(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை (பதிவு – 1)

இந்த கவிதை வாயிலாக ஈரோடு நவீன் அவர்கள் சகோதரிகளுக்கு ஒரு கவிதை எழுதியுள்ளார் என்பதில் பெருமிதம் – thirunangai kavithai

thirunangai kavithai

இவள் பெண்ணும் இல்லை
ஆணும் இல்லை
ஆனாலும் மனிதன் தான் !

கேட்க உறவும் இல்லை
பழக உரிமை இல்லை
அனாலும் உண்மை தான்

இவள் அதிசயம் இல்லை
அசிங்கமும் இல்லை
அனாலும் உயிர் தான்

இவள் எழுத்தும் இல்லை
வடிவமும் இல்லை
அனாலும் ஓவியம் தான்

மனதொன்றும்
மடியோன்றும்
படைத்தவன் ஏனோ
பாலை மட்டும் இரண்டாக
படைத்துவிட்டான் பாவம்
என் தமக்கைக்கு,

உடலில் ஆணை கொண்டு
உயிரில் பெண்ணை
கலந்த கடவுள் தான் பாவம்
தன் சொந்தத்தை புவியிலே
விட்டுவிட்டான்

பண்பில் ஆணாக
பாசத்தில் பெண்ணாக இருக்கும்
இவளும் ஓர் ஆச்சர்யம் தான்

தாலிஅறுத்தாலும்
சுமங்கலி தான்
எந்த பெண்ணுக்கும் கிட்டாத
உணர்வு இது ???

வயிற்றுருக்காக பிச்சை
கேட்பினும் தவறில்லை
நமக்கு புண்ணியத்தை
தருகிறாள் !!!

கையை தாட்டி காசு
வாங்கி ஆசைக்கும்
தெய்வம் இவள்
கோவில்கள் தான் இல்லை !!!

தெய்வங்களை தெருவில்
காண்கிறேன்
உந்தன் வடிவிலே!!!! – thirunangai kavithai

கருவறை வைக்க மறந்த
பெண்ணும் இவள்
கதிரவன் ஒளியாக தோன்றும்
ஆணும் இவள்

பருவம் அடையாத கன்னி இவள்
கணவன் இல்லாத மனைவி இவள்
குழந்தை பெறாத தாயும் இவள்
மகிழ்ச்சி இல்லாத சிரிப்பும் இவள்
காசும் இல்லாத கோடிகள் இவள்
கோவில் இல்லாத தெய்வமும் இவள்

என்ன ஒரு ஆச்சர்யம்
“எந்தன் பார்வையிலே”

விழிகள் பேற்றினும் குருடன் போல்
மூச்சு பெற்றினும் பிணத்தை போல்

அலையும் மாக்களிடையே
மனிதராய் வாழ்வோம்
மற்ற உணர்விற்கும்
மதிப்பு கொடுத்து

இப்படிக்கு உங்கள் தோழனாக உறவாக அன்பாக………

– நவீன், ஈரோடு

You may also like...

3 Responses

  1. Rajakumari says:

    நான் திருநங்கை பற்றி படித்த முதல் கவிதை வாழ்த்துக்கள் கவிஞர் அவர்களுக்கு

  2. தி.வள்ளி says:

    சிறப்பான மனதை தொடும் வரிகள் கவிஞருக்கு வாழ்த்துக்கள்

  3. மிக சிறப்பான கவிதை
    அருமையான வரிகள் வாழ்துக்கள்