கவிதைக் கருவூலமே !

நீ என்னும் சமுத்திரத்தில்
வேரூன்றிய கடல்வாசி நான்.என் சமுத்திரமே, நீ என்னை பிரிக்க முயன்று
வற்றிப் போக நினைத்தாலும், உன்னை
அந்த இயற்க்கை சம்மதிக்காது.

en kaathal karuvoolame nee thaanadi

சோகத்தில் சிரித்ததும் இல்லை,
இன்பத்தில் அழுததும் இல்லை,
உன் காதல் என்னை இரண்டையும்
செய்ய வைக்கிறது.

என் நீரோடையின் கருவூலமே –
உன் முகத்தில் தோன்றும் அந்த புன்னகைதானடி.

என் கவிதைக்கு உயிர் கொடுக்கும்
உன் உதட்டோரப்  புன்னகையை
சில நேரம் கைக்குட்டை கொண்டு மறைத்துக் கொள்வதேன் (எனைக் கொல்வதேன்).

  – நீரோடை-மகேஷ்

You may also like...

2 Responses

  1. /// சோகத்தில் சிரித்ததும் இல்லை,
    இன்பத்தில் அழுததும் இல்லை ///

    அருமை…

  2. உன் உதட்டோரப் புன்னகையை
    சில நேரம் கைக்குட்டை கொண்டு மறைத்துக் கொள்வதேன் (எனைக் கொல்வதேன்).
    nice lines

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *