என் மின்மினி (கதை பாகம் – 16)

சென்ற வாரம் நான் எப்படிப்பட்ட பொண்ணு என்னோட சூழ்நிலை எல்லாம் தெரிஞ்சுகிட்டு உன்னோட காதலை என்கிட்டே சொல்லியிருந்தா சந்தோசமா உன்னோட காதலை நான் ஏத்துகிட்டு இருந்துருப்பேன்… – en minmini thodar kadhai-16.

en minmini kathai paagam serial

அதன் பிறகு அவர்கள் இருவரும் அன்று சந்தித்து கொள்ளவே இல்லை.
இரவு பொழுது ஆனது.நாளைக்கு உன்கிட்டே பேசணும்னு சொல்லி அவனை வர சொல்லிட்டு வந்துட்டேன்.நாளைக்கு வருவானா, மாட்டானா என்ற எண்ணம் வேறு அவள் மனதில் வந்து வந்து போனது…

அதே வேளையில் பிரஜினும் அவளை நினைத்தபடி.,
ச்சே கொஞ்சம் பொறுமையாக சொல்லியிருக்கலாம். எதுக்கு எடுத்தாலும் எடக்கு மடக்கா பேச வேண்டியது.அப்புறம் அங்கே குடையுது இங்கே குடையுதுனு புலம்ப வேண்டியது. ஒரு வேளை அவள் மனசு கஷ்டபடுத்துற மாதிரி பேசிட்டேனோ என்றபடி புலம்பி கொண்டிருந்தான்…

ஒருவரை ஒருவர் மனதுக்குள் நினைத்தப்படி, தனக்குள் புன்னகைத்தபடி இரவு பொழுதுகள் இனிமையாக முடிய சூரியன் தனது முகத்தினை வெளியே காட்ட முயற்சி செய்து கொண்டிருந்த சமயம் நேரம் சரியாக 6.20யினை காட்டி கொண்டிருக்கவும், ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்ற கைபேசி சிணுங்கவும் சரியாக இருந்தது.

தூக்க கலக்கத்தில் இருந்து சரியாக தெளியாதவளாக ஹலோ சொல்லுங்க என்றாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…
நான் பிரஜின்.எதோ பேசணும்னு சொன்னே.அதுக்குதான் கூப்பிட்டேன்.ம்ம் சொல்லு என்ன விஷயம் என்றான்…
நான் போன்ல பேசணும்னு சொல்லவே இல்லையே.நேரில் தனியாக பேசணும் என்று தெளிவாகத்தானே சொன்னேன் என்றாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…

ம்ம்…என்று அமைதியாக கேட்டு கொண்டிருந்தவன் நான் ரெடி ஆகிட்டேன்.நீ ரெடி ஆயாச்சா.சீக்கிரம் கிளம்பி வா என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-16.

ஹே உனக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சொன்னே.அதவிட நான் சொல்லுகிற விஷயம் ஒன்னும் அவ்வளவு முக்கியம் இல்லை.
அதான் நேத்தே மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டே இல்லையா. அப்புறம் ஏன் இப்போ கிளம்பலயானு கேட்குறே என்றாள் ஏஞ்சலின் கிரிஸ்டி…

அதை விடு. நீ இப்போ வரியா இல்லையா அதை மட்டும் சொல்லு… வரலைனு சொன்னா என்னோட வேலையினை நான் பார்ப்பேன் என்றான் பிரஜின்.

பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக வருகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு தன் கைபேசி அழைப்பை துண்டித்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி..

– அ.மு.பெருமாள்

பாகம் 17-ல் தொடரும்

You may also like...

3 Responses

  1. Rajakumari says:

    கதை மிகவும் சஸ்பென்ஸ் ஆகப் போய்க்கொண்டு இருக்கிறது ra

  2. தி.வள்ளி says:

    இனிய ஊடல் தொடர்கிறது…காத்திருப்போம்….

  3. Kasthuri says:

    காதலை, சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதாநாயகி…