வார ராசிபலன் ஆடி 11 – ஆடி 17

ஆடி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். ஆடி சிறப்பு மற்றும் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal july 26 – aug 01

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் ராகுபகவான் நன்மைகளை செய்வார். குடும்ப ஆரோக்கியம் நன்றாக அமையும், வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது, பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்புள்ளது. பணியாளர்கள் பணியில் சிறப்படைவார்கள். வியாபாரம் லாபகரமாக செயல்படும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நல்ல வெற்றி அடைவார்கள். விவசாயம் விரயத்தை எதிர்கொள்ளும். 
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்தல் நலம் பெறும். 


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் நிலவு வாய்ப்புள்ளது, பணவரவு நன்றாகவே அமையும், குடும்பத்தில் சுப செய்தி ஒன்று வந்து சேரும். எதிலும் நன்கு யோசனை செய்து நிதானத்துடன் செயல்படவும். பணியாளர்கள் கவனமாக இருந்து வரவும். வியாபாரத்தில் சுமாரான லாபமே அடையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் வருமானம் அதிகரிக்கும்.
வழிபாடு: தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தல் நல்லது.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் பகவானே நன்மைகள் செய்து வருவார். குடும்ப ஆரோக்கியம் நன்றாக அமையும், குடும்பத்தில் செல்வாக்கு உயரும், கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண நிகழ்ச்சிகள் நடைபெற பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பணியாளர்கள் நல்ல சிறப்பை அடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் வாழ்வின் உச்சம் பெறுவார்கள். விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மையே செய்வார். வீட்டில் பணவரவு நன்றாக அமையும், குடும்பத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. அண்டை வீட்டார் மத்தியில் பகைமை தீரும், உறவினர் வருகை நன்மை பயக்கும். பணியாளர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. பணவரவு தேவையை பூர்த்தி ஆகும், சகோதரர் வழியில் ஒற்றுமை நிலவும். பணியாளர்கள் சம்பள உயர்வைப் பெறுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கலைஞர்கள் அரசு உதவி பெறு வார்கள். மாணவர்கள் வெற்றியை குவிப்பார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் அடையும். 
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்து வருவார். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. எதிலும் நல்ல வருமானம் கிடைக்கப் பெறலாம். பணியாளர்கள் இடமாற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் உயரிய மதிப்பெண் பெறுவார்கள். விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
வழிவாடு: சனி பகவான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் கேதுபகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பத்தின் செல்வாக்கு உயர்வை பெறும், பணவரவு போதிய அளவு இருக்கும், எதிரிகள் உங்கள் வசம் சரண் அடைவார்கள். பகைவர்களின் சதி முறியடிக்கப்படும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. கலைஞர்கள் விரயத்தை எதிர் கொள்வார்கள். மாணவர்கள் பாக்கியசாலிகள் ஆவார்கள். விவசாயம் விரயத்தை எதிர்கொள்ளும்.
வழிவாடு: முருகப் பெருமான் வழிபாடு சாலச்சிறந்தது.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். சகோதர உறவு நன்றாக அமையும். உறவினர் வருகை நன்மை அளிக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது, கவனம் தேவை. கலைஞர்கள் உற்சாகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல கவனம் செலுத்தவும். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய பகவான் வழிபாடு செய்து வரவும். 


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்து வருவார். வெளிவட்டாரத்தில் பகைமை உருவாகலாம். சகோதர சகோதரி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். பணியாளர்கள் மேன்மையடைவார்கள். வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல உச்சம் அடைவார்கள். விவசாயம் நன்கு விரிவுபடுத்தப்படும்.
வழிபாடு: சனிபகவான் வழிபாடு செய்து வருதல் நல்லது.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சுக்கிரபகவான் அளப்பரிய நன்மைகளை செய்வார். குடும்பத்தில் ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உண்டு, புதிய சொத்து வாங்கும் எண்ணம் கூடிவரும். திருமணம் போன்ற சுப செய்தி ஒன்று வந்து சேரும். குடும்பத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் வருமானம் உயரும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுதல் நல்லது. விவசாயத்தில் குறைந்த வருமானமே பெற வாய்ப்புள்ளது. 
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்து வருவார். வீட்டில் ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் உயரும் குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் வந்து போகும். எதிரிகள் தங்கள் வசனம் சரண் அடைவார்கள். பணியாளர்கள் ஊதிய உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். மாணவர்கள் வெற்றி காண்பார்கள். விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் இலாபம் அடையலாம்.
வழிபாடு: நவக்கிரக வழிபாடு செய்து வருதல். 


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சனி பகவானே அளப்பரிய நன்மைகளை செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவியிடையே பேச்சை குறைக்கவும். உறவினர்கள் வருகை நன்மையே அடையும். குடும்பத்தில் பண வரவு போதிய அளவு இருக்கும். பணியாளர்கள் ஊதிய உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் சிறப்பாக அமையும். கலைஞர்கள் ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் உச்சத்தைத் தொடுவார்கள்.விவசாயத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கப் பெறலாம்.
வழிபாடு: நவகிரக வழிபாடு செய்வது நன்மை பயக்கும் – rasi rasi palangal july 26 – aug 01.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

3 Responses

  1. ராஜகுமாரி போருர் says:

    நல்லதே நடக்கட்டும்

  2. தி.வள்ளி says:

    கிரகங்கள் மாறி நன்மை நடந்தால் சரி

  3. R. Brinda says:

    நல்லதே நடக்க இறைவனை வேண்டுவோம்!