நினைவுச் சிறகுகள் – புத்தக விமர்சனம்

வளரும் எழுத்தாளர் (பேசும் புத்தகம்) வலைஒளி, வைஷாலி பழனிச்சாமி அவர்கள் எழுதிய நூல் மதிப்பீடு / நூல் அறிமுகம் “நினைவுச் சிறகுகள்” – ninaivu siragugal book review

ninaivu siragugal thi valli

இந்தப் புத்தகம் ஒரு மருத்துவரோட வாழ்க்கை வரலாறு. அவங்க மனைவி பார்வையில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற மாதிரி வள்ளி எழுதி இருக்காங்க. சங்கமித்ரா என்ற புனைபெயரில் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி இருக்காங்க. தன்னுடைய அம்மாவின் இறுதி விருப்பத்தின் பேரில் தன் சொந்த பெயரிலேயே இந்த முதல் புத்தகத்தை வெளியிட்டு இருக்காங்க. இந்த புத்தகம் முழுவதுமே தன் கணவர் மருத்துவத் துறையில் என்னென்ன பண்ணினார் என்று இருக்கிறது. இது கண்டிப்பா ஆட்டோ பயோகிராபி என்கிற கேட்டகிரியில் வரையறுக்க மாட்டேன், ஏன்னா.. இது அவருடைய வாழ்க்கை பற்றி எழுதல. பயோகிராபி என்கிற கேட்டகிரியிலயும் வரையறுக்க மாட்டேன், ஏன்னா.. அவர் எங்கே பிறந்தார் எங்கே வளர்ந்தார் அப்படிங்கற எதுவுமே இதில கிடையாது. அவர், தன் வாழ்க்கையில் வந்த பிறகு… தன்னோட பார்வையில் அவர் எதையெல்லாம் கடந்து வந்தார்… எதையெல்லாம் சந்தித்தார்… என்பதை எழுதி இருக்காங்க. ஒரு பெண்ணோடு பார்வையில், தன்னோட ஆண் என்னென்ன பண்ணினாரு, அப்படின்னு கேட்டகிரைஸ் பண்ணும் போது அது இன்னும் அழகியல் சேர்க்கிற மாதிரி இருக்கிறது.

இரு கோடுகள்

நான் எப்பவும் சொல்வது போல ஒரு புத்தகத்துக்கு முன்னுரை தான் அழகு. இந்தப் புத்தகத்துக்கும் அவங்க முன்னுரை வழங்கி இருக்காங்க. ‘இரு கோடுகள்’ படத்துல ஒரு லைஃப்போட மதிப்பு என்ன? என்கிற ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி டாக்டர் தொழில்ல லைப்போட மதிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை சுட்டி காட்டியிருக்கிறது அழகாக இருக்கிறது.

பழகு தமிழில் எழுதுவதில் ஆர்வம் உண்டு

நாங்கள் என்கிற கேட்டகிரியில் ‘அவர் ‘ என்ற தலைப்பில் தன் கணவரைப் பற்றி எழுதியிருக்காங்க.’ நான்’என்ற தலைப்பில் தன்னைப் பற்றி எழுதி யிருக்காங்க .’நான்’ என்ற தலைப்பில் ஒரு வரி தன்னைப் பத்தி எழுதியிருக்கிறாங்க . அந்த வரி என்னை ரொம்பவே கவர்ந்தது. அதுதான் என்னை இந்த புத்தகத்தை ஒரே நாளில் முடிக்க வைத்தது. “அழகு கொஞ்சும் தூயதமிழ் கைவராவிடினும் பழகு தமிழில் எழுதுவதில் ஆர்வம் உண்டு” என்று எழுதி இருக்காங்க… அதாவது இலக்கிய நடையில் எனக்கு எழுத வராது,ஆனால் பேச்சுத் தமிழ்ல எழுத வரும் என்பதை…. ‘தன்னடக்கத்தின் திறவுகோலாக’ பார்க்கிறேன்.

எஸ்எஸ் திருமலைகொழுந்து

இந்த கதையோட நாயகன் டாக்டர் எஸ்எஸ் திருமலைகொழுந்து அவர்கள். அவர்களைப்பற்றி அவங்க மனைவி அவங்க பாயிண்ட் ஆப் வியூவில் எப்படி எல்லாம் இருந்தாங்கன்னு எழுதி இருக்காங்க. அவங்க சொந்த ஊர் திருநெல்வேலி. திருநெல்வேலியில் அவர்கள் சந்தித்த வித்தியாசமான அனுபவங்கள்… அவங்க எந்தந்த இடங்களிலெல்லாம் பணி மாற்றம் ஏற்பட்டு,அங்கு என்னவெல்லாம் அனுபவித்தார்கள்னு எழுதியிருக்காங்க..

குற்றால சாரல் வீசும் ‘இடைகால்’ என்ற ஊரிலிருந்து ஆரம்பிக்கிறாங்க. முதல் நாள் பால் காய்ச்சும் போதே ஒரு பையன் சைக்கிளில் கால் விட்டு இரத்தகாயத்துடன் வந்து, அவருக்கு வைத்தியம் பார்ப்பதற்குள், நல்ல நேரம் தவறி போனது. ஆனால் அதையெல்லாம் சகுனத்தடையென்று நினைக்காமல்.. மருத்துவ உலகில் இதெல்லாம் சகஜம் என்று பால் காய்ச்சியது, வள்ளிஅவங்க நிறைய க குட்டிக்குட்டியா மருத்துவ துணுக்குகளையெல்லாம் நமக்கு கொடுத்திருக்கிறாங்க. அந்த துணுக்குகளை படிக்கும்போது மருத்துவத்தைப் பற்றிய ஒரு பேசிக் நாலெட்ஜ் நமக்கு கிடைக்கிறது – ninaivu siragugal book review.

ninaivu siragugal book review

குழந்தைக்கு அது பெரிய ஆபத்தாக இருக்கும்

அதில் முக்கியமான விஷயமா நான் பார்க்கிறது R.H ஃபேக்டர் . கணவனுக்கு பாசிட்டிவ் ஆகவும், மனைவிக்கு நெகட்டிவ் ஆகவும் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு அது பெரிய ஆபத்தாக இருக்கும் என்பது இந்த புத்தகம் படிக்கும் போது எனக்கு தெரிந்தது. 1980- 90களில் ஒரு பழக்கம் இருந்திருக்கிறது. லவ் பண்ணும் பையனும், பெண்ணும் கைவிரல்களை பிளேடால் கீறிக்கொண்டு, ரத்தத்தோடு ரத்தம் இணைவது. இந்தப் பழக்கத்தால் ஒரு பெண்ணுக்கு பிரச்சனை ஏற்பட்டு கருவிலேயே அவங்க குழந்தை இறந்தது குறித்த சம்பவத்தை அவர்கள் குறிப்பிட்டிருக்காங்க. எந்த அளவு ரத்தம் என்பது எவ்வளவு லைப் லைன்னான விஷயம் என்பது இதன் மூலம் புரிந்தது .ரத்தமும் ரத்தமும் கலந்து நடனம் ஆடிய அந்த தம்பதிகள் (காதல் விஷயத்தால் )அது பிற்காலத்தில் அவங்க குழந்தையை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது புரிந்தபோது, லைஃப்ல இவ்வளவு கேர்புல்லா இருக்கணுமாங்கற நினைப்பு வந்துடுச்சு. இந்த மாதிரி நிறைய நிறைய மருத்துவ துணுக்குகள் எல்லாம் கொடுத்து இருக்காங்க. அதைப் படிக்கும்போது எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்கிற விஷயம் எல்லாம் புரியுது .

அந்த மாதிரி பிறந்த குழந்தைக்கு கழுதை பால் கொடுக்கும் பழக்கம்… அதனால பரவும் தொற்று… கடித்த பாம்பை கையில எடுத்துட்டு வந்த ஆளு ….காதுல பஞ்சு இருக்குன்னு இல்லாத பஞ்சை தேடி வந்த பாட்டி… இந்த மாதிரி நிறைய குட்டி குட்டியான விஷயங்கள அவங்க கொடுத்திருக்காங்க. இப்படி ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களை சொல்லி இருக்கிறார்களே ஒழிய, எந்த இடத்திலும் அவர்கள் பர்சனல் வாழ்க்கை உள்ளே கொண்டு வரல .அது இந்த புக்கோட பிளஸ்.

ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்க்க வேண்டிய நிலைமை

அவங்க ஒரு இடத்துல ஒரு கம்பேரிசன் கொடுத்து இருக்காங்க. அந்த காலத்து அண்ணாச்சி கடைக்கும் நமக்குமான உறவு எப்படி இருந்தது…. இப்போ இருக்கிற பளபளப்பான மாலுக்கும் நமக்குமான உறவு எப்படி இருக்குது… என்பதை போலத்தான், அக்கால மருத்துவர் நோயாளி உறவும், இக்கால மருத்துவர் நோயாளி உறவும், அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதே போல இன்னொரு இடத்துல, அக்காலத்தில் பெண் மருத்துவர்கள் இல்லாத நேரத்துல ஆண் மருத்துவர்களே பிரசவம் பார்த்திடுவார்கள் என்று சொல்லியிருக்காங்க…அந்த காலகட்டத்தில் மருத்துவத்துறையில் மகப்பேறுக்கு அவ்வளவு முக்கியம் தந்திருக்காங்க. இப்போ நாம் பெரும்பாலும் பெண் மருத்துவரையே தேர்ந்தெடுக்கிறோம். அந்த காலகட்டத்துல பெண் மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்தபோது வேற வழி இல்லாம ஆண் மருத்துவர்கள் தான் பிரசவம் பார்க்க வேண்டிய நிலைமை. ஆண் மருத்துவர்களும் பிரசவம் பார்த்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய பேரியரைத் தாண்டி, நம் சமுதாயம் வந்திருக்கிறது…என புரிஞ்சுக்க முடியுது.

இப்ப இருக்கிற எந்த வசதியும் அந்தக் காலத்தில் கிடையாது. ஸ்கேன் வசதியெல்லாம் இப்ப வந்த ரீசண்ட் கான்செப்ட் தான். அப்ப பிரசவம் பார்த்த எல்லாருமே ஒரு குத்து மதிப்பா இப்படித்தான் இருக்கும்னு , அதுவரை பார்த்து வந்த கேசஸஸ் எல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி தான் பிரசவம் பார்த்திருக்காங்க. அந்த அளவு மருத்துவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களா இருக்கும் போது தான் அவங்களுக்கு நிறைய பேஷண்ட்கள் அவரைத் தேடிப் போவாங்க.ஆனா இப்ப அந்த பிரச்சனை கிடையாது எல்லாமே மிஷின் பார்த்துக்கறது .ஒரு டாக்டரோட கைப்பக்குவம் என்பது முக்கியமாக இருந்தது அந்த கால காலத்தில் ஒரு டாக்டரோட கைப் பக்குவத்தை பார்த்துதான் அவங்ககிட்ட போகவே செய்வாங்க அப்படி ஒரு டிஃபரண்ட் கேட்டகிரி இருந்த காலகட்டத்தில அவங்க எப்படி எப்படியெல்லாம் பார்த்தாங்க… என்பதுதான் இந்த புத்தகம்.

அந்தக் காலத்து சென்னையை விவரித்து இருக்காங்க. அந்த காலத்துல பெசன்ட்நகர் வாசிகள் அனுபவிக்கிற கடற்கரை காற்றை இந்திராநகர் வாசிகளே அனுபவித்திருந்திருக்கறாங்க . ஏன்னா….அப்ப திருவான்மியூர் என்பது தியாகராஜா தியேட்டரோடேயே முடிந்திடுமாம். 1982 ல சென்னை இவ்வளவு அழகாய் இருந்திருக்கா, இவ்வளவு ஜன நெரிசல் இல்லாமல் இருந்திருக்கா, முக்கியமா டிராபிக் நெரிசல் இல்லாமல் இருந்திருக்கா…அவங்க புத்தகத்தை படிக்கும்போது எனக்கு வியக்கத் தோணுச்சு -ninaivu siragugal book review.

இன்னொன்று மென்ஷன் பண்ணி இருக்காங்க. ஒரு ஸ்கூட்டர் இருக்கு… அதன் பெயர் லூனா… அதை ஸ்கூட்டருக்கு, சைக்கிளுக்கும், பிறந்த குழந்தை …அப்படின்னு சொல்றாங்க .

கண்டிப்பா வாங்கி படிங்க

கடைசில அவங்க இப்படி முடித்திருக்காங்க கல்யாணத்துக்கு முன்னாடி.. அவங்க நெருங்கிய தோழி..” தயவுசெய்து டாக்டரை கல்யாணம் பண்ணிக்காத.எப்ப பார்த்தாலும் ஆஸ்பத்திரி, பேஷண்ட் னு, இருப்பாங்க .. இந்த மாதிரியான எக்ஸ்பீரியன்ஸ் தான் இருக்கும். ரொம்ப பர்சனல் ஸ்பேஸ் கிடைக்காது” என்று வார்ன் பண்ணியிருக்காங்க! அதையெல்லாம் மீறி அவங்க விருப்பப்பட்ட ஒருத்தரை,கல்யாணம் பண்ணி, அந்த கல்யாண வாழ்க்கை சக்சஸ்ஸா இத்தனை ஆண்டுகள் கடந்து இருக்கு .இந்த மாதிரி ஒரு அழகான வாழ்க்கை தொகுப்பு. இதை வாழ்க்கை தொகுப்புன்னு சொல்வதை விட சுவையான நிகழ்வுகளின் தொகுப்பாகத்தான் நான் இந்த புத்தகத்தை பார்க்கிறேன். இந்த புத்தகத்தை நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா வாங்கி படிங்க …

– வைஷாலி பழனிச்சாமி, பேசும் புத்தகம் (வலைஒளி – YouTube Channel)


புத்தகம் தேவைப்படுவோர் நீரோடையை தொடர்புகொள்ளவும்,
வாட்சாப் எண்: 9080104218
மின்னஞ்சல்: info@neerodai.com

You may also like...

8 Responses

 1. R. Brinda says:

  அருமையான, பயனுள்ள விமர்சனம். இதைப் படித்தவுடன் “நினைவுச் சிறகுகள்” புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

 2. Pavithra says:

  Arumaiyana vilakkam, book padikanum nu interest varuthu..

 3. முத்துசாமி says:

  மேலும் விமர்சனங்கள் எழுத வாழ்த்துக்கள் வைசாலி.
  வள்ளி அவர்களுக்கு மேலும் பல புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்.

 4. ராஜகுமாரி போருர் says:

  Interesting aga irukku

 5. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  நினைவுச் சிறகுகள் பற்றி நினைவை ஏற்படுத்தும் அளவிற்கு ஒரு நிறைவான விமர்சனம் வாழ்த்துக்கள்

 6. தி.வள்ளி says:

  என் புத்தக விமர்சனம்.. ஊக்கப்படுத்திய அன்பு நண்பர்களுக்கு மிக்க நன்றி! கலைஞர்களுக்கு இது போன்ற வார்த்தைகள் மிக்க ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும்..நன்றி..

 7. என்.கோமதி says:

  விமர்சனம் வாசிக்கும் போதே நினைவு சிறகுகளை வாசிக்கும் ஆவலை அதிகப்படுத்தியது. மிகைப்படுத்தா மிதமா விமர்சனம்.நன்றி

 8. ஹேமநாதன் says:

  புத்தக அறிமுகம் சிப்பாக உள்ளது.சின்ன சின்ன செய்திகளாய் நினைவு சிறகுகளை எங்களுக்குள் சிறகடிக்க செய்திருக்கிறீர்கள்.
  நன்றி