என் மின்மினி (கதை பாகம் – 30)

சென்ற வாரம் மூக்கில் பொருத்தப்பட்ட மூச்சுகுழல்களும் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதர்காக குத்தப்பட்ட ஊசியும் கீழே கழன்று விழ கைகளில் இருந்து இரத்தம் துளி துளிகளாக கொட்ட தொடங்கியது – en minmini thodar kadhai-30.

en minmini kathai paagam serial

இரத்தம் சொட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆஸ்பத்திரி வாசலுக்கு ஓடி வந்தேன்.என்னை ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் கூட்டி வந்த இரண்டு அக்காகளும் அழுதபடி ஓடி வந்து என்னை பிடித்தனர்.

அக்கா என்ன ஆச்சு.அப்பா அம்மா எங்கே?தம்பியை எங்கே அக்கா.எனக்கு எல்லோரையும் இப்போ பாக்கணும்னு தோணுது.என்னை கூட்டிட்டு போங்க அக்கா என்றபடி மயங்கி விழுந்தேன். சிறிது நேரம் கழித்து கண்முழிச்சு பாத்தேன்.மீண்டும் அதே ஆஸ்பத்திரி படுக்கை.அதே நர்ஸ் என் முன்னாடி நின்றுகொண்டிருந்தாள்.நான் கண்விழித்து பார்க்கவும் வேகமாக அந்த அறையினை விட்டு வெளியே சென்று வாங்க அந்த பொண்ணு கண்ண முழிச்சுட்டா என்று வெளியே இருந்தவங்ககிட்டே போய் கூறினாள் அவள்.

வெளியே இருந்து என்னோட சித்தப்பாவும் எங்க அப்பா வேலை செய்த அரிசி ஆலையின் முதலாளியும் உள்ளே வந்தனர். என்னம்மா முழிச்சுட்டீயா.நேத்து என்னவோ உங்க அப்பன் அவ்ளோ பேசினான்.இன்னிக்கு திருடின துட்டை கூட திருப்பி கொடுக்க லாயக்கு இல்லாமல் குடும்பத்தோட பூச்சி மருந்தை குடிச்சு செத்துட்டான்.இப்போ நீ மட்டும் தான் மிச்சம்.இப்போ வாங்குன காசை யாரு தர போறாங்க.அவ்வளோதானா.., அது நாமம் தான் என்று ஏளனமாக பேச பேச எனக்கு கண்ணீரை அடக்க முடியாமல் அப்பா……என்று கதறி அழ ஆரம்பித்தேன்.

நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த நர்ஸ் வேகமாக டாக்டர் அறைக்கு சென்று நடந்து கொண்டிருப்பது அனைத்தையும் அவங்ககிட்டே கூறி டாக்டரை அழைத்து வந்தாள்.
அறையினுள் நுழைந்த டாக்டர் அங்கே நடந்துகொண்டிருப்பதை பார்த்து மிகுந்த கோபமடைந்தார்.இங்கே என்ன நடக்குது.இந்த ஆஸ்பத்திரியில் இருக்குற வரைக்கும் இந்த பொண்ணு என்னோட பாதுகாப்பில் இருக்குறவ.அதனால் உங்க நாட்டாமைதன பேச்சை எல்லாம் மூட்டை கட்டிக்கிட்டு வெளியே போங்க.இல்ல போலீஸுக்கு போன் பண்ண வேண்டியிருக்கும் என்று எச்சரித்தாள்.

ஒன்றும் பேச முடியாதவர்களாக அவர்கள் இருவரும் அந்த அறையினை விட்டு வெளியே சென்றனர். என் பக்கத்தில் வந்த டாக்டர்.பயப்படாதே நான் பாத்துக்குறேன் என்றபடி என் தலையினை கோதினாள். என்ன சொல்லுவது
என்று புரியாமல் எங்க அம்மா அப்பா தம்பி எல்லோரும் என்னை விட்டுட்டு இறந்து போய்ட்டாங்க டாக்டர்.நான் இப்போ யாரும் இல்லாமல் தனியாக நிக்குறேன் என்று அழ ஆரம்பித்தேன் – en minmini thodar kadhai-30

– அ.மு.பெருமாள்

பாகம் 31-ல் தொடரும்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    கதை உணர்ச்சிபூர்வமாக எதார்த்தமாக நகர்கிறது …விறுவிறுப்பாக போகிறது …ஆசிரியருக்கு வாழ்த்துகள்