காதல் புலம்பல்கள்

மனம் வீச மறுக்கும் மலரே,
உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை.

சிறகை மறந்துவிட்ட பறவையே,
உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை.

பார்க்க மறந்த கண்களே,
உனக்கு தடை இமைகளில் இல்லை.

kaathal pulambalgal love poem kaathal

என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை
நான் கண்டறிவது போல்,
உன் மன இருட்டின் மிரட்டலில் என்னை
அறிந்துகொள்ள முடியவில்லையடி பெண்ணே.

இன்னும் உன்னில் என்-காதல் இல்லாத
காவல் ஏன்?..,

என்னில் நீ நானாக புலம்பிக்கொண்டிருக்கிறாய் ! !

 – நீரோடைமகேஷ்

You may also like...