கவிதை போட்டி 6 (2021_6) முடிவுகள்

இன்று ஜூலை 2 வெள்ளியன்று வெளியிடப்படும்…

kavithai potti 6

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள்
அர்ஜீன் பாரதி, லோகநாயகி, திலகவதி், வேல், கோமகன், வீரமணி, தனியெழிலன், ஸ்டாலின் ஆண்டனி, ராஜ்குமார், பாவலர் கருமலை தமிழாழன், கலையரசன், ரோகினி மற்றும் குறிப்பாக இளந்தென்றல் திரவியம் அனைவருமே வெற்றியாளர்களாக நடுவர்கள் கருதுவதால் அனைவரின் பெயரையும் குறிப்பிடுகிறோம்.

இதுவரை பரிசு பெறாத மேலும் இந்த போட்டியில் முதன் முறையாக கலந்துகொண்ட இருவருக்கு நால்வருக்கு நீரோடையின் பரிசு அனுப்பி வைக்கப்படும்.

கவிஞர்கள் தனியெழிலன், பாவலர் கருமலை தமிழாழன், கலையரசன், ரோகினி ஆகியோர் தங்களின் முகவரியை நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +91 90801 04218 அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரின் சிறப்பான பங்காற்றலால் நீரோடையின் இந்த கவிதை போட்டி குறிப்பாக மறக்க முடியாதது.வாழ்த்துச் செய்தி

நமது நடுவர்களில் ஒருவரான சலீம் அவர்கள் கவிதை சொந்தங்களுக்கு பகிர்ந்த வாழ்த்து செய்தி… !!! – kavithai potti 6 mudvugal

அன்பான வாழ்த்துக்கள்….
உள்ளபடியே எதை எடுப்பது எதை தொடுப்பது என்கிற இனம் புரியாத தவிப்புதான் எனக்குள்ளும்…

நீரோடை கவிஞர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை…
நெறிபடுத்த முடியாத கோபக்கனல் கொப்பளிக்கும் வரிகள் நிரூபித்து விட்டது…

வரிக்குவரி வலி சுமந்து வந்த கவிதைகளை வாசிக்கும்போதே…
நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி நகர்வதாய்
உணர்கிறேன்…

இவர்களை இனங்கண்டு நீரோடை புது வெளிச்சம் பாய்ச்சட்டும்…

வாழ்த்துகள் கவிபிரமாக்களே – குடைக்குள் மழை சலீம்மேலும் ஒரு வாழ்த்துச்செய்தியை நாளை பகிர்கிறோம்

நடுவர்களாக செயல்பட்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த பாப்பாக்குடி இரா. செல்வமணி, தானப்பன் கதிர், குடைக்குள் மழை சலீம், கவி தேவிகா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.. இவர்களுடன் உங்கள் நீரோடை மகேஸ்…

You may also like...

3 Responses

 1. வீ.ராஜ்குமார் says:

  மகிழ்ச்சி!
  சிறப்பிடம் பெற்ற பாவலர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 👏💐
  வெற்றியாளர்களாக அனைவரையும் அறிவித்து மகிழ்ந்தது நிறைவு! 👍
  கவிபிரம்மாக்களை உருவாக்கும் கனிந்த தொண்டு செய்யும் நீரோடை குழுமத்தை சீரோடு வாழ்த்துகிறேன்! 🌷🌷🌷

 2. எஸ் வீ ராகவன் says:

  எனக்கு பரிசு உண்டா?

 3. Kavi devika says:

  அனைத்து கவிஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்…. இன்னும் இன்னும் பொலிவு பெற… நீரோடையோடு தொடருங்கள் இனிதே உங்கள் பயணத்தை….