வா!வா! அன்பே! – சிறுகதை

கோவை மாநகரில், பீளமேடு பகுதியில், கணவன்-மனைவி இருவரையும் சுற்றி, பத்திரிக்கையாளர்கள், ஊடகங்கள் அனைவரும் சுற்றி புகைப்படம் எடுக்கின்றனர். பேட்டிகள் எடுக்கின்றனர். ஏனென்றால், கணவன் மற்றும் மனைவி இருவரும், இந்திய குடிமைப் பணி தேர்வான, ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ்
தேர்வில், மாபெரும் வெற்றி மற்றும் தேர்ச்சி பெற்றுள்ளனர் – neerodai sirukathai

கணவன் பெயர் விவேக். மனைவி பெயர் மதுமிதா. இருவருக்கும், ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவனின் பெயர் ரோகித்.

ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், இருவரையும், புகைப்படம் மற்றும் பேட்டி எடுக்கும்பொழுது, தங்கள் மகன் ரோகித்தோடு, சேர்ந்து நிற்கின்றனர். விவேக், ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் தேர்வில், அனைத்து இந்திய அளவில், ஐந்தாவது இடமும். தமிழ்நாடு மாநில அளவில், இரண்டாவது இடம் பெற்றார். மதுமிதா, ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் தேர்வில், அனைத்து இந்திய அளவில், நான்காவது இடமும். தமிழ்நாடு மாநில அளவில், முதல் இடம் பெற்றார்

இருவரும், பேட்டியளிக்கும்பொழுது “சோதனை இல்லாமல், ஒரு சாதனை இல்லை. வலி இல்லாமல், ஒரு வெற்றி இல்லை. நிறைய சோதனைகளை
சந்திச்சி, நிறைய வலிகளை, கஷ்டங்களை அனுபவிச்சு தான், நாங்க உங்க முன்னாடி, நின்னிட்டு இருக்கோம். வாழ்க்கையில் தோல்விகள், சோதனைகள், வலிகள், வேதனைகள் வர தான் செய்யும். அதை கண்டு, நாம மனசு உடைஞ்சி போகக்கூடாது, தளரக்கூடாது. வேடிக்கை பார்க்கிறவனை விட, முயற்சி செய்து தோல்வி அடைகிறவன், அதுக்கு எவ்வளவோ மேல். மறுபடியும், மறுபடியும், நீங்க வெற்றி பெற வரைக்கும், விடா முயற்சி செஞ்சிகிட்டே இருங்க! ஒரு நாள், வெற்றி உங்கள் வசம் ஆகும். அந்த வானம், உங்கள் வசம் ஆகும். விடா முயற்சியை, என்றைக்கும் கைவிடாதீங்க!” என்று பத்திரிக்கையாளர்கள், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்

பிறகு “எங்களை பற்றி சொல்லனும்னா!” என்று பேச ஆரம்பிக்கிறார்கள் (Flashback ஆரம்பிக்கிறது. கதை பின்னோக்கி, கடந்த காலத்துக்கு செல்கிறது) – neerodai sirukathai

7 வருடங்களுக்கு முன்பு………
விவேக் மற்றும் மதுமிதா, இருவரும், பள்ளி காலத்திலிருந்து உயிர் நண்பர்கள். இவர்களுக்கு, வயது இப்பொழுது 17. விவேக், மதுமிதாவின் வீட்டிற்கு சென்று, குழுவாக படிப்பதும். மற்றும், மதுமிதா, விவேக்கின் வீட்டிற்கு சென்று, குழுவாக படிப்பதும், வழக்கமாக வைத்துள்ளனர். இருவரும், ஒருவரின் ஒருவர் வீட்டிற்கு சென்று, படிப்பது, வழக்கமாக வைத்துள்ளனர். இருவரும், பள்ளி படிப்பை முடித்துவிட்டு, ஒன்றாக, கோவை மாநகரில் உள்ள, கலை கல்லூரி சாலையில், அமைந்துள்ள அரசு கலை கல்லூரியில், சேர்ந்து பி.காம் படிப்பை, படிக்கின்றனர். இருவருக்கும், நட்பில் நெருக்கம் ஏற்படுகிறது. இது, நாளடைவில் காதலாக மலர்கிறது.

இருவரும், தங்கள் காதலை, பெற்றோர்களிடம் தெரிவிக்கின்றனர். ஆனால், இருவரின் வீட்டில், இவர்கள் காதலுக்கு, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விவேக்கின் வீட்டிலும், மதுமிதாவின் வீட்டிலும் “நாங்க, அப்பவே நினைச்சோம்! நெருங்கி பழகும்பொழுதே, இது காதலா வளரப்போகுதுன்னு! இரண்டு பேரும், பிரச்சனையை கொண்டு வரப்போறாங்கன்னு. நினைச்சோம்! அப்படியே நடந்திருச்சி! இரண்டு பேரும், ஒருத்தர் மேல ஒருத்தர், வெச்சி இருக்கிற காதலை மறந்திடுங்க. ஒருத்தரோட வீட்டுக்கு, இன்னொருத்தர் போகிறது, இதோட நிறுத்திக்கோங்க. இல்லைனா, காதலை மறக்க முடியாது, கைவிட முடியாது-னா! எங்களை மறந்திடுங்க! நாங்களும், உங்க இரண்டு பேரையும் தலை மூழ்கிடுறோம்” என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்

2 வருடங்கள் கழித்து, விவேக் மற்றும் மதுமிதா, இருவருக்கும் வயது 19. பி.காம், இறுதி ஆண்டு படிக்கின்றனர். ரகசியமாக, சார் பதிவாளர் அலுவுலகம் சென்று, தங்கள் திருமணத்தை பதிவு செய்கின்றனர். ரகசிய திருமணம் செய்து கொள்கின்றனர்.

மாலையும், கழுத்துமாக, திருமண கோலத்தில், விவேக் மற்றும் மதுமிதா, இருவரும், தங்கள் பெற்றோர்கள் வீட்டின் முன்பு நிற்கின்றனர். பெற்றோர்கள், இருவரையும், வீட்டில் சேர்க்க மறுக்கின்றனர். வந்த வழியாகவே திருப்பி அனுப்புகின்றனர். இருவரும், வாடகை வீடு அமையும் வரை, தற்காலிகமாக, விவேக்கின் தாய் மாமா வீட்டில், தங்குகின்றனர். விவேக்கின் தாய் மாமா, இருவருக்கும், தனது வீட்டில் அடைக்கலம் தருகிறார்.

திருமணம் ஆன, 1 வாரம் கழித்து, விவேக் மற்றும் மதுமிதா, இருவரும், கல்லூரிக்கு செல்கின்றனர். அப்பொழுது, 5 பேர் கொண்ட மாணவர்கள் கோஷ்டி ஒன்று, விவேக் மற்றும் மதுமிதாவை “மச்சி! பாருடா! ஒரு ஐடமை, எங்கலிருந்தோ, தள்ளிட்டு வந்துட்டான். நல்லா புகுந்து விளையாடுறான்” என்று கேலி செய்கின்றனர். இதை கேள்விப்படும் விவேக், அவர்களை “வேண்டாம்! நாங்க பாத்திக்கு, சிவனே-னு கிடக்கிறோம். கேலி பண்றது, வம்பு பண்றது, நிறுத்திக்கோங்க! நான் ஓரளவுக்கு தான், பொறுமையா இருப்பேன். பொறுமையை இழந்துட்டேன்! அப்புறம், நான் மனுஷனா இருக்கமாட்டேன்!” என்று
அவர்களை எச்சரிக்கிறான். பிறகு, அந்த கோஷ்டியில், கோபப்படும் ஒரு மாணவன் “என்னடா பண்ணுவ?” என்று விவேக்கிடம் கேட்கிறான் விவேக், அவனை கன்னத்தில் ஒரு அரை விடுகிறான். பிறகு, இது பெரிய கோஷ்டி மோதலாக, மாணவர்கள் இடையே மாறுகிறது, வளர்கிறது.

விவேக்கிற்கு, ஆதரவாக, ஒரு சில மாணவர்கள், விவேக்குடன் சேர்ந்து அவர்களை தாக்குகின்றனர். பதிலுக்கு, இவர்களும் திருப்பி தாக்க. ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டு, கல்லூரியே கலவர பூமியாக மாறுகிறது. இந்த மோதலை, கேள்விப்படும் கல்லூரி முதல்வர், களத்திற்கு வந்து மாணவர்கள் மோதலை, தடுத்து நிறுத்துகிறார். மாணவர்கள், அனைவரையும் தன் அறைக்கு அழைத்து “நீங்கள் அனைவரும் மாணவர்களா? ரௌடிகளா? நீங்கள் அனைவரும் படிக்க வந்தீர்களா? அல்லது ரௌடிதனம் செய்ய வந்தீர்களா? இப்படி மோசமாக நடந்து கொள்கிறீர்கள். அடுத்த தடவை, இதுபோல், அனைவரும் சண்டை போட்டுகொண்டு, கல்லூரியில் வன்முறை செய்தால், அனைவரையும் கல்லூரியை விட்டு, நீக்கி விடுவேன்! ஜாக்கிரதை!” என்று திட்டி, எச்சரிக்கை செய்து, அனுப்புகிறார் கல்லூரி முதல்வர்

இதன் பிறகு, விவேக், மதுமிதாவிடம் “ஒன்றும் கவலைப்படாதே! உனக்கு, நான் துணையாக இருக்கிறேன்!” என்று ஆறுதலாக பேசுகிறான் அதன் பிறகு, விவேக் மற்றும் மதுமிதா, நாயைப் போல், பல நாட்களாக, சுற்றி சுற்றி அலைகின்றனர். இறுதியில், இருவருக்கும், தங்குவதற்கு ஒரு வாடகை வீடு கிடைக்கிறது. இருவரும், கல்லூரி இல்லாத மற்ற நேரத்தில், பகுதி நேரத்தில், தினமும் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கின்றனர்

பனிக்கூழ்(Ice Cream), மிட்டாய் விற்கின்றனர். மற்றும் எலுமிச்சை பழ பானம், சோடா வியாபாரம் செய்கின்றனர். வியாபாரத்தில் வரும் வருமானத்தை வைத்து, இருவரும், மாதம் மாதம் வாடகை பணத்தை செலுத்துகின்றனர். 1 வருடம் கழித்து, விவேக் மற்றும் மதுமிதா, இருவருக்கும் வயது 20. இருவரும், பி.காம் பட்டப்படிப்பை, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முடிக்கின்றனர். இளங்கலை பட்டதாரிகள் ஆகின்றனர். மதுமிதா கர்ப்பம் ஆகிறாள்
1 வருடம் கழித்து, விவேக் மற்றும் மதுமிதா இருவரும், அம்மா மற்றும் அப்பா ஆகின்றனர். ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுக்கின்றனர். அதற்கு “ரோகித்” என்று பெயர் சூட்டுகின்றனர். இருவரும், தொலை தூர கல்வியில், எம்.காம் படிக்க ஆரம்பிக்கின்றனர்.

ஒரு பக்கம், தன் வருமானத்திற்காக வியாபாரம் செய்கின்றனர். வழக்கம் போல், பனிக்கூழ்(Ice Cream), மிட்டாய் வியாபாரம் செய்கின்றனர். மற்றும்
எலுமிச்சை பழ பணம், சோடா வியாபாரம் செய்கின்றனர். மறுபக்கம், தொலை தூர கல்வியில், எம்.காம் படிக்கின்றனர். 2 வருடங்கள் கழித்து, இப்பொழுது, விவேக் மற்றும் மதுமிதா, இருவருக்கும், வயது 22. எம்.காம் படிப்பை, தொலை தூர கல்வியில், வெற்றிகரமாக முடிக்கின்றனர். இதற்கிடையில், தங்களின் கைக்குழந்தை ரோகித்தையும் கவனித்து கொள்கின்றனர். அதன் பிறகு, வியாபாரம் செய்து சம்பாதித்த பணத்தில், விவேக் மற்றும் மதுமிதா, இருவரும், ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் பயிற்சி நிலையத்தில் சேருகிறார்கள். ஒரு பக்கம், ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு, நன்றாக
படிக்கின்றனர். நன்றாக தயாராகி கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், தங்களின் கைக்குழந்தை ரோகித்தையும், கவனித்து கொள்கின்றனர்.

2 வருடங்கள் கழித்து, விவேக் மற்றும் மதுமிதா இருவருக்கும் வயது 24. அந்த நாள் வந்துவிட்டது. அனைவரும், எதிர்பார்த்த ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் தேர்வை, இருவரும் எழுதுகிறார்கள். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வில், தேர்ச்சி பெற்று, மாபெரும் வெற்றி பெறுகிறார்கள். அதன் பிறகு, அனைவரும், எதிர்பார்த்த விறுவிறுப்பான, இறுதி சுற்றான, நேர்முகத் தேர்வு வருகிறது. புது டெல்லியில் உள்ள, ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அலுவுலகத்தில் நடக்கிறது. விவேக் மற்றும் மதுமிதா, தங்கள் செயல்திறனை நன்றாக வெளிப்படுத்துகின்றனர். எல்லாம் கேள்விகளுக்கும், நன்றாக, சாதுர்யமாக பதில் அளிக்கின்றனர். அதன் பிறகு, விவேக் மற்றும் மதுமிதா, இருவரின் திறமையை கண்டு வியக்கும் தேர்வாளர்கள், அவர்களிடம் “எந்த ஊரில், உங்களுக்கு பணி நியமனம் வேண்டும்? எந்த பிரிவில், உங்களுக்கு பணி வேண்டும்? ஐ.ஏ.எஸ்-ஆ? ஐ.பி.எஸ்-ஆ?” என்று கேட்கிறார்கள். அதற்கு, விவேக் மற்றும் மதுமிதா “எனக்கு ஐ.ஏ.எஸ் தான் வேண்டும். என் பிறந்த ஊரான, கோவையில், எனக்கு பணி நியமனம் வேண்டும்!” என்று பதில் அளிக்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் தேர்வு முடிவுகள், வெளியிடப்படுகின்றன. கணவர் விவேக், ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் தேர்வில், அனைத்து இந்திய அளவில், ஐந்தாவது இடமும். தமிழ்நாடு மாநில அளவில், இரண்டாவது இடம் பெறுகிறார். மனைவி மதுமிதா, ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் தேர்வில், அனைத்து இந்திய அளவில், நான்காவது இடமும். தமிழ்நாடு மாநில அளவில், முதல் இடம் பெறுகிறார்
(Flashback நிறைவடைகிறது)

கணவர் விவேக் மற்றும் மனைவி மதுமிதா, மகிழ்ச்சியில், தங்கள் மகன் ரோகித்தை, தூக்கி-தூக்கி கொஞ்சுகின்றனர். ரோகித்திற்கு, இப்பொழுது வயது 3. கணவர் விவேக்கும், மனைவி மதுமிதாவும், ஒருவரை ஒருவர் நன்றாக கட்டிப்பிடிக்கின்றனர், முத்தம் அளிக்கின்றனர். அப்பொழுது விவேக், மதுமிதாவை பார்த்து “செல்லம்! டார்லிங்! நாம சாதிச்சிட்டோம். நாம காதல்-ல ஜெயிச்சிட்டோம்! வாழ்க்கையில கூட, ஜெயிச்சி காட்டிட்டோம்! நம்ம தெய்வீக காதல், காதலர்களுக்கு எல்லாம் முன் மாதிரி. ஆனால், இதெல்லாம் பார்க்க, நம்ம அம்மா-அப்பாக்கு கொடுப்பனை இல்லை!” என்று சொல்லி, ஆனந்த கண்ணீரில் அழுகிறார் மதுமிதா, விவேக்கை பார்த்து “ஆமா செல்லம்! டார்லிங்! நாம வாழ்க்கை, காதல் இரண்டுலயும், ஜெயிச்சிட்டோம்! இதெல்லாம், பார்க்க நம்ம அம்மா- அப்பாக்கு கொடுப்பனை இல்லை” என்று சொல்லி, அவரும் ஆனந்த கண்ணீரில் அழுகிறார்

விவேக்கின் தாய் மாமா மற்றும் அத்தை, இதையெல்லாம், கேள்விப்பட்டு செல்கின்றனர். விவேக்கை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு பாராட்டுகின்றனர்.
“மாப்பிள்ளை! கலக்கிட்ட! பிச்சி தள்ளிட்ட! தூள் கிளப்பிட்ட!” என்று சொல்கின்றனர். இந்த காட்சிகள் எல்லாம், ஊடகங்கள் பத்திரிக்கையாளர்கள், புகைப்படம் எடுத்து, கேமராவில் பதிவு செய்து, மகிழ்கின்றனர். முதலமைச்சர், ஆளுநர் மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள், விவேக் மற்றும் மதுமிதாவை, நேரில் அழைத்து பாராட்டுகின்றனர். விவேக் மற்றும் மதுமிதா, மகிழ்ச்சி மற்றும் இன்ப மழையில் நனைகின்றனர்

விவேக்கின் பெற்றோர் மற்றும் மதுமிதாவின் பெற்றோர், தொலைக்காட்சியில், விவேக் மற்றும் மதுமிதாவிற்கு, பாராட்டுகள் குவியும், இந்த காட்சிகளை பார்த்து, கண்ணீர் விட்டு வேதனைப்படுகின்றனர். அடுத்த நாள், விவேக் மற்றும் மதுமிதாவை, பார்க்க செல்கின்றனர். இருவரையும், மன்னித்து ஏற்றுக்கொள்கின்றனர். ஒருவழியாக, சமரசம் ஆகிவிடுகின்றனர். இருவரையும், கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, ஆனந்த கண்ணீரில் அழுகின்றனர்
விவேக்கின் பெற்றோர், விவேக்கை பார்த்து. மற்றும் மதுமிதாவின் பெற்றோர், மதுமிதாவை பார்த்து “எங்களை மன்னிச்சுடு டா, தங்கம்! உன்னை, ரொம்ப புண்படுத்தி, காயப்படுதித்தோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு! உன்னை நினைச்சி பெருமை படுறோம்!” என்று சொல்லி, ஆனந்த கண்ணீரில் அழுகின்றனர்
3 வருடங்கள் கழித்து……..
2 வருடங்கள், உத்தராகண்ட் மாநிலம், முசோரியில் உள்ள, லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனத்தில், ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்த பிறகு, மதுமிதா, கோவை மாவட்ட ஆட்சியராகவும். விவேக், திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும், பதவி ஏற்கின்றனர். இருவரும், பக்கத்து-பக்கத்து ஊர்களில், பணியமர்த்தப்படுகின்றனர். இப்பொழுது, ரோகித்திற்கு வயது 6. பிப்ரவரி 14 அன்று, ஒரு காதலர் தின விழாவில், விவேக் மற்றும் மதுமிதாவிற்கு, கோவையில் உள்ள, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் “சிறந்த தம்பதியினர் விருதை” அளித்து கௌரவிக்கிறது. இதை, விழாவில் கலந்து கொண்ட, விவேக்கின் பெற்றோர் மற்றும் மதுமிதாவின் பெற்றோர், பாராட்டி ரசிக்கின்றனர்.

இருவரும், ஒரே காரில் பயணிக்கின்றனர். அலுவுலகத்தில், பணி முடித்துவிட்டு, காரை விட்டு இறங்கி, தங்கள் மகன் ரோகித்தோடு சேர்ந்து, ராஜநடை நடக்கின்றனர். இவர்களோடு, விவேக்கின் பெற்றோரும், மதுமிதாவின் பெற்றோரும், ராஜநடை இணைந்து நடக்கின்றனர்.

– மனோஜ் குமார்

You may also like...