கவிதை போட்டி 2022_01 | மற்றும் போட்டி 2021_12 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-01

kavithai potti

கவிதை போட்டி 2021-12 முடிவுகள்

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
கவிஞர் சோமு சாவித்ரி
நெருப்புவிழிகள் சக்திவேலாயுதம்
கவிஞர் நித்யானரேஷ்

அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும்.


கவிதை போட்டி 12 அறிவிப்பு

 • மார்கழிக்கு விடை கொடுப்போம்
 • குயடியரசு இந்தியா
 • உழவர் திருநாள்
 • ஜல்லிக்கட்டு
 • திருவள்ளுவர் ஒரு பொக்கிஷம்
 • தைப்பூசம்
 • தை மகளை வரவேற்போம்
 • விரும்பிய தலைப்பு

தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெரும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-01. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

7 Responses

 1. Dr Jannathulla R says:

  #முதுமை

  அத்திமர தூணப்போல
  அத்தனையும் தாங்கி நிண்டேன்
  பொத்திவச்ச வாழ்க்கை என்ன
  போத்திக்கொள்ள வச்சுருச்சு

  தாய்மடியில் தவழ்ந்ததெல்லாம்
  தரை அடியா மாறிப்போச்சு
  தவமிருந்த வாழ்க்கை இப்போ
  தரிசு நெலமாயிருச்சு

  உண்ட சோறு செரிக்கலயே
  உறக்கம் வந்து சேரலயே
  உள்ளம் ஒன்ன தேடுனாலும் – அத
  உரக்க சொல்ல தோணலயே

  மூத்திரமும் போயிருது
  முழுச்சு நானும் இருக்கயில
  முடுஞ்சவர எழநெனச்சேன்
  முடியலயே முடியலயே

  திண்ட திட திரவம் எல்லாம்
  திடகழிவா வந்துசேர – அத
  திரும்ப திரும்ப சொல்லும் போது
  திசையறியா பறவையானேன்

  காலு கையி இழுத்துகிட்டு
  கட்டிலுல கெடக்கும் நேரம் – எங்
  கண்ணக்குழி தொட்டுபேசும்
  கண்ணீரின் கதையுமானேன்

  ஆசைப்பட்டு நானும் கேக்க – ஆயுள.,
  ஆண்டவனும் ஆக்கி வச்சான் – அது
  அவ்வளவு அவஸ்தையினு
  அப்ப எனக்கு புரியலயே

  என்னோட கஷ்டமெல்லாம் – நான்
  மண்ணோடு போகும்போது
  தன்னாலே மாறும்முன்னு
  என்ன தேத்த முடியலயே……….

 2. பழ வள்ளியப்பன் says:

  தை மகளை வரவேற்போம்

  மார்கழிக்கு விடை கொடுத்து
  இனிமையுடன் தையவளை வரவேற்போம்
  தைபிறக்கின்ற வேளையிலே
  குலவையிட்டு பொங்கல் வைப்போம்

  வந்தாரை கரம் கொடுத்து
  வாழ வைத்த பூமி இது
  தைபிறந்தால் மாற்றம் வரும்
  நன்மை செய்யும் சாமி இது

  பொங்கலுடன் தொடங்குதிந்த மாதம்
  இனியனைத்தும் பால் போல பொங்கி வரும் காலம்
  வேதனைகள் மறையும் இந்த நேரம்
  கவலையது சென்று விடும் தூரம்

  செங்கரும்பு சுவையுடனே ஆரம்பம்
  பச்சரிசி பொங்கலென்றால் தேனூறும்
  விதவிதமாய் காய்கறிகள் வரிசையில்
  உண்ண வேண்டாம் என்றுமதை தனிமையில்

  வாசலிலே கோலமிட்டு காத்திருந்தோம்
  தையவளை எதிர்பார்த்து மனதெல்லாம் பூத்திருந்தோம்
  இல்லம் நோக்கி வந்துவிடு திருமகளே
  இன்பம் அள்ளிஅள்ளித் தந்துவிடு பொன்மகளே

 3. S. V. Rangarajan says:

  தை மகளை வரவேற்போம்.
  பனிக்காலம் முடிந்து தமிழன் திருநாளாம்
  பொங்கல் ஆரம்பம் அதற்கு முன்
  பழையன கழிதலும் புதியன புகுதலும்
  போகிப் பண்டிகை முடிந்ததும்
  சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
  பொங்கல் கொரானா காணாமல் போகவும்
  ஒமக்ரான் வரும் முன்னரே
  தலை தெறிக்க அனுப்பி விடுவோம்.
  வரும் தமிழ் புத்தாண்டு சுபகிருதை வரவேற்க தயாராவோம்

 4. *உழவர் திருநாள்*
  உலகின் உயிர்நாடி உழவன்
  அவனே தொழில்கள் முதல்வன்
  ஏர் பின்னால் ஓடும் உலகம்
  உணவின்றி போனால் மடியும்
  உயிர்களை காக்கும் கடவுள்

  குழந்தைகள் போல கவனித்து
  பயிர்கள் சாகுபடி செய்வான்
  தேவையற்ற களைகள் எடுத்து
  குடிநீர் ஊற்றி தாகம் தீர்த்து
  உரங்கள் போட்டு வளர்த்து

  கண்போல் பாதுகாத்து
  விளைச்சல் ஆனதும் மகிழ்ந்து
  தானியங்கள் பிரித்து
  அழகாய் மூட்டைக்கட்டி
  விற்பனைக்கு அனுப்பும் தாய்

  தானியங்கள் பஞ்சு
  காய்கறி கனிகள் பூக்கள்
  விதவிதமாக விளைவித்து
  பசுமை புரட்சி
  உழவர்க்கு
  பொங்கல் நாளில் வாழ்த்துக்கள்

  எஸ் வீ ராகவன் சென்னை

 5. *தை மகளே வருக*

  பழையன கழிதல் போகி பண்டிகை/
  புதியன புகுதல் பொங்கல் பண்டிகை/
  மாடுகள் வாழ்ந்தும் மாட்டுப் பொங்கல்/
  உறவுகள் போற்றும் காணும் பொங்கல்/

  பச்சரிசி பால் களைந்து வைத்து/
  வேற்றுமை நீக்கி ஒற்றுமை சேர/

  பொங்கும் மங்கல பொங்கல் வரவேற்பு/
  வளமும் நலமும் மகிழ்ச்சி தரட்டும்/
  வயல்வெளிகளில் பயிர் வளர்ச்சி நிறையட்டும்/
  *அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/*

  எஸ் வீ ராகவன் சென்னை

 6. நித்யாநரேஷ் says:

  ‌தலைப்பு:தமிழும் நானும்

  ‌மடியில் ஆயிரம் பிள்ளைகள்
  ‌எனினும் ஏக்கம் கொண்ட
  ‌என்னிடம் பாசம் காட்டும்
  ‌விந்தை என்னவோ?
  ‌விட்டு விலகினால் உணர்கிறேன் உள்ளத்தில் ஏதோ நெருடல்….
  ‌உயிருள்ளவரை அவளே என் தேடல்….
  ‌நான் விழும்போதெல்லாம்
  ‌தன்னம்பிக்கை தந்தவள்….
  ‌முடக்க நினைப்பவர் முன்
  ‌முளைக்க செய்தவள்….
  ‌நித்தமும் அற்புதங்களை அள்ளித்தருபவள்…..
  ‌அவளை நீங்கிட என்
  ‌மனம் ஒப்புமோ!
  ‌அவளில்லாத இடத்தில் எனது
  ‌விழிகள் விடியலைக் காணுமோ!
  ‌முப்பிரிவிழும் தேர்ந்தவள்….
  ‌இம்மண்ணின் மூத்த மகள்….
  ‌வாடாத வண்ணமலர் அவள்…
  ‌இத்துனை எழில் கொண்டவள்
  ‌என் தமிழன்னையின்றி வேறு யாரோ?
  ‌அவள் வாழும் இடமெல்லாம்
  ‌என் பாதம் பதிப்பேன்….
  ‌மாண்டாலும் அவளது பெயர்
  ‌சொல்லிடவே மீண்டும்
  ‌தமிழ் மகளாய் பிறப்பேன்….

 7. பகீரதன் தனுசியா says:

  பத்து நிமிடம் குழந்தையைப் பார்ப்பதென்றால்-பித்து பிடித்து விடும் அனைவருக்கும்
  பத்து மாதம் வயிற்றில் சுமந்திட்டாள்
  முத்துப் போன்ற குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு அன்னை

  உயிரை அழிக்கும் இவ் உலகிலே
  உயிரை வழங்கும் உன்னதம்
  உனக்கு இன்றி வேறுண்டோ? அன்னையே

  கண்ணால் ஒரு போதும் காணாத் தெய்வத்தை கண்டம் விட்டு கண்டம் தாண்டி வணங்குகின்றனர்

  கண்முன்னே உள்ள கருணைத் தெய்வத்தை காலில் வீழ்த்தி ஏறி மிதித்து செல்கின்றனர்

  வலி என்றால் உயிர் போகிறது என்பார்கள்
  ஆனால் பிரசவ வலியில் மட்டுமே உயிர் வருகிறது
  ஆணிற்கு கிடைக்காத பாக்கியமாக
  பெண்ணினம் மட்டுமே பெற்று வந்த பரிசு
  தாய்மை

  ஓர் துளி இரத்தம் சிந்தி விட்டால் உடனே அழுவார்
  ஆனால் உடம்பில் உள்ள உதிரத்தை பாலாக்கி பாலூட்டி வளர்த்திடுவாள்

  நாம் எத்தனை கோயில் சென்று மனக்கவலை தீர்த்தாலும்
  மனக்கவலையைத் தராத இடம்
  தாயின் கருவறையே

  தாய் வாழும் இடம் கோயில்
  தாயே தெய்வம்
  தாயின் வார்த்தைகள் மந்திரம்
  தாயின் செயல் இறைவன் செயல்

  தன் தூக்கத்தை தொலைத்து
  நம் தூக்கத்திற்காக
  தாலாட்டு பாடிடும்
  அன்னையே

  இரத்தத்தில் தீர்த்தால் என்ன
  தியாகத்தில் ஈடாகுமா
  பெற்ற கடன் தீர்ப்பேன் என்றால்
  ஓர் ஜென்மம் போதாதம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *