பொங்கல் திருநாள் கவிதை

அரவர் நாம் அனைவரும் போற்றும் பெருந் திருநாள்!
ஆதவனை வணங்கும் அறுவடைத் திருவிழா!
ஆவி னத்தைப் போற்றும் அழகுத் திருநாள்!
இன்னல் நீக்கி உழவர் இன்பம் கொள்ள புத்துயிர் தரும் நாள்!
உழவு இன்றி உலக மில்லை எனும் உண்மை உணர்த்தும் தைத் திருநாள்!
எண்ணம் தூய்மையாக பொல்லாத குணத்தை தீக்கிரையிடும் போகி!
களைப்பு நீக்கி களிப்பு கொள்ள காணும் பொங்கல்!
மிரட்டி வ௫ம் காளைகளை விரட்டி அடக்கும் காளையரின் வீரத் திருவிழா!
பால் பொங்கி நம் மனதில் மகிழ்ச்சி பொங்க வரும் “பொங்கலோ பொங்கல்! “

– ஆனந்தி ஓசூர்


உழவன் எம் தலைவன்

பருவமழை பொய்த்தாலும்
நிலமதை பண்பட வைக்க
தவறியதில்லை,
வருணன் தாமத கரிசனம்
காட்டினாலும் அவனை
வஞ்சிப்பதில்லை!
அவன் சால் கட்டி வீசி
விதைப்பது உழும்
நேரமதில் உலா வரும்
பறவைகளுக்கும் சேர்த்து தான்.
விளை நிலம் விலை நிலமாக மாறும் தருணமதில்
உயிர்காற்றை இழப்பதாய் தவிப்பதும் இவனே!
பலன் குறைந்தாலும் பயிர்களிடத்தே
வியக்கும் அன்பு கொண்டவன்!
மானுடம் வளர்க்கும் தாய்க்கு ஓரிரு பிள்ளைகள்,
ஆனால் இவனுக்கோ
கோடி பிள்ளைகள்.
உழவுக்கு நன்றி

– நீரோடைமகேஸ்

You may also like...