வெங்காயம் ஒரு சிறந்த கிருமிநாசினி

வெங்காயம் போல் சிறந்த கிருமிநாசினி வேறு கிடையாது; ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, பூண்டுக்கு இணையான சக்தி, வெங்காயத்திலும் உள்ளது. இதனால்தான், இன்று வெங்காயம் இல்லாமல் சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும்.

vengaayam oru sirantha marunthu

மருத்துவ பயன்கள்:

* வெங்காயம், வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கு உதவுகிறது.

*ரத்த அழுத்தத்தை குறைக்கும்; இழந்த சக்தியை மீட்கும்.

* தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள், வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம், மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால், நுரையீரல் சுத்தமாகும்.

*கீல் வாயு குணமாக வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து மூட்டுக்களில் தடவி வந்தால் வலி குணமாகும்.

*நறுக்கிய வெங்காயத்தை, முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

*வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மாலைக்கண் நோய் சரியாகும்.

*வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து, கண்ணில் ஒரு சொட்டு விட்டால் கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

*ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

*வெங்காயத்தை அரைத்து, தொண்டையில் பற்றுப்போட்டால், தொண்டை வலி குறையும்.

*பாம்பு கடித்து விட்டால் நிறைய வெங்காயத்தைத் உண்ண வேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

*ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருகினால், சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

*காலையில் வெறும் வயிற்றில் வெங்காயத்தை கடித்து சாப்பிடுவது, பற்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

You may also like...

1 Response

  1. Pavithra says:

    arumayana thagaval.