ஆடிப்பூரம் மற்றும் ஆடி மாத சிறப்பு

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும் – aadi pooram

இந்த ஆண்டு ஆடிபூராம் நாளை 24 ஜூலை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

aadi pooram

ஆடிப்பட்டம் தேடி விதை

ஆடி மாதத்தில்தான் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் சகல ஜீவராசிகளுக்கும் செழிப்பு உண்டாவதாக நம்பப்படுகிறது. “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பார்கள் இது பெயர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டது அல்ல. காம, குரோத, மத, லோப, மோக, மாச்சர்யத்தை களை பிடுங்கி எரிந்து “பக்தி” எனும் விதையை மனதில் விதைக்க வேண்டும் என்பது பொருள். ஆடி பிறந்ததுமே பண்டிகைகள் ஓடிவரும் என்பர்.

ஆடித்தபசு

“ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி” என்பார்கள். ஆண்டாள் அவதரித்த திருநட்சத்திரம் ஆடிப்பூரம், நம்மையெல்லாம் தாங்குகிற பூமாதேவி அவள் அவதரித்தது ஆடிப்பூரத்தில் தான். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததாக சொல்லப்படுகிறது திருவையாற்றில் “ஆடித்தபசு” என்பது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது – aadi pooram.

காவிரி பூப்பெய்திய நாள்

ஆடி பதினெட்டாம் பெருக்கு மிகவும் விசேஷமான நாளாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாமிரபரணி நீர் பெருக்கெடுத்து ஓடும் நாளாகும். காவிரி பூப்பெய்திய நாள் என்றும் போற்றப்படுகிறது. அன்று ஏராளமான பெண்கள் கருகமணி, காதோலை, காசு, புஷ்பம், வளையல் இவற்றை காவிரியில் விட்டு வழிபடுவார்கள். புது மணம் செய்து கொண்டவர்கள் தாலி பிரித்து கட்டுவார்கள்.

ஆனி முற்சாரல் | ஆடி அடைச்சாரல்

திருக்குற்றாலத்தில் மிகவும் விசேஷமான மாதம் இந்த ஆடி மாதம். “ஆனி முற்சாரல்”, “ஆடி அடைச்சாரல்” என்று மூலிகை நீரில் நனைய வரும் மக்கள் அதிகம். தொடர்ந்துவரும் பண்டிகைகளுக்கு தோரணம் கட்டி வரவேற்கும் மாதம் ஆடி மாதமே.

அம்மனுக்கு வளைகாப்பு

ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளையல் மாலை சாற்றி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுவது, அந்த அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவதாக நினைத்து, அதனால் அம்மன் நமக்கும் குழந்தை பாக்கியம் தரவேண்டும் என்று பெண்கள் வழிபடுவது சிறப்பு. அம்மன் வளையல் அணிய ஆசைப்பட்டதாக ஐதீகம் உள்ளது, அதனால் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபட்டால் நினைத்ததை அம்மன் செய்வார் என்பது அதீத நம்பிக்கை. ஒற்றைப்படை அல்லது 108 வளையல் அணிவித்து வழிபட்டு அதை கலந்துகொண்டோருக்கு கொடுத்து கொண்டாடுவது வழக்கம்.

செவிவழி வரலாறு

முன்னோரு காலத்தில் வளையல் விற்பவர், வளையல் விற்றுவரும் வழியில் தலைசுற்றல் ஏற்படவே அருகில் இருந்த ஆலயத்தின் முன் ஓய்வெடுக்க அமர்ந்து கண் அயர்ந்து சற்றுநேரம் உறங்கிவிட்டார். விழித்து பார்க்கையில் அம்மன் அனைத்து வலையல்களையும் அணிந்த காட்சியை பார்த்து அதிர்ந்தார். உடனே தோன்றிய அம்மன் நான் தான் வளையல் அணியும் ஆசையில் அணிந்துகொண்டேன் என்று கூறிய வரலாறு பின்னாளில் ஆடிப்பூர விழாவாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த கட்டுரைக்கு உதவிய ராஜகுமாரி மற்றும் செல்வி அவர்களுக்கு நன்றி.

You may also like...

7 Responses

  1. R. Brinda says:

    ஆண்டாள் திருவடிகளே சரணம்!

  2. Pavithra says:

    Arumayana pathivu, thanks for remembering aadi pooram festival

  3. Malathi Narayan says:

    ஆடிப்பூரம் அருமையான கட்டுரை
    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  4. Kasthuri says:

    பெண்களுக்கு பயனுள்ள தகவல்

  5. தி.வள்ளி says:

    ஆடி பூரம்..ஆண்டாள் அவதார திருநாள்..ஆடி பெருக்கு..விளக்கம் அருமை..பதிவிற்கு நன்றி

  6. நிர்மலா says:

    நல்ல விளக்கம்.

  7. Kavi devika says:

    ஆடி மாதத்தின் சிறப்பை விளக்கும் அருமை கட்டுரை.