போகாதே என் உயிரே

ஆயிரம் தான் உணர்வுகளை அனுபவித்து
கற்பனையில் கோட்டை கட்டி வாழத் துடித்தாலும்,
உன் நினைவுகளில் மிஞ்சும் ரணத்திற்கு
பதில் சொல்வது என்னவோ பிரிவு தான்.

pogaathe en uyire

காலக் கணிதமே நீ என்று இருந்தேன்
கணக்கு போட்டு காலத்தை கழித்தாய் என்னோடு.

கை பிடித்து நீ நடந்து, கனவோடு நான் சிரித்து,
ஊரெல்லாம் கண்வைத்த என் புன்னகை முகத்துக்கு,
பதில் சொன்னது உன் பிரிவு.

ஊசியிலைக் காட்டு மரத்து இலை நுனி கூட
கொலைகள் செய்யும் என்பதை அறிந்தேன்,
பிரிவின் நிமிடங்களில் நீ வீசிச்சென்ற பார்வை.

போகாதே என் உயிரே pogaathe en uyire kavithai

 – நீரோடை மகேஷ்

You may also like...

4 Responses

  1. பிரிவின் துயரை சொல்லி ஏங்க வைக்கும் வரிகள்…

  2. Maheswaran.M says:

    மிக்க நன்றி தோழரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *