என் மின்மினி (கதை பாகம் – 22)

சென்ற வாரம் நீ இவ்வளவு சொன்ன பிறகும் நான் உன்னைப்பற்றி கேட்கல அப்படினா நான் ஒரு மனுசனே இல்லை., அதனால இப்போ நீ சொல்லு நான் கேட்குறேன் என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-22.

en minmini kathai paagam serial

ம்ம் ஓகே சொல்றே என்றபடி சொல்ல ஆரம்பித்தாள் ஏஞ்சலின்.
எங்க ஊரு நாகர்கோயில் பக்கத்துல பச்சைப்பசேல்னு இருக்குற ஒரு அழகான கிராமம்.அங்கே மொத்தமாகவே பதினெட்டு வீடுகள்தான் இருக்கும்.எங்க வீடுதான் ரொம்ப பெரிய வீடு அப்படினு ஆச்சி,தாத்தா அடிக்கடி சொல்லுவாங்க. அது மட்டுமல்லாது எங்க குடும்பம்தான் ரொம்ப பெரியகுடும்பமும் கூட.

அப்பா கூட பிறந்தது ஏழு அண்ணன் தம்பிகள்.எல்லோரும் ஒரே வீட்டில் தான் ஒண்ணா ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.ஆனால் விதியின் பாதையில் மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் துக்கங்களாக மாற தொடங்கின.

ஆச்சி, தாத்தா மறைவுக்கு பிறகு குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியாக பேசுவது எல்லாம் குறைந்து அந்த பெரிய வீட்டை எப்படி பங்கிடுவது என்பது குறித்த சண்டைகளே அதிகம் அரங்கேற தொடங்கின. இதை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் அப்பாவும் அம்மாவும் இந்த வீடே வேண்டாம் நாம வேற எங்கேயாவது வீடு
பார்த்து குடியேறலாம் என்று வீட்டை விட்டு வெளியே வந்து பக்கத்துக்கு கிராமத்தில் ஒரு வாடகைவீட்டில் குடியேறினோம்.

கொஞ்ச நாள் கஷ்டம் எல்லாம் தெரியவில்லை.ஜாலியாக பள்ளி வேனில் ஏறி தம்பியுடன் பள்ளிச்செல்வது, அவனுடன் கைகோர்த்து கொண்டே ஓடியாடி விளையாடுவது போலவே என் விதியும் என் வாழ்க்கையில் விளையாடியது.

அப்பா பெரிய வீட்டில் வசதியாக வாழ்ந்து பழகியதால் கஷ்டமான வேலைகளை எல்லாம் செய்ய ரொம்ப சிரமப்பட்டார் வாழைத்தார்,குலை வாழைமரம் விற்கும் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.மாசத்துக்கு ஆயிரத்து எண்ணூறு ரூபாய் சம்பளம்.

வருமானம் பற்றாக்குறையால் நான் தனியார் இங்கிலீஸ் மீடியம் பள்ளியில் இருந்து அரசாங்க தமிழ்மீடியம்க்கு சேர்க்கப்பட்டேன்.தம்பி ஆம்பளபுள்ள அவன் இங்கிலீஸ் மீடியத்துல படிக்கட்டும் என்று அப்பா சொல்லவே சரினு கண்ணீருடன் தலைஆட்டி விட்டேன்.

இருவரும் கைகோர்த்து பள்ளிசென்ற காலமும் மாறி தனித்தனியாக எங்கள் பள்ளிப்பயணம் தொடர என் தம்பிக்கும் எனக்கும் உள்ள ஒரு அற்புதமான பாசப்பிணைப்பு அறுபட்டது போலே அன்று உணர ஆரம்பித்தேன் – en minmini thodar kadhai-22.

You may also like...

3 Responses

  1. R. Brinda says:

    வாழ்க்கையின் யதார்த்த நிலைமையைச் சொல்வது அருமையாக இருக்கிறது.

  2. தி.வள்ளி says:

    கதை அருமையாக செல்கிறது…மனம் கனக்கிறது…

  3. Rajakumari says:

    மின்மினி கதை மிகவும் பாவமாக இருக்கிறது