27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய சித்தர்கள்

நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த பூமியிலே சில ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் பலரில் முக்கியமாக நாம் வணங்க வேண்டியவர்கள் பற்றி பார்ப்போம். நமது 27 நட்சத்திரங்களுக்கு உரிய கடவுள், விலங்கு மற்றும் மலர் என்பது போல, இருபத்தேழு நட்சத்திரக் காரர்கள் வணங்கவேண்டிய சித்தர்கள் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – 27 நட்சத்திர சித்தர்கள்

siddargal natchathirangal
  1. அஸ்வினி
    அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் பெயர் காளங்கிநாதர். இவருடைய சமாதி கஞ்சமலை பகுதியில் உள்ளது.
  2. பரணி
    பரணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் போகர் ஆவார். இவருடைய சமாதி பழனி முருகன் சன்னதியில் உள்ளது.
  3. கிருத்திகை
    ரோமரிஷி சித்தர் ஆவார். அவருக்கு சமாதியும் இல்லை, உடல் அழியவும் இல்லை என்று நம்பப்படுவதால் அவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி நினைத்து வணங்க வேண்டும்.
  4. ரோகிணி
    ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் மச்சமுனி ஆவார். அவருடைய ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
  5. மிருகசீரிஷம்
    பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவரான சட்டமுனி சித்தரின் ஊர் திருவரங்கம் ஆகும்.
  6. திருவாதிரை
    திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் இடைக்காடார் ஆவார், அவர் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது.
  7. புனர்பூசம்
    சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  8. பூசம்
    பூச நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர் கமல முனி சித்தர் ஆவார். அவருடைய ஜீவசமாதி திருவாரூரில் உள்ளது.
  9. ஆயில்யம்
    இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் அகத்தியர். அவருடைய ஒளி வட்டம் குற்றால பொதிகை மலையில் உள்ளது மற்றும் ஜீவசமாதி திருவனந்தபுரத்தில் உள்ளது.
  10. மகம்
    இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.
  11. பூரம்
    இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வப் பெண்மணி ஸ்ரீ ஆண்டாள். இவர் பூமா தேவியின் அம்சமாக உள்ளார்.
  12. உத்திரம்
    இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ளது.
  13. அஸ்தம்
    அஸ்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் கருவூரார் ஆவார். இவர் ஜீவசமாதி கரூரில் உள்ளது.
  14. சித்திரை
    சித்திரை நட்சத்திர அதிபதி சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.
  15. சுவாதி
    வணங்க வேண்டிய சித்தர் புலிப்பாணி ஆவார். அவர் ஜீவசமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
  16. விசாகம்
    சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர்கள் ஆவர். நந்தீசர் காசி நகரத்திலும், குதம்பை சித்தர் ஜீவசமாதி மாயவரத்தில் உள்ளது.
  17. அனுஷம்
    சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுவார். அவரின் ஜீவ சமாதி எட்டுக்குடியில் உள்ளது.
  18. கேட்டை
    சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது என்று நம்பப்படுவதால் காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும்.
  19. மூலம்
    மூல நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர் சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் ஜீவ சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.
  20. பூராடம்
    பூராட நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் ராமதேவர் சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
  21. உத்திராடம்
    உத்திர நட்சத்திர அதிபதி சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவ சமாதி திருப்பதியில் உள்ளது.
  22. திருவோணம்
    இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவருடைய சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
  23. அவிட்டம்
    சித்தர் திருமூலர் ஆவார். அவருடைய ஜீவசமாதி சிதம்பரத்தில் உள்ளது.
  24. சதயம்
    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர். இவரின் சமாதி எங்கு என தெரியவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு அவரை நினைத்தாலே தேடி வந்து அருள்புரிவார் என்று நம்பப்படுகிறது.
  25. பூராட்டாதி
    சித்தர் சோதி முனி ஆவார். இவர் ஜோதி வடிவில் ஜீவனாக உள்ளவர். அதனால் அவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அருள் பாலிப்பார்.
  26. உத்திரட்டாதி
    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்து விட்டதாக வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்க வேண்டும்.
  27. ரேவதி
    சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது. தனி அறையில் ஒற்றை தீபம் ஏற்றி மன ஒரு நிலைப்பாட்டோடு அவரை வணங்கி வந்தால் போதும் – 27 நட்சத்திர சித்தர்கள்.

– தொகுப்பு நீரோடை மகேஷ்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    சித்தர் வழிபாடு வாழ்வை சிறக்கச் செய்யும் …அரிய தகவல்… பகிர்ந்தமைக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *