நீரோடைப் பெண் (பாகம் 1)

உன் தோளில் என் நினைவுகளை தொலைக்க !
உன் மடியில் என் முகம் தொலைக்க !
உன் இதயத்தில் என் மூச்சை தொலைக்க !
உன்னில் என்னை தொலைக்க !
உன் கூந்தலில் என் சுவாசம் தொலைக்க !
உன் கண்களில் என் காட்சிகளை தொலைக்க !நினைத்து
கவிதை எழுதும் பொது
உனக்காக எழுதிய எழுத்துக்களில்
தொலைந்தது – என் பேனாமுனை.

thangame thangam kaathal kavithai

உன்னை வருணிப்பதால் என் பேனா மீது
கொண்ட காதலால்,
பேனாவை கை நழுவ வைத்து முத்தமிடுகிறாள்,
என் பூமித் தாய் ….. தினமும்.

– நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. பேனா முனை தொலையும் அளவுக்கு ரசித்திருக்கிறீர்கள் என்பது வரிகளில் தெரிகிறது… அருமை…

    அருமையான காணொளி ஒன்று நன்றி…

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா