வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி
பயன்கள் (மருத்துவ குறிப்புகள்)
கர்ப்பிணி பெண்கள் வாரம் ஒரு முறையாவது வாழைப்பூவில் பொறியல், வடை அல்லது கூட்டு சமைத்து சாப்பிடுதல் நல்லது. வாழைப்பூவை அன்றாடம் சேர்த்துக்கொண்டால், அல்சர் பிரச்னை வராது மேலும் மலச்சிக்கல் தீரும். கண்களுக்கும் மக்களுக்கும் ஆரோக்கியம் தரும். பொட்டாசியம் சத்து உள்ளதால் இதயத்திற்கு நல்லது – banana flower recipe tamil.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் – தேவையான அளவு
- கருவேப்பிலை – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- காய்ந்த மிளகாய் – தேவையான அளவு
- தேங்காய் துருவல் – தேவையான அளவு
சுத்தம் செய்வது எப்படி?
வாழைப்பூ சமைப்பதற்கு ஏற்றவாறு எப்படி சுத்தம் செய்வது அதாவது பிரித்து எடுத்து பக்குவப்படுத்துவது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் கண்டு பயன் பெறுங்கள்.
குறிப்பு: வாழைப்பூவில் நடுவில் தடிமனாக ஒரு நரம்புபோலவும், கீழே அகலமாக குட்டையாக உள்ள இதழ்களை பிரித்து தவிர்க்க வேண்டும். அது எளிதில் வேகாது மேலும் வயிற்று வலி உண்டாக்கும், ஆகவே அவை இரண்டையும் தவிர்த்து சமைக்க வேண்டும் – banana flower recipe tamil.
செய்முறை
வாழைப்பூவை சமைக்கும் முன் நீரில் அலசிக்கொள்ளவேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக்கொண்டு லேசான செந்நிறம் வந்தவுடன், நறுக்கி வைத்த வாழைப்பூவை சேர்த்து வதக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிறம் மாறும் அளவிற்கு வதக்கி, சரியான பக்குவத்தில் தண்ணீர் சேர்த்து வேக வைத்து, பிறகு துருவிய தேங்காய் சேர்த்து இறக்கி வைக்க வாழைப்பூ பொரியல் தயாராகிவிடும்.
வலையொளி (YouTube) காணொளி
இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு பயன்பெற – https://youtu.be/LBMxBHOaBVI
வாழைப்பூ பொரியல் செய்முறை மிகவும் எளிதாகவும் அருமையாகவும் இருக்கிறது. வாழைப்பூ-மருத்துவக் குணங்கள் நிறைய பெற்றது. பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனையை தீர்க்க வல்லது. வாழைப்பூவை நறுக்கும் போது அதை வெறும் நீரில் போடாமல் மோர் கலந்த நீரில் போட்டால் கருக்காது. அதேபோல நறுக்கும்போது தண்ணீரிலேயே சிறு பருப்பை ரெண்டு ஸ்பூன் அளவு போட்டு பொரியலுடன் சேர்த்து செய்தால் கசப்பும் தெரியாது .சுவையும் அருமையாக இருக்கும்.
பயனுள்ள தகவல். நறுக்கிய வாழைப்பூவைச் சிறிது சுண்ணாம்பு கலந்த நீரில் போட்டு வைத்தாலும் கறுத்துப் போகாது. நாம் வீட்டில் வெற்றிலை போடப் பயன்படுத்தும் சுண்ணாம்பு தான்.