கவியின் கவி – நீரோடைப் பெண்

வருடங்கள் பல கடந்தும்
தன்னெழில் மங்கா
காரிகை;
செந்தமிழ் கவிதைகளால்
கவிஞர்கள் தீட்டிய
தூரிகை;
ஏட்டினில்; கவிஞர்
பேச்சினில் தவழ்ந்துவரும்
தாரகை;

neerodai pen

நிகழ்கால சங்கதிகளை
சந்ததிகளுக்கும் செம்மையாக
நிலைநிறுத்தி அழகுசெய்யும்
வேதகி;

கண்டங்கள் கடந்தும்
காயங்கள் ஏற்றும்
தன்னியல்பு மாறாத
சாதகி;

தமிழரையும் கவிஞரையும்
நட்புடன் இணைக்கும்
பாலம்;

பட்டிபோரும் படைப்போரும்
பயன்படுத்தி பக்குவப்படுவரிதன்
மூலம்;

காலங்கள் கற்களாய்
உன்னுள் உருண்டோடினாலும்
மாறாது உன் பொலிவு…
தீராது உன் செறிவு….
ஓங்குபுகழ் கொண்டே
தாரணியில் நடைபோடு….
ஞானிலங்காணும் வியப்போடு…..

– கவி தேவிகா

You may also like...

1 Response

  1. praba says:

    மிக அருமை நன்றி…