அன்பான இனிய நாள்

ஒவ்வொருவரும் நாளை விடியும்
என்ற நம்பிக்கையுடன்
இரவை முடிக்கும் அனைத்துநாளும்
இனிய நாள்தான்!
தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட
அம்மாவின் வயிற்றில் இன்பமாக இருப்பதால்
அந்த சிசுவிற்கு ஒவ்வொருநாளும்
இன்ப நாள்தான்! – lovers day poem

kathalar thina kavithai

பள்ளிக்கு செல்லும் மழலைக்கு அன்புடன்
சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைத்தால்
பள்ளி செல்லும் அந்தநாள் அப்பிள்ளைக்கு
இனிய நாள்!….
கதிரவன் வரும் எல்லா நாளுமே
இனிய நாள்தான்!

ஏழை பணக்காரன் உயர்ந்தவர் தாழ்ந்தவர்
ஆண் பெண் என்ற பேதமறியாமல்
காதல் செய்யும் கதிரவனிடம் கற்போம்
அன்பு காட்டும் நாளின் இன்பத்தை!
மனிதனின் மனம் எதை விரும்புகிறதோ
தடையின்றி அது நடந்தால் அவனுக்கு
“காதலர் தினமான” அந்த நாள் இனிய நாள்!
மனிதர்களே நல்லதை நினைத்தால்
நல்லது நடக்கும்……..நினைப்பில்
களங்கம் இருந்தால் அது பிறக்கும் நாட்களை
களங்கமாக்கி விடும்…… – lovers day poem

தேவை இல்லாதவற்றை பார்க்காதே!
தேவை இல்லாதவற்றை கேட்காதே!
தேவை இல்லாதவற்றை பேசாதே!
என்ற மூன்று குரங்குகள் சொல்லும்
அறிவுரை நினைவில் கொண்டு அனைவரையும்
காதல் செய்து……. அந்த நாளை காதலர் தினம் என
இனிமையாக கொண்டாடுவோம்! அதுவே
அன்பான இனிய நாள்தான்!

– உஷாமுத்துராமன்,  திருநகர்

You may also like...