சிவகரந்தை – மூலிகையில் ஒரு பொக்கிஷம்

சிவகரந்தை இரு வகைப்படும். சிகப்பு மற்றும் வெள்ளை. பொதுவாக பூக்களின்,காய்களின் நிறத்தை வைத்து சிவகரந்தை சிகப்பு என்றும் வெள்ளை என்றும் அடையாளம் காணலாம். சில செடிகள் பூ பூப்பதற்கு முன்பும்,சில செடிகள் பூ பூத்த பிறகும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக சிவக்கரந்தையை பூ பூப்பதற்கு முன்பும், குப்பை மேனியை பூ பூத்த பிறகும் பயண்படுத்த வேண்டும் . எந்த செடி ரசத்தை கட்டுமோ அந்த செடி வீரியத்தை கட்டும் அல்லது எந்த செடி வீரியத்தை கட்டுமோ அந்த செடி பாதரசத்தை கட்டும் – sivakaranthai.

கந்த நாறு கரந்தை யதின் குணம்
மந்த வாதங் கரப்பனை மாற்றிடுத்
தொந்த ரோகந் துடைக்கு மிருமலர
மந்த நோயுந் தணிக்கும் மானணயேஎன்று தேரையர்
பாடுகிறார்.

Sivakaranthai

வாந்தி யரோசகத்தை மாற்றும் பசிகொடுக்கும்
சாய்ந்த விந்து வைக்கட்டுந் தப்பாதே- ஏந்தழகைத்
தண்டா துறச்சோர்க்குஞ் சாந்த பரிமளத்தைத்
தண்டாச் சிவகரந்தைஎன்று அகத்தியர் இதன் சிறப்பை பாராட்டுகிறார்.

sivakaranthai

சிவகரந்தை சத்தாம்

சிவகரந்தையை நிழலில் உலர்த்தி, சாம்பலாக்கிக் கொள்ளவேண்டும். இந்த சாம்பல் ஒரு படி, பனிஜலம் அல்லது சுத்தஜலம் இரண்டு படி என ஒரு மண்பாண்டத்தில் இரண்டையும் கொட்டி நன்றாக கலக்கிவிட்டு காற்றில்லாத இடத்தில் வைத்து வேறு ஒரு மண்பாண்டத்தால் மூடவேண்டும். பிரதிதினமும் நான்கைந்து தடவை மரக்கொம்பினால் கலக்கி வரவேண்டும். இவ்விதம் மூன்று நாட்கள் சென்ற பிறகு நான்காம் நாள் கலக்காமல் வைத்து ,ஐந்தாவது நாள் தெளிவாக இறுத்து மண்பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து சிறிய தீயில் எரித்து வரவேண்டும். அப்போது இதனை அடிக்கடி மரத்துடுப்பால் துழவியும் வரவேண்டும். குழம்பு பதம் வந்தவுடன் ஓர் ஈர்க்குச்சியினால் தொட்டு நகத்தின் மீது வைத்து ஆறினபின் இறுகி கெட்டியானால் , பதமென கீழ் இறக்கி ஒரு பாத்திரத்தில் வழித்து அதை வெயிலில் வைத்து வந்தால் ஈரமுளர்ந்து சத்தாகிவிடும் .இதுவே சிவகரந்தை சத்தாம் -sivakaranthai.

அளவு

குன்றிமணி எடை ஒன்று முதல் நான்கு வரையில் எடுத்து துணை மருந்தாக தேன் /நட்டுசர்க்கரை / நெய் அல்லது வெண்ணை முதலியவைகளில் காலை ,மாலை இரு வேளையும் உள்ளுக்கு உபயோகிக்கலாம்.

உபயோகம்

இரத்த சம்மந்தமான வியாதிகளெல்லாம் தீர்த்து இரத்தத் சுத்தியாக்கி தேகதிடம் , தேகபலம் , தேகவசீகரம் முதலியவை உண்டாகி ஆத்ம சக்தி விருத்தியாகும் .இதனை எல்லா நோய்களுக்கும் உபயோகிக்கலாம். வேறு லேகியம் / சூரணம் முதலியவைகளிலும் தகுந்த அளவு சேர்த்து உபயோகித்தால் அந்தந்த மருந்துகளுக்குரிய குணங்களை சிறப்பு செய்யும் . இரசவாத முறைகளில் இரசம் முதலிய சரக்குகளை கட்டவும் உபயோகிக்கலாம். நரை வந்தால் அக்குறையை நிவர்த்தி செய்ய நமது சித்தர்கள் பக்கவிளைவுகள் இல்லாத சில எளிய மருந்துகளை சொல்லியிருக்கிறார்கள்.

இளநரை

சிவகரந்தையை பூ பூப்பதற்கு முன்பு பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துகொள்ள வேண்டும். அத்தோடு கரிசலாங்கண்ணி இலையையும் உலர்த்தி பொடி செய்து சிவகரந்தை பொடியுடன் சமமாக கலந்து தினசரி காலை மாலை இருவேளையும் சுத்தமான பசு நெய்யில் கலந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இளநரை கண்டிப்பாக மறைந்து முடி கருத்துவிடும். இந்த மூலிகையை சாப்பிடும் காலத்தில் மது மற்றும் புகையிலை நிச்சயம் பயன்படுத்த கூடாது. அதிகபடியான காரத்தையும் புளிப்பையும் குறைக்க வேண்டும். தகவல் தளத்தின் அனுமதியோடு பெறப்பட்டது.

You may also like...