காதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25
இந்த பதிவின் வாயிலாக ப்ரியா பிரபு அவர்களை ஒரு கவிஞராக அறிமுகம் செய்கிறோம். மேலும் ஈரோடு நவீன் அவர்களின் வரிகளும் இடம் பெற்றுள்ளன – kavithai thoguppu 25
காதலுடன்
வார்த்தைகளற்ற
மௌனங்களின்
பெரு வெளியில்
பயணிக்கிறேன்..
நினைவுகளின் சிறகுகளால்
நீளும் பொழுதுகளை
நீ மட்டுமே
ஆட்சி செய்கிறாய்..
நிசப்தத்தின்
பேரிரைச்சல்
என்னுள்..
தாள முடியவில்லை
மீளவும் முடியவில்லை
என்னுள் எழும்
சப்தங்களும் நீயே
என்னோடு உறையும்
மௌனங்களும் நீயே..
எங்கே செல்லக்கூடும்
என்னால்
உனதடிமை ஆனபின்பு..
நிமிடங்கள்
மணித்துளிகளாய்
மாறிய பின்பும்
மாறாமல் இருப்பது
மௌனங்கள் மட்டுமே..
எனது காலச்சித்திரம்
உனது பிம்பம் கொண்டே
வரையப்பட்டிருக்கிறது..
எனை தேடித்தேடியே
உனை அடைகிறேன்..
இனியும்..
மௌனங்களில்
கரைந்தது போதும்
கடந்தது போதும்..
உன் வார்த்தைகள் எனும்
வரங்கள் தந்து விடு
என் வாழ்வோடு
ஒன்றாய் கலந்து விடு..
– ப்ரியா பிரபு , நெல்லை
கன்னத்தில் வழியும் கண்ணீர் துளிகள்
என்னுயிரே…
நான் உன்னை நேசிப்பது
உனக்கு தெரிந்திருந்தும்…
என் காதலின் ஆழம்
உனக்கு தெரியவில்லையடி…
எல்லைமீறி உன்னை
நேசித்ததால் என்னவோ…
என்னையும் மீறி வழிகிறது
கன்னத்தில் கண்ணீர் துளிகள்…
சொர்கத்தைவிட சிறந்தது
உன் நினைவுகள்…
எனக்குள் சுகமாக
இருப்பதால்… – kavithai thoguppu 25
எனக்கு நீ வலிகளை
கொடுத்தாலும்…
என் காதல் என்றும்
உன்னை வெறுக்காது என்னுயிரே…..
– ஈரோடு, நவீன்
அருமையான கவிதைகள்
கவிஞர்களுக்கு நல்வாழ்த்துகள்.
வரிகள் மிகவும் சிறப்பு
காதலின் மகத்துவம் பளிச்சிடுகிறது
Super akka
கவிதைகள் நன்றாக இருக்கிறது
உன் கவிதை உணர்வில்
கலந்த என் ரசனை
உன் காதல் வரிகளில்
வழி தேடி அடைந்த
என் காதல் உணர்வை
உனக்குச் சொல்ல
வார்த்தைகள் இல்லையடி
நானும் மௌன வெளியிலே….
பிரியா பிரபுவின் கவிதைக்கு என் மௌனமான வாழ்த்துக்கள்.. 👍 தொடர்ந்து சிறக்கட்டும் உங்கள் எழுத்துப் பயணம்.
வாழ்க வளமுடன்.
உன் கவிதை உணர்வில்
கலந்த என் ரசனை
உன் காதல் வரிகளில்
வழி தேடி அடைந்த
என் காதலின் உணர்வை
உனக்குச் சொல்ல
வார்த்தைகள் இல்லையடி
நானும் மௌன வெளியிலே…
மௌனமான வாழ்த்துக்கள்
பிரியா பிரபுக்கு 👍
உன் கவிதை உணர்வில்
கலந்த என் ரசனை
உன் காதல் வரிகளில்
வழி தேடி அடைந்த
என் காதலின் உணர்வை
உனக்குச் சொல்ல
வார்த்தைகள் இல்லையடி
நானும் மௌன வெளியிலே…
மௌனமான வாழ்த்துக்கள்
பிரியா பிரபுக்கு 👍
அருமை.. வாழ்த்துகள் அனைத்து கவிஞர்களுக்கும்….
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏