என் மின்மினி (கதை பாகம் – 51)

சென்ற வாரம் சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – en minmini thodar kadhai-51

50 வாரம் கடந்து

பயணம் செல்ல செல்ல டூவீலரின் சத்தம் அதிகமாகி கொண்டே சென்றது. ஐய்யோ இது என்ன இவ்வளவு சவுண்ட் போடுது. தலையே வலிக்குது என்று சலித்தவாறு தன் காதுகளை இறுக்கமாக மூடி கொண்டாள் ஏஞ்சலின்…

பதிலுக்கு சீண்டினாள்

என்ன ஆச்சு ஏன் இவ்வளவு அமைதியாக வரே. தனியாக போவது போலே இருக்கு.ஏதாவது பேசிக்கிட்டே வாயே என்று சும்மா இருந்தவளை வம்பிழுத்தான் பிரஜின். நீ என்ன நெனெச்சுட்டு இருக்கே.பேசுனா பேசறேனு சொல்றே. அமைதியா இருந்தா பேச சொல்லுறே,நீ சொல்றது எல்லாம் கேட்க நீ என்ன என்னோட புருஷனா என்று பதிலுக்கு சீண்டினாள் ஏஞ்சலின்.

ஓகோ சபாஷ்,இப்போவாச்சும் ஒத்துகிட்டியே நான் உன் புருசன்னு என்று அவன் சொல்ல.., என்ன கேட்கலை இன்னொரு முறை சொல்லு என்று இவள் சொல்ல மாமன் மேலே அவ்வளவு காதலை வெச்சுக்கிட்டுதான் நடிச்சீயாக்கும்.,கள்ளி என்று சிரித்தான் பிரஜின்.

இத தூக்கி போடு

வாவ் என்ன ஒரு காமெடி.கொஞ்ச வண்டியை நிறுத்தேன்.இறங்கி சிரிச்சுகிறேன் என்று சின்ன புன்னகை சிந்தினாள் ஏஞ்சலின்…. இதையெல்லாம் கேட்டு ஆகணுமே முடியல சீக்கிரம் கொண்டு இவங்கள கீழே இறக்கி விட்டே ஆகணும் என்று கோபத்தில் இன்னும் அதிகமாக விர்விர் என்று கத்தியது அவனது டூவீலர்…

பொறுத்துக்கொள்ள முடியாதவளாய் இந்தவண்டி இப்படி கத்திக்கிட்டே இருக்கே,இத தூக்கி போட்டுட்டு புதுசா எக்ஸ்சேஞ்ல ஒரு வண்டி வாங்கவேண்டியது தானே என்றாள் ஏஞ்சலின். அதுக்கு என்னோட நண்பன் ஒத்துகொள்ளணுமே என்றான் பிரஜின். உன் வண்டியை எக்ஸ்சேஞ் பண்ண உன் பிரண்ட் கிட்டே ஏன் கேட்கணும்,அது கூட உனக்கு தெரியாதா என்றாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-51.

அட லூசு லூசு இது அவனோட வண்டி.அவன் வண்டியை சேஞ்ச் பண்ணணும்னா அவன்கிட்டே தானே கேட்கணும் என்று சிரித்தான் பிரஜின். ஓ சாரி,இவ்வளவு சவுண்ட் போடுதே பாதியிலே நின்னு போச்சுன்னா என்ன பண்றது என்று குதர்க்கமாக கேட்டு கொண்டே தன்தலையினை சொரிந்தாள் ஏஞ்சலின்.

அம்மா தாயே தயவுசெய்து உன் பொன்னான வாய கொஞ்ச மூடு,இப்படித்தான் ஒரு நாள் வேகமாக ஒடுறீயே விழுந்துட மாட்டே என்று கேட்டே,மறுநிமிஷமே கீழே விழுந்து கிடந்தேன்… இப்போ அதே மாதிரி கேட்குறே கொஞ்சநேரம் பேசமா வரீயா என்று சொல்லி முடிக்கும் முன்னரே வண்டி பழுதாகி பாதியில் நின்றது.ஐய்யோ நின்னு போச்சா இவன்வேற ஏதாவது சொல்லுவானே என்று திருதிருவென முழித்து கொண்டே வண்டியை
விட்டு கீழே இறங்கினாள் ஏஞ்சலின்

– அ.மு.பெருமாள்

பாகம் 52-ல் தொடரும்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    காதல் பயணம் இனிது தொடரட்டும்