கவிதை போட்டி 2023_04
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2023-04
வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.
கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.
கவிதை போட்டி அறிவிப்பு
- தமிழ் புத்தாண்டு
- சிவபுராணம்
- டாக்டர் அம்பேத்கர்
- புனித வெள்ளி
- ரமலான் ஒரு பார்வை
- விரும்பிய தலைப்பு
மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.
வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்
தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2023-03. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
குறிப்பு:
1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).
தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது
தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.
இன்னும் ஓர் இரவு
இரவின் நிழலில்
உறங்கிகொண்டிருந்தன
குப்பத்து வீடுகள்
இரயிலின் கூவலில் விழித்துக்கொண்டது தெருவிளக்கு
குப்பைத்தொட்டி
பிரசவித்த குப்பைகளுக்கு நாய்குட்டிகள் முத்தமிட்டுக்கொண்டிருந்தன
நின்றுவிட்ட மணிகூண்டின் கடிகாரத்தில் நடந்துக்கொண்டிருந்தது நாலுகால்பூச்சியின்
கட்டிட வேலை
மூன்றாம் உலகப்போருக்கு போய்க்கொண்டிருந்தன முறுக்குமீசை பூனைக்குட்டிகள்
தூரத்தில்
காணல் நீரில் மிதக்கும் நிலவுபோல்
மின்னொளியில் கரைந்துகொண்டிருந்தது கட்டிடங்களின் இரவு.
எத்தனை முறை தோற்றால் என்ன
வெற்றி மட்டுமே பெருபவர் இங்கு யார்..
கீழே விழாமல் போனால் விதை விருட்சம் ஆகுமோ
கீழே விழாமல் போனால் மழைத்துளி மீண்டும் மேகம் ஆகக்கூடுமோ
கீழே விழாமல் போனால் அருவி தான் கடல் சேருமோ
கீழே விழாமல் போனால் குழந்தையின் குறுநடை வீறுநடை ஆகுமோ
கீழே விழாமல் போனால் வெற்றியின் சுவை தான் இனிக்குமோ
விழுவது என்றும் எழுவதன் அடையாளம் அன்றோ
விழுவது வீழ்ச்சி அன்று
மீண்டும் எழத் தயங்குவதே வீழ்ச்சி!
வெற்றி என்றும் இனிக்கும் நண்பன்
மகிழ்ச்சி தந்து சென்றுவிடும்
தோல்வி என்றும் கசக்கும் ஆசான்
ஆயிரம் அனுபவம் கற்று தந்து அழகு பார்க்கும்!
வெற்றியில் பணிவும் தோல்வியில் துணிவும் கொண்டால் தோல்வியும் வெற்றியே!
நகைக்கடை/ ஊழியர் அணிந்திருந்தாள்/ கண்ணாடி வளையல்/
கோடையில் இளநீர்// கூடுதலாய் சுவைக்கிறது// விற்பவனின் பேச்சு/
சிவபுராணம்
ஆதியானவன் புகழ்பாடும்,
ஆயிரம் ஆண்டு கடந்துநிற்கும்,
விந்தைகள் பலவாற்றும்
வியாசரின் படைப்பு இது
அறிவியலை விளக்க
அடிகளாய் எழுதப்பட்ட
கதைகள் பலவற்றுள்
கடவுளையும் கண்டறியலாம்.
ஆன்மிகத்தையும் அறிவியலையும்
அழகாய் கலந்திட்ட
அட்சய பாத்திரம் இது
ரமலான் ஒரு பார்வை
திருக்குரான் தந்தமைக்கு நன்றி உரைக்கும்
திருமாதம் இந்த ஒன்பதாம் மாதம்.
திருக்கொள்ளவும் திருந்திவாழவும்,
திருத்தூதரால் வழங்கப்பட்ட வழிமுறை இது.
செய்த பாவம் கரைய,
செய்த புண்ணியம் பெறுக,
இறைவனை அடைய,
இறைவனால் கூறப்பட்ட திருமந்திரம் இது.
நோயுற்ற மனதை குணப்படுத்தும்
நோம்பு
தடம் மாறிய வாழ்வும் சீர்படுத்தும்
ரமலான்
அரவணைப்பில் அன்பையும்
பாசத்தில் பாரியையும் வீழ்த்தும் உனக்கு-எந்த பிரபஞ்சத்தின் மன்னர்களின் மகுடமும் போதாது…!!!👸🏻
வாழ்க்கையே வரமாக கொடுத்த வரமே…💫
உன்வாசம் நிறைந்த சேலைசிறையில் அடைந்தபோதெல்லாம்
என்வசம் தென்றல் தோழி வந்து மனதில் தேனூட்டியது😇
வேதங்களை கற்றுத் தந்த தேவதையே😍காலம் கடந்த காதலுக்கு நன்றி✨
அகிலமே அமைதி ஆகிறதே ஆராரிரோவில்
அதை அறியாதோர் அரிதே இவ்வண்டத்தில்🌎
என் கண் விழி விழித்ததும்👀ரசித்த முதல் கவிதையை பற்றி கவிதை நான் என்னவென்று எழுத…
??? என்னை படைத்த உன்னை என் படைப்பில் எவ்வாறு விளக்க…??
*அம்மா*❤️…,
இவ்வார்த்தையே வர்ணிக்க வார்த்தைகள் உண்டோ..???🤷🏻♀️
உன் சுவாசத்தில் வாழும் நான்
உன் வாழ்வில் சுவாரசியம் தரவில்லையா…???💔
என் அருகிலிருந்தும்.., தனிமையில் கவலை கொள்ளும் உன்னை அறியாமல் போவேனா??❤🩹
உன் கவலையை போக்க காதலியென ஆகவா???
என் காதலை கூற உன் நொடி ஒன்று போதுமே🙃 ஆனால் உன் கண்ணில் கவலை அறிந்த நொடி அறியாமல் புரியாத பிரியம் கொண்டதால் என் உயிரை உணர்ச்சி இன்றி பிரியவா? 🙂
நான் உனக்காக வாழவில்லை உன்னுள்ளே வாழ்கிறேன்.❤️
எக்கணமும் கவலை கொள்ளாதே….!!!!!😶🌫காலங்கள் காணாக்கல் ஆயினும் காதல் கொள்ளும் என்னை மறந்து விடாதே…!!!!💓
காத்திருக்கும் காலங்களில்…
மறைந்திருக்கும் மன்னனின்…
சிந்தனைகளால் சிதறும் அலறல்சிதறல்கள்…!!🙂
அறிவாளன் அறிவான இவள் அவஸ்தையை…!!!
இல்லை இன்னன்று இன்பமுறுவானோ…!!!
உணர்வுகளை உணராமல் உன்னத காதலை உதறி தள்ளுவானோ….!!!
ஏழ்மையின் இவளின் எழுகுரலை எண்ணிப் பார்ப்பானோ…..!!!
ஐயங்களை விளக்கி ஐவிரல் கோர்ப்பானோ….!!!
ஓயாமல் ஓடும் இவளின் ஓராயிரம் எண்ணங்களை ஒர்வார்த்தையில் இவளில் ஒர்அரங்கம் பதிப்பானோ…..!!!!
இல்லை,
ஔவையென அவதாரம் கொடுப்பானோ…!!!🙃
இந்தப் பழைய பாலம் எவ்வளவு உறுதியானது என்று
இஞ்சினியர் வந்து சொல்லத் தேவையில்லை..
அதன் கீழே சாலையோர மக்கள் இன்னமும்
துயில் கொள்கிறார்கள்.
இங்கு எல்லோரும்
நினைவுகளைச் சுமந்துகொண்டு நிறைமாத கர்ப்பிணி போல்
அலைந்துகொண்டிருக்கிறோம்
பிரசவிக்கவும் முடியாமல்
கலைக்கவும் வழியில்லாமல்!
வெட்டப்பட்டுத் துடித்துக்கொண்டிருக்கும்
ஆட்டைவிட,
வரிசையில் வெட்டப்படக் காத்திருக்கும்
அடுத்த ஆடுகளின் கண்களில்தாம்
உயிர்ப்பயம் அதிகமாகத் தெரிகிறது.