தாலியின் சிறப்பு

தாலி என்பது வெறும் திருமண அடையாளம் என்பதை தாண்டி இந்துகளின் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. நம் நாட்டின் கற்பு நெறிக்கும் ஒழுக்க வாழ்வுக்கும் ஒரு முத்திரையாக தாலி கருதப்படுகிறது. திருமாங்கல்யம் என்பது காலத்தில் சேர்த்துக்கொளப்பட்டது, ஆனால் மஞ்சள் நிற பருத்தி நூலே காலம் காலமாக திருமண அடையாளமாக இருந்து வருகிறது thaaliyin sirappu.

இக்காலத்திலும் சரி முற்காலத்தில் சரி, சாமானிய குடிமகனின் மனைவி முதல் அரசனின் மனைவி வரை அனைவருக்கும் பொதுவான பெருமைமிகு மங்கள அடையாளம் தாலி. ஏன், தெய்வங்களுக்கும் இது பொருந்தும். தாலி அணியாத மணமான பெண் தெய்வம் எதுவும் கிடையாது.

பூணுலுக்கு பருத்தியையே பயன்படுத்துவதை போல தாலியும் பருத்தி நூலிலேயே கட்டப்படும். இது பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தாண்டி அனைவராலும் அணிய கூடியது. மண அடையாளம் என்பது எல்லா மதத்திலும் எல்லா நாட்டிலும் உண்டு. தாலியை மண அடையாளம் என்பதை தாண்டி பாரம்பரியத்தின் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக வணங்கப்படுகிறது.

thaaliyin sirappu

மேற்கு கலாச்சார மோகமும, கால் சென்டரிலும், மென்பொருள் நிறுவன பணிகளிலும் திருமணம் முடிந்துவிட்டதை மறைக்கும் போக்கு தான் இதன் அடித்தளம். அந்த புற்று நோய் இப்போது மெதுவாக அனைத்து தரப்பையும் சீண்டி பார்க்க துவங்கியுள்ளது. திருமணம் முடிந்துவிட்டது அறிந்தால் சமூகத்தில தங்களுக்கான கவர்ச்சி குறைவதாக நவீன யுவதிகள் எண்ணுகிறார்கள் என்று சமீப ஆய்வும் கூறுகிறது.

You may also like...