செட்டிநாடு மட்டன் சுக்கா

தேவையானவை:

மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 100 மில்லி
கொத்தமல்லி இலை – 1/2 கப்
புதினா இலை- 1/4 கப்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
இஞ்சி – சிறுதுண்டு
கரம்மசாலா தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – சிறிதளவு.

chettinad mutton chukka
செய்முறை:

• கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• மட்டனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாகிக் கொள்ளவும்.

• இத்துடன் வெங்காயம், தனியாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

• வேகவைத்த மட்டனைச் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

• கடைசியாக உப்பை சரிபார்த்து கரம் மசாலா தூள், கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும். இப்போது மணக்கும் செட்டிநாடு மட்டன் சுக்கா ரெடி.​

You may also like...