முருங்கைக்கீரை சூப்

முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான்”, என்ற பழமொழி பற்றியும், முருங்கை கீரை கொண்டு சமைக்கும் உணவு பற்றியும் பார்ப்போம் – murungai keerai soup.

murungai keerai soup

கீரை என்றாலே பெரியோர் முதல் குழந்தைகள் வரை முகம் சுளிப்பார்கள், சாப்பிட அடம் பிடிப்பார்கள், ஆனால் அவற்றில் தான் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கிறது . கீரையை சமைக்கும் பெண்களுக்கும் அதிக வேலைப்பாடுகள் இருக்கும் ஆதலால் அவர்கள் சமைப்பதற்கு சிறிது தயக்கம் காட்டுவார்கள்., ஆனால் அதற்காக கீரைகளை உணவில் சேர்க்காமல் இருக்க முடியுமா??? – murungai keerai soup.

அத்தகைய சிறப்பு வாய்ந்த மூலிகை தன்மைக் கொண்ட கிரையை எளிதில் , அருமையான சூப் ஆக செய்வது எப்படி என்று பார்ப்போமா????

முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான்…, ஏன் சொன்னார்கள் தெரியுமா…? இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்…

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால், அவருக்கு பூ., காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன்தரக்கூடியவை. முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்யத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகை, இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்துசெல்வார். இதைத்தான் நம் முன்னோர்கள் முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள்.

தேவையான பொருட்கள்

முருங்கைக் கீரை – ஐந்து கொத்து
சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
வெந்தயம் – ஒரு மேஜைக் கரண்டி
மிளகுத் தூள் – ஒரு மேசைக்கரண்டி
வெள்ளைப்பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – தேவையான அளவு

செய்முறை

முருங்கைக் கீரையில் உள்ள காம்புகள் கூட சத்து மிகுந்தது ஆதலால் கீரையை காம்போடு நன்றாக தண்ணீரில் கழுவி அகன்ற பாத்திரத்தில் கீரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு சீரகம், வெந்தயம்,மற்றும் பூண்டு பற்களையும் சின்ன வெங்காயத்தையும் சிறிதாக தட்டி அதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.அடுப்பில் வைத்து மூடி வைக்காமல் கொதிக்க விடவும்.

கீரை மிகவும் வெந்து விடவும் கூடாது. கொதிக்கும்போது நன்றாக வாசனை வரும் அதுவே சரியான பக்குவம். சரியாக பத்து நிமிடங்கள் கழித்து அந்த நீரை வடிகட்டி அதனுடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து வெதுவெதுப்பாக அருந்தலாம். மேலும் கீரையைத் தனியாக உருவி அதனோடு பாசிப் பருப்பு சீரகம் சேர்த்து அவித்து கடைந்து தாளித்து உணவோடு சேர்த்துக் கொண்டால் மேலும் நன்மை தரும். குழந்தைகள் விரும்பி சாப்பிட தோதுவாக சூப்பில் 2, 3 ரஸ்க் துண்டுகளை நெய்யில் வறுத்து சூப்போடு சேர்த்து கொடுக்கலாம் – murungai keerai soup.

You may also like...

3 Responses

  1. Kavi devika says:

    காலத்துக்கேற்ற சமையல் குறிப்பு. வாழ்த்துகள்

  2. தி.வள்ளி says:

    அருமையான எளிமையான செய்முறை .முருங்கைக்கீரையில் அபரிமிதமான சத்துக்கள் இருப்பதால் இந்த சூப் செய்முறை மிகவும் பயனுள்ளது .

  3. Rajakumari says:

    Superb