர்த்து கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
அதில் தேவையான அளவு உப்பு, வெண்ணை சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவேண்டும். அரை மணி நேரம் வைத்தபின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி அல்லது பூரி கட்டையில் தேய்த்து பொரித்து எடுத்தால் சுவையான பூரி தயார் – panja thaaniya poori.

உடலுக்கு நல்லது

வெறும் கோதுமையை விட சில தானியங்களை சேர்ப்பதன் மூலம் சுவையும் ஆரோக்கியமும் கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.

You may also like...

4 Responses

  1. R. Brinda says:

    சத்தான பூரி! எல்லோரும் செய்து சாப்பிட்டு ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

  2. தி.வள்ளி says:

    எல்லா தானியங்களும் சேருவதால் சிறந்த சத்துணவு ..

  3. அருமை யான பூரி.நல்ல சத்துள்ள உணவு.பாராட்டுகள்.

  4. Rajakumari says:

    Different pori sema taste