மைசூர்பாக் செய்முறை

தமிழர் விழாக்களில் இடம்பெறக்கூடிய பலகாரங்களில் மைசூர்பாகு (MysorePak) சுலபமான, முக்கியமான இனிப்பு வகையாகும் – mysore pak seimurai.

mysore pak seimurai

தேவையான பொருட்கள்

கடலைமாவு 250 கிராம்
சர்க்கரை 1 கிலோ
தண்ணீர் 250 மில்லி
நெய் 250 கிராம்
சன்  பிளவர் ஆயில் 300 மில்லி (150 + 150)

செய்முறை

கடலை மாவை லேசாக வாணலியில் போட்டு வறுக்கவும். வருத்தத்தை சன்  பிளவர் (sunflower) ஆயில் ஊற்றி நன்றாக கலக்கவும் – mysore pak seimurai.

எடுத்து வைத்த சர்க்கரையில் கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்ச ஆரம்பிக்கவும், பாகு பதம் வந்ததும் , மேலே தயாராக வைத்திருக்கும் மாவை சேர்த்து கலக்கவும்.

நெய் அல்லது டால்ட 200 கிராம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே கலரவும். பிறகு ஆயில் சேர்த்து கொண்டே கிளறவும். பாத்திரம் அடிபிடிக்காமல் கிளறும்போது தான் இனிப்பு மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

கொஞ்சம் கெட்டியான உடனே எண்ணெய் தடவி வைத்த பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடத்தில் கத்தியில் எண்ணெய் தடவி வெட்டி பரிமாறலாம்.

வலையொளி (YouTube) காணொளி

இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு பயன்பெற – https://youtu.be/RfXVf4_pCo0

You may also like...

1 Response

  1. Nithyalakshmi says:

    இப்பவே நாவில் எச்சில் ஊறுகிறதே!!! அருமை