எப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது ?
எப்போது வீட்டில் விளக்கு ஏற்றுவது ? veettil vilakku yetrum muraigal
வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. எங்கு நெய் அல்லது நல்லெண்ணையில் விளக்கு எரிகிறதோ அங்கு லக்ஷ்மி வாசம் செய்வதாக அர்த்தம் . பொதுவாக,விளக்கேற்றுவதில் இரண்டு வகை உண்டு சிலர் விளக்கேற்றி சிறிது நேரத்தில் அணைத்துவிட்டு வெளியில் சென்று விடுவார்கள் ஆனால் விளக்கில் எண்ணெய் நிறைய விட்டு சிறிதாக திரியைத் தூண்டி விட்டு நாள் முழுவதும் எரிய விடுவது மிகவும் சிறப்பு. இரவு நேரத்தில் பாலை வைத்து புஷ்பம் கொண்டு அமர்த்தி விட்டுத்தான் செல்லவேண்டும். எண்ணெய் தீர்ந்து திரியும் எரிந்து அதுவாக அணைவது போல் விடக்கூடாது.