தேங்காய் மிட்டாய் செய்முறை

ஊரடங்கு காலத்தில் வெளியில் வாங்கி சாப்பிட பயமா, குழந்தைகளுக்கு எளிய இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுக்க ஆசையா, இதோ தேங்காய் மிட்டாய் தயார்

தேங்காய் மிட்டாய்

தேவையான பொருட்கள்

சர்க்கரை – 1 கிலோ
தண்ணீர் – தேவையான அளவு (தோராயமாக 250 மில்லி)
தேங்காய் பெரியது – 1 (5 ஏலக்காய் உடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்)
பொட்டு கடலை – 100 கிராம் (பருபருவென அரைத்து வைத்து கொள்ளவும்)
நெய் – 100 மில்லி


செய்முறை

வாணலியில் தண்ணீர் ஊற்றி நீர் காய்ந்த உடன், சர்க்கரையை சேர்த்து லேசான பாகு (கம்பி) பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

கம்பிப் பதம் வந்தவுடன் அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

உடன் நெய் சேர்த்து கெட்டி படும் வரை காய்ச்சி கொண்டே இருக்க வேண்டும். அரைத்து வைத்த கடலையை சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி சிறு துண்டுகளாக அறுத்து பரிமாறலாம். தேங்காய் மிட்டாய் ரெடி..

(பி.கு) காய்ச்சி தட்டத்தில் ஊற்றும் முன் கட்டத்தை நன்றாக எண்ணெய் தேய்த்து வைத்து கொள்ளவும் அப்போதுதான் மிட்டாய் துண்டுகள் ஒட்டாமல் வரும்.

– வெண்மதி

You may also like...