அருமையான முலிகை அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி என்ற தாவர கொடி முழுவதும்  மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது மற்றும்  குளிர்ச்சித் தன்மை உடையது. அம்மான் பச்சரிசி, தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் ,ஈரப்பாங்கான சமவெளி நிலம் மற்றும்  களைசெடியாக எல்லாவகையான தோட்டங்களிலும் வளரக்கூடியது .அம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும், காம்புகளுடன் காணப்படும். தாவரத்தில் எப்பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். அம்மான் பச்சரிசிக்கு சித்திரப் பாலாடை என்கிற பெயரும் உண்டு. amman pacharisi mooligai payangal

அம்மான் பச்சரிசி குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும், மலமிளக்கும், சுவாசத்தைக் சீராக்கும், இருமலைக் தணிக்கும், பெண்களுக்குப் பால் சுரப்பதைத் தூண்டும், பால் மருக்களைக் குணமாக்கும். தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பசுமையான அம்மான் பச்சரிசி செடிகளைச் சேகரித்துக் கொண்டு, நன்கு கழுவி, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு 1 டம்ளர் பாலில் கலக்கி, தினமும் காலை, மாலை இருவேளைகள் பாலூட்டும் தாய்மார்கள் குடிக்க வேண்டும். விந்து ஒழுகுதல் கட்டுப்பட அம்மான் பச்சரிசி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் இலைகளைச் சம அளவாக எடுத்துக் கொண்டு, நன்றாக அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 1 டம்ளர் எருமைத் தயிரில் கலக்கி காலை வேளையில் மட்டும் 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நலம் பெறலாம்.

amman pacharisi mooligai payangal

இரத்தக் கழிச்சல் குணமாக அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 200 மி.லி. பசும்பாலுடன் கலந்து, தினமும் காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க குணம் பெறும். அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும். அம்மான் பச்சரிசி பாலை முகத்தில் தடவ, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர, கால் ஆணி, பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள் ம‌ருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும்.

ஆஸ்த்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப் பயன்படுகின்றது. அதிக அளவில் உட்கொண்டால் வாந்தியைத் ஏற்படும் . இதன் நோய் எதிர்ப்புச் சக்தியும், காசநோயைக் கட்டுப்படுத்தும் பண்பும் மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிருபணம் செய்யப்பட்டுள்ளன.

சித்தர் பாடல் amman pacharisi mooligai payangal:

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச் சேர்ந்த தினவிவைகள்
தேகம் விட்டுப் – பேர்ந்தொன்றாய்

ஓடுமம்மான் பச்சரிசிக் குன்மை இனத்துடனே
கூடுமம்மா னொத்தகண்ணாய்! கூறு.  (அகத்தியர் குணபாடல்)

You may also like...

1 Response

  1. Kamal says:

    Kurippukku nandri. Aanal irumalai kattupadutha ithai eppadi eduthukka vendum engira muraiyai kurippidavillai.