சுமை தாங்கி – உண்மை கதை (பாகம் 1)

இது ஒரு உண்மை நிகழ்ச்சியின் கதை வடிவம். நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் பல சுமைதாங்கிகளுக்கு சமர்ப்பணம் – sumai thaangi kadhai.

sumai thaangi unmiyin vali

பள்ளிக்குக் கிளம்பி கொண்டிருந்த கீதாவிடம் , அவள் தந்தை ” கீதா இன்று
பள்ளியிலிருந்து சீக்கிரம் வந்து விடம்மா . உன்னை பெண் பார்க்க வருகிறார்கள்.”
என்றார்

”அப்பா, உங்களுக்கு நான் நிறைய முறை சொல்லிவிட்டேன் . இந்த பெண்
பார்க்கும் நிகழ்ச்சி எல்லாம் வேண்டாம் என்று. ஏன் என்னை தொந்தரவு
செய்கிறீர்கள் . நான் உங்களுக்கு சுமையாகவா இருக்கேன். இதுவரை
பார்த்தவர்கள் எல்லாரும் என் தோல் நிறத்தை பார்த்து வேண்டாம் என்று
சொல்கிறார்கள். வெறுப்பா இருக்கு அப்பா. கல்யாணம் செய்துக்கம்மால் வாழ
முடியாதாப்பா . நான் இப்படியே சந்தோசமா இருக்கேன் அப்பா. உங்களுக்கு
இரண்டாவது மகனாக இருந்துட்டு போறேன்” – கீதா

ஆசிரியை வேலை

இன்று ஒரு நாள் மட்டும் வந்து விட கூறினார் விஸ்வநாதன். அவருக்கு
கீதாவின் எண்ணங்கள் புரியாமலில்லை .என்ன செய்வது. வேலைக்கு போகும்
பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்காமல் வீட்டில் வைத்துக் கொண்டால்
இந்த ஊர் நன்றாக வம்பு பேசும். மகளின் வருமானத்தில் வாழ்வதாக குறை
சொல்லும். விஸ்வநாதனுக்கு கீதா மூன்றாவது பெண். நன்றாக படித்து, இப்போ
ஒரு சர்க்கார் பள்ளியில் பெரிய ஆசிரியை வேலை பார்த்து வருகிறாள். நிறைய
சம்பளம். நன்றாக பாட்டு பாடுவாள், வீணை வாசிப்பாள். தனியாக மாலை
நேரங்களில் பிள்ளைகளுக்கு பாடம், பாட்டு மற்றும் வீணை சொல்லி கொடுத்து
பணம் சம்பாதித்து வந்தாள். அவள் நிறம் கருப்பு தான் , ஆனாலும் பார்க்க
குறுகுறுப்பாக இருப்பாள்.

அவளுடைய இரண்டு அக்காக்களுக்கும், ஒரு அண்ணனுக்கும் கல்யாணம் முடிந்து அவரவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கீதாவுக்கு அவள் நிறமே அவள் கல்யாணத்திற்கு தடையாக இருந்து
வந்தது.. விஸ்வநாதன் மிகவும் கவலை கொண்டார். அன்று பெண் பார்க்க
வந்தவர்களும் அதே பல்லவியை பாடி விட்டு சென்றனர்.

நிறத்தை மாற்றினாள்

அன்று இரவு கீதா விஸ்வநாதனுடன் உட்கார்ந்து தமிழ் மாட்ரிமொணியில் ,
அவளுடைய ப்ரொபைலில் சில மாற்றங்களை செய்தாள் . தன் நிறத்தை கருப்பு
என்று மாற்றினாள். இனிமேல் யாரும் அவளை சீக்கிரம் தேர்வு செய்ய
மாட்டார்கள் என்று நினைத்தாள். அவள் நினைத்தது போலாயிற்று. இரண்டு
வருடங்கள் ஓடின. எவரும் பெண் பார்க்க வரவில்லை. கீதா சந்தோசம்
அடைந்தாள் .ஆனால் விஸ்வநாதனோ மிகவும் கவலை கொண்டார். எங்கும்
செல்வதை தவிர்த்து கொண்டார். ஆனால் தினமும் ஒரு முறையாவது

மாட்ரிமொணியை திறந்து பார்ப்பார். அப்படி ஒரு நாள் பார்க்கையில் ஒருவர்
தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.

திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்

கீதாவை கூப்பிட்டு அந்த ப்ரோபைலை காண்பித்தார் விஸ்வநாதன். அதன் படி,
அந்த பையன் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் ஏற்கனேவே
திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்றும் இருந்தது. மேலும் குழந்தைகள்
எதுவும் கிடையாது என்றும், பெற்றோர்கள் இல்லை என்றும் தெரிவிக்க
பட்டிருந்தது. உறவு என்று கூறிக்கொள்ள ஒரு அக்காவும் அவளது குடும்பமும்
மட்டும்தான். சென்னையில் சொந்த வீடு இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது – sumai thaangi kadhai.

இவை அனைத்தையும் படித்த விஸ்வநாதன் கீதாவிடம் நன்கு யோசித்து முடிவு
சொல்லுமாறு கூறினார். கீதாவும் தன் தந்தைக்காக வேண்டி திருமணத்திற்கு
சம்மதித்தாள். . கல்யாணம் நடந்து முடிந்து தான் பார்த்துக் கொண்டிருந்த
வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு தனது கணவனுடன் சென்னைக்கு
வந்து சேர்ந்தாள்.

அக்காவின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் அக்காவும் தம்பியும்
ஒரே வீட்டில் இருந்து வந்தனர். அக்காவிற்கு பத்து வயதில் அனுஷா என்று ஒரு
பெண் குழந்தை இருந்தது. அது அருகில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தது. அனு, புதிதாக வந்துள்ள தன் மாமியிடம் மிகுந்த அன்புடனும்
ஆசையுடனும் பழகி விரைவிலேயே ஒட்டிக் கொண்டாள். பள்ளிக்கு செல்லும்
நேரம் தவிர எப்போதும் கீதாவுடனேயே இருந்தாள் அனு.

அனுவுக்கு டியூஷன்

அனுவிற்கு கணக்கு சரியாக வராது. அவள் தினமும் கீதாவுடன் அமர்ந்து, கணக்கு ஹோம் ஒர்க் செய்வது மட்டுமல்லாது மற்ற எல்லா பாடங்களிலும் உள்ள சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள். இப்படி கீதாவிடம் ‘டியூஷன்’ ஆரம்பித்த பின்னர், வகுப்பில் பின் தங்கியிருந்த அவள் நன்கு முன்னேற ஆரம்பித்தாள். கீதாவுக்கு அந்த வீட்டில் அதிக வேலைகள் கிடையாது. சமையலை அவளது நாத்தனார் கவனித்துக் கொண்டாள். மற்ற வீட்டு வேலைகளுக்கு ஒரு வேலைக்காரி தினமும் வந்து கொண்டிருந்தாள். அதனால் தன்னுடைய பொழுதை அனுவுக்கு டியூஷன் எடுப்பதில் கழித்து வந்தாள்.

கல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆனா பின்னரும், அவளது கணவன் பாஸ்கர்
ஆபீசுக்கு செல்ல வில்லை. அதை பற்றிக் கேட்ட பொழுது இன்னும் ஒரு மாதம்
லீவு எடுத்துக் கொண்டு விட்டதாக கூறினான். சில நாட்கள் கழித்து பாஸ்கரின்
அக்கா கீதாவிடம் “நீ வீட்டில் சும்மாதானே இருக்கிறாய். நாளையிலிருந்து
வேலைக்காரியை வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். நீயே வீட்டு வேலை
எல்லாம் பார்த்துக்கொள்” என்றாள். மெதுவாக, தனக்கு உடல் நலம் சரியில்லை என்று நாடகம் ஆடி, சமையல் வேலையையும் கீதாவிடமே ஒப்படைத்தாள்.
இதனால் உட்காரக் கூட நேரம் இல்லாமல் கீதாவுக்கு நாள் முழுவதும் வேலை
இருந்து கொண்டே இருந்தது. அத்தனை வேலைகளையும் அவள் முகம்
சுளிக்காமல் செய்து வந்தாள். பாஸ்கரும் அவனது அக்காவும் அடிக்கடி வெளியே
சென்று வந்தனர் – sumai thaangi kadhai.

அதிர்ந்து போனாள் கீதா

கல்யாணம் ஆன புதிதில் பாஸ்கர் கீதாவிடம் ஆசையுடன் இருந்தாலும், நாட்கள்
செல்லச் செல்ல அவனுடைய செயல்களும் வார்த்தைகளும் மெதுவாக மாற
ஆரம்பித்தன. கீதாவின் நிறத்தை பற்றி குறை கூறுவது மட்டுமல்லாமல் அவளை
மனைவியாக பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கிறது என்றும் அவளை வீடு
வேலைகள் செய்வதற்க்கு மட்டுமே அழைத்து வந்ததாகவும் கூற தொடங்கினான். அதிர்ந்து போனாள் கீதா. அதுமட்டுமல்லாமல், அவள் வேலைக்கு போகவேண்டும்.

இல்லையென்றால் அவளது தந்தையிடம் கேட்டு பணம் வாங்கி கொடுக்க
வேண்டும் என்று துன்புறுத்தத் தொடங்கினான். இதனிடையே அனுவின் முன்னேற்றத்தைக் கண்டு அவளுடைய தோழிகள் சிலரும் கீதாவிடம் டியூஷன் படிக்க வரத் தொடங்கினர். அதனால் வந்து கொண்டிருந்த வருமானம் கீதாவுக்கு தேவைப்பட்டது. ஏனென்றால் வீட்டு வேலைகள் அனைத்தும் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதனால் வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் கீதாவே வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

பாஸ்கரையும் அவனது அக்காவையும் பார்க்கக் கூடாத நிலையில்..

பாஸ்கருக்கு வேலை எதுவுமே கிடையாது என்ற உண்மையை கீதா உணர ஆரம்பித்தாள். அது மட்டுமல்லாது அனுவின் அப்பா அனுப்பும் பணத்தில் மட்டும் தான் குடும்பம் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அவள் புரிந்து கொண்டாள். எனவே பாஸ்கருக்கு தேவையான பணத்தை சம்பாதித்து கொடுக்கவும், வீட்டு வேலைகள் எல்லாம் செய்யவும் ஒரு ஆள் தேவைப் பட்டிருக்கிறது. அதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்தாள். இதற்குள் மேலும் இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு நாள் மதியம் மூன்று மணி அளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே வந்த கீதா, வீட்டுக்கு தேவையான பொருளெல்லாம் வாங்கி விட்டு, அணுவையும் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

அப்பொழுது, பாஸ்கரையும் அவனது அக்காவையும் பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த கீதா, அப்படியே உறைந்து போனாள். அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பது அவளுக்கு புரிய ஆரம்பித்தது.

அப்படியே அனுவையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். எங்கே போவது? அனுவை கூட்டிக்கொண்டு கோவிலில் சென்று அமர்ந்தாள். சற்று நேரம் யோசித்த பிறகு, தன் தந்தையிடம் இந்த விஷயத்தை கூறினால் அதிர்ச்சியில் அவர் உயிரையே விட்டாலும் விட்டு விடுவார். அதனால் நிதானமாக முடிவெடுத்து அந்த வீட்டை விட்டு எப்படியும் வெளியேறி விட வேண்டும் அன்று அவள் முடிவு செய்தாள். ஒரு தீர்மானத்திற்கு வந்த பிறகு மனசு சற்றே லேசானது மாதிரி இருந்தது. அனுவை கூட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினாள்.

இடைவேளைக்கு பிறகு – பாகம் 2 ல் தொடரும்….

– அனுமாலா சென்னை

You may also like...

9 Responses

  1. R. Brinda says:

    பெண்ணுக்குக் கல்யாணம் செய்யும் பொழுது எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கிறது? இன்னும் இந்த மாதிரி மனசாட்சி இல்லாத மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்? கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

  2. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

    அருமையான கதைக்களம் அடுத்தது என்ன என்று சுவாரசியமாக காத்திருக்க வைத்திருக்கிறார் படைப்பாளி வாழ்த்துக்கள்.

  3. உஷாமுத்துராமன் says:

    சுமை தாங்கி என்ற உண்மை கதையின் பாகம் ஒன்றை படித்ததுமே தேகம் சிலிர்த்தது. அடி மேல் அடி வாங்கிய கீதாவின் அடுத்த இடி எப்படி சுமையாக இருக்க போகிறதோ என்ற நினைப்பு வந்தவுடன் கண்ணில் நீர் கோர்த்து.

  4. Kavi devika says:

    நம்முள் சுமக்கும் பல சுமைகளை எழுத்துக்ளால் எழுதி இறக்கி வைத்த கதையாசிரியருக்கு வாழ்த்துகள்

  5. Pavithra says:

    Semaya iruku but epadi suspence vachitingalea bro? Next part epo varum

  6. கதை என்றாலே மனம் கனக்கிறது..இது உண்மை கதையெனும் போதும் மனம் பதைபதைக்கிறது…இதைவிட கீதா தந்தைக்கு மகளாய் வாழ்ந்திருக்கலாம்..என தோன்றுகிறது..

  7. Nithyalakshmi says:

    நம்மில் நிறைய சுமைத் தாங்கிகள் இருக்க தான் செய்கிறார்கள்..

  8. Sangeetha Siva says:

    நம்மில் நிறைய சுமைத் தாங்கிகள் இருக்க தான் செய்கிறார்கள்..

  9. ராஜகுமாரி போருர் says:

    Geeta anusaar pavam