உழைப்பும் படைப்பும் உனதே

கல்லையும் கரைய வைப்பாள் பெண்
ஆனால் தோழனே !
சிறுதுகளையும் மாமலையாக
வடிக்கும் வல்லமை பெற்றவன் நீ !

uzhaippum padaippum unathe kavithai

உன்னை உறங்காமல் உழைக்க
சொல்லவில்லை.
உழைப்பில் உறங்கிவிடாதே என்று உரைக்கிறேன் !

தேனியாக  மாறிப்பார் 1
ரோஜாக்கள் தேன் கொண்டுவரும் – உனைத்தேடி,
பொன்மகள் கால்கடுக்க காத்திருப்பாள்.

நீ உழைப்பில்   உயர முதலீடாக
அந்த கலைவாணியும் வீணையை
அடகு வைப்பாள்.

 

 – நீரோடைமகேஷ்

You may also like...

3 Responses

  1. அருமையானதொரு கவிதை

  2. Rasithen nanpare unkal kavi varikalai vaalthukkal

  3. அட்டகாசமான வரிகள்…
    நன்றி.
    (த.ம. 1)