ஆருத்ரா தரிசனம்

திருவாதிரை விரதம்

திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர் arudra darisanam.

ஆருத்ரா தரிசனம்

தமிழ்நாடு சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசனம் விமர்சனையாக கொண்டாடப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறுவது ஆருத்ரா தரிசனம், பொதுவாக ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று  திருமஞ்சனமும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனமும் கொண்டாடப்படுவது சிறப்பு. இந்த இரு கொண்டாட்டத்தின் பொது நடராஜரே மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது தனிச்சிறப்பு. 

arudra darisanam

சென்ற ஆண்டு (விளம்பி வருடம்) ஆருத்ரா தரிசனம் மார்கழி திருவாதிரை (2018 டிசம்பர் 23 / மார்கழி 8)  அன்று கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு மார்கழி 24 (09 – 01- 2020) இன்று கொண்டாடப்படுகிறது

பங்கமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். பின்னர் கொடியேற்றத்துடன் தீப ஆராதனை நடைபெறும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர் arudra darisanam.

அதிரை நாளைப் பற்றி பாடியவர்கள்

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.

“ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்”

திருநாவுக்கரசரும் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவின் சிறப்பினையும் அழகையும் பின்வருமாறு பாடியுள்ளார்.

“முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பக்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தனாரூ ராதிரை நாளா லதுவண்ணம்”

திருவாதிரைக் களி

திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ‘ என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்.

You may also like...

2 Responses

  1. dhana says:

    I did not even heard and knew about this. Thanks for this info!

  2. Boomadevi says:

    நாங்கள் திருவாதிரைக் கழியில் பச்சைப்பருப்பு தான் சேர்ப்போம்.