கோடை கால நோய்க்கான தீர்வு

நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும். அடி வயிற்றில், சிறு நீர்ப்பாதையில் கடுத்துக் கொண்டே இருக்கும். summer term disease care
 
வெள்ளரிப் பிஞ்சு கிடைத்தால் மதிய நேரத்தில் வெள்ளரிப் பிஞ்சை மோரில் அல்லது தயிரில் கலந்து சாப்பிடுவது சிறு நீர்ப்பாதையை நலமாக வைக்கும்; சிறு நீர்க் கோளாறு வராமல் காக்கும்.
 
 வெள்ளை முள்ளங்கியை நன்றாக அலசி, சிறு சிறு துண்டுகளாக்கி, வெல்லத்தோடு அத்துண்டு களையும் சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட வேண்டும். சுவையாகவும் இருக்கும்.
சிறிதாக இருந்தால் ஒரு முள்ளங்கி, பெரியதாக இருந்தால் அரை முள்ளங்கி சாப்பிட்டால் போதும். காலை, மாலை இருவேளை சாப்பிட்டால், சாப்பிட்ட ½ மணி நேரத்தில் கடுப்பு அகலும்.
summer term disease care
 
வாரம் இருமுறை வாழைத் தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் சிறு நீரகக் கல் நீங்கும், கொழுப்பு குறையும். அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ் வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ்.  கோடைக்காலத்தில் அதிகரிக்கக்கூடியது. இதனால்தான் வெயில் காலம் முழுமையாக தொடங்காத நிலையிலும்கூட, இப்போதே அம்மை நோயின் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது. பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்குவீங்கி என அம்மையில் பல வகைகள் உண்டு. வேப்பங்கொழுந்தை அரைத்து எடுத்து சம அளவு அதிமதுரப் பொடியுடன் சேர்த்து தண்ணீர் விட்டு சுண்டைக்காய் அளவு சிறு சிறு உருண்டைகளாக்கி நிழலில் காயவைத்து, ஒன்றிரண்டு உருண்டை வீதம் தினமும் 3 வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், நோயின் தீவிரம் குறைந்து நோய் குணமாகும். மேலும் வேப்பிலை அல்லது இளந்தளிருடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அம்மை கொப்புளங்களின் மீது தடவி வந்தால் தாக்கத்திலிருந்து மீழலாம்.
 
எடுத்ததற்கெல்லாம் மாத்திரை சாப்பிட்டாதீர்கள்…! நம்மிடம் நிறைய இயற்கை மருந்துகள் இருக்கு..!  மற்றபடி ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்டு பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் நாம் நலமாக வாழலாம்…

summer term disease care

You may also like...

1 Response

  1. kasthuri says:

    குழந்தை vaithiyam