கருப்பரிசி பொங்கல்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரும்பு சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி பொங்கல் – karuppu kavuni arisi pongal
தேவையான பொருட்கள்
கருப்பு அரிசி – 250 gm
வெல்லம் – 500 gm
தேங்காய் – அரை மூடி
ஏலக்காய் -3
முந்திரி (அ) பாதாம் – 10 gm.
நெய். – 50 gm.
செய்முறை
கருப்பு அரிசியை முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். அடுத்த நாள் காலை அந்த அரிசியை கழுவி குக்கரில் ஆறு ஏழு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். நன்கு குழைந்திருக்கும் அரிசியை மீண்டும். கரண்டியால் மசித்து இதனுடன் பால் எடுக்கப்பட்டுள்ள தேங்காயைச் சேர்க்கவும். மிதமான சூட்டில் அதை கிளறவும்.
அதனுடன் பொடித்து வைக்கப்பட்டுள்ள வெல்லத்தை சேர்த்து கிளறவும். வெல்லம் நன்கு கரைந்து வரும் போது ஏலக்காயை தட்டி அதில் சேர்க்கவும். இறுதியாக நெய்யில் வறுக்கப்பட்ட பாதாம் முந்திரிகளை சோ்க்கவும் – karuppu kavuni arisi pongal.
நல்ல ஆரோக்கியம் நிறைந்த கருப்பரிசி பொங்கல் தயார்.
குறிப்பு: கடையில் கவுனி அரிசி என்று கேட்டு வாங்கவும்.
இந்த பொங்கலில் நிறைந்துள்ள சத்துக்கள்
- இரும்புச்சத்து அதிகம்
- இரத்த விருத்திக்கு உகந்தது.
- எதிர்ப்புச் சக்தி கூடும்.
- நீரிழிவு நோய் மற்றும்
- இரத்தக்கொதிப்பை சீராக வைக்க உதவும்.
– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.
கருப்பு கவுனியின் பயன்கள்
உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகக்கிறது.
உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.
நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..
தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.
உயிர்ச்சத்து (Vitamin) பீ/ ஈ நிறைந்தது.
சத்தான சுவையான பொங்கல்
மிகவும் சத்து நிறைந்தது.கவுனி அரிசியில் செய்முறைகள் அதிகம் யாருக்கும் தெரியாது.சுவையான ஒரு சிற்றுணவை அறிமுகப்படுத்திய சகோதரி ஏஞ்சலின் கமலாவிற்கு நன்றிகள் பல
பயனுள்ள சத்தான உணவு செய்முறைக்கு நன்றி..
நன்றிகள் பல