உனக்காக என் விடியல்கள்!

இரவெல்லாம் கண்கள் இருந்து
சூரியன் வரும் நேரம்
பார்வை பறிபோனது போல ஒரு கனவு.
அய்யகோ !
பார்வை பறிபோனதை தாங்குமோ
மனம் என்ற பயத்தில்
இன்னும் விழிக்கவில்லை !

unakkaaha en vidiyalgal kavidhaigal

விடியல்கள் உனக்காக மலர்வது
என்னில் அரங்கேறும் அணையா சூரியன்.

உன் முகம் பார்க்கவே தினமும்
என் விடியல்கள் ..
உன் குரல் கேட்கவே தினமும்
என் உணர்வுகள்.

காணாத கணம் என்னை மௌனச் சிறையில் வைப்பவள்
கண்ட போது மௌனம்  சாதித்து என்னை கொல்லாதே.

 

-நீரோடைமகேஷ்

You may also like...

2 Responses

  1. PREM.S says:

    //காணாத கணம் என்னை மௌனச் சிறையில் வைப்பவள்
    கண்ட போது மௌனம் சாதித்து என்னை கொல்லாதே.
    //

    உண்மை தான் அன்பரே அப்படி தான் பலர்

  2. கவிதை சிறப்பு.. தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துகள்..