பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனஅழுத்தத்திற்கு தீர்வு

பிரசவத்திற்கு முன்பு இருந்ததை விட பிரசவத்திற்கு பிறகு தான் பெண்கள் அதிக அளவு மன அழுதத்திற்கு ஆளாவார்கள். இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு மனஅழுத்தமானது அதிகமாக இருக்கும். ஏனெனில் பிரசவத்திற்கு பின்னர் அவர்கள் உடலில் சத்தானது மிகவும் குறைவாக இருக்கும். எனவே அவர்கள் ஒருவித சோர்வுடன், எதையும் சரியாக செய்ய முடியாமல் தவிப்பார்கள். அதுமட்டுமின்றி, கர்ப்பமாக இருந்த போது, உடலில் குழந்தையையும் சுமந்ததால், அவர்கள் மனதில் இன்னும் அந்த எடையானது மாறாமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்ததால், அவர்களுக்கே ஒருவித வித்தியாசமான உணர்வு இருக்கும். மேலும் இந்த நேரத்தில் கர்ப்பத்திற்கு முன் இருந்த உடல் அழகைப் பெறுவதற்கு, மீண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு உடலில் சக்தி இருக்காது. அதுமட்டுமல்லாமல், பிரசவத்திற்கு பின் கூந்தல் உதிர்தல் இருக்கும். பழைய ஆடை சரியாக இருக்காது. உடல் மிகவும் வலுவிழந்து காணப்படும். எனவே இவை அனைத்தும் மனதிற்கு ஒருவித கஷ்டத்தை கொடுத்து, மனஉளைச்சலுக்கு ஆளாக்கும். ஆகவே இதனை ஒரு பெரிய விஷயமாக பொருட்படுத்தாமல், குழந்தையை நன்கு கவனிக்க வேண்டும் என்று நினைத்து, இந்த மனஉளைச்சலில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். எனவே தான், அத்தகையவர்களுக்காக மன அழுத்தத்தைப் போக்கும் ஒருசில சிறந்த வழிகளைக் கொடுத்துள்ளோம் solution for postpartum stress.

solution for postpartum stress

குழந்தையுடன் விளையாடுவது

வாழ்வில் கடவுள் கொடுத்த ஒரு பெரிய பரிசு தான் குழந்தை. எனவே அந்த குழந்தையுடன் மனதில் எதையும் நினைக்காமல், சிறிது நேரம் விளையாடினாலே, மன அழுத்தமானது சீக்கிரம் குறையும்.

 

யோகா

பிரசவத்திற்கு பின் அதிகமான எடையை இழக்க நேரிடும். எனவே பிரசவத்திற்கு பின் செய்யக்கூடிய யோகாவை செய்து வந்தால், மனம் அமைதியடைவதோடு, உடலையும் ஆரோக்கியமாக வைக்கும்.

 

ஆடைகள்

பிரசவத்திற்கு பின் ஆடைகள் அனைத்தும் பெரியதாக இருக்கும். எனவே ஆடை பெரியதாக உள்ளது என்று அதனை சரியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, மனதை கஷ்டப்படுத்துவதை தவிர்த்து, புதிய ஆடைகளை வாங்கி அணியலாம்.

 

உணவுகள்

கர்ப்பமாக இருக்கும் போது சாப்பாட்டில் கவனமாக இருந்திருக்க நேரிடும். அதையே பிரசவத்திற்கு பின்னரும் தொடர்ந்தால், உடலுக்கு தான் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே நன்கு ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு பிடித்ததை சாப்பிடுவதாலும், மன அழுத்தமானது குறையும்.

 

வெளியே செல்வது

குழந்தை பிறந்த பின்னரும் சிலர் வீட்டிலேயே அடைந்திருப்பார்கள். இது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே அவ்வப்போது வெளியே செல்வது, நண்பர்களை சந்தித்து பேசுவது என்று இருக்க வேண்டும். வேண்டுமெனில் குழந்தையையும் அழைத்துச் செல்லலாம்.

 

காதல்

பிரசவத்திற்கு முன் இருந்த காதல், பிரசவத்திற்கு பின் கணவருடன் குறைவாக இருப்பதும் மன அழுத்தத்திற்கு ஒருவித காரணம் தான். எனவே குழந்தையை மட்டும் கவனிக்காமல், அவ்வப்போது கணவருடன் சற்று நேரம் ரொமான்ஸ் செய்யவும் வேண்டும்.

 

மேக்-கப்

நிறைய பெண்கள் பிரசவத்திற்கு பின் ஃபேஷனில் கவனம் செலுத்தமாட்டார்கள். சொல்லப்போனால், முன்பு அழகிற்கு கொடுத்த முக்கியத்துவத்தில் சிறிது கூட பிரசவத்திற்கு பின் இருக்காது. எனவே அவ்வாறு இருக்காமல், சற்று அழகிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

 

ஷாப்பிங்

ஷாப்பிங் செல்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு செயல் தான். எனவே மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு, வாரத்திற்கு ஒரு முறையாவது வெளியே ஷாப்பிங் செல்ல வேண்டும்.

 

மனதை அமைதிப்படுத்தும் நிறங்கள்

சில நிறங்களை பார்த்தால், மனம் அமைதியடைந்து ரிலாக்ஸ் ஆகும். எனவே அவ்வாறு அமைதிப்படுத்தும் நிறங்களான வெள்ளை, பச்சை மற்றும் நீலம் போன்ற நிறங்களால் வீட்டை அலங்கரிப்பது மற்றும் உடைகளை அணிவது என்று செய்ய வேண்டும் solution for postpartum stress.

 

அழகு நிலையம் செல்வது

பிரசவத்திற்கு பின் கூந்தல் உதிர்தல், உடலில் ஆங்காங்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் போன்ற பிரச்சனைகள் இருக்கும். எனவே அதனைப் போக்குவதற்கான முயற்சியில் இறங்கலாம். அதுமட்டுமின்றி, பெடிக்யூர் செய்வதன் மூலமாக நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும்.

 

You may also like...