ஆரோக்கிய நீரோடை (பதிவு 3)

நாமும், நாடும் உணவு பொருட்களை வீணாக்கும் நிலையிலில்லை. ஒரு விளம்பரத்தில் “எவ்வளவு வேணா சாப்பிடுங்க.. ஆனா புட்ட (food) வேஸ்ட் பண்ணாதீங்க” ன்னு சமைச்ச உணவு மீதமானால் , அதை வீணாக்காமல் வேறு ஒரு புது டிஷ் ஆக மாற்றும் சில குறிப்புகளை வாசிக்கலாம் – ஆரோக்கிய நீரோடை 3

arogya neerodai wellness

பால்கோவா அதிகமாயிருந்தால் பாயாசத்தில் சேர்த்து கிண்டலாம்.. இனிப்பு சற்று குறைவாக போட வேண்டும்.பால் சேர்க்கத் தேவையில்லை.கேரட் அல்வா செய்யும் போதும் பால்கோவா இருந்தால் சேர்க்கலாம். ருசி பிரமாதமாக இருக்கும்.

இட்லி சாம்பார் மீந்துவிட்டால் மினி இட்லிகளை ஊற்றி, சாம்பாரில் ஊறவைத்து கொடுக்கலாம்.

கீரை மசியல் மிஞ்சினால் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதை உடன் போட்டு பிசைய பச்சை கலரில் சப்பாத்தி மினுமினுக்கும் ..

கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கும் பூரணம் மிஞ்சினால் அதை உருட்டி லேசான உப்பு சேர்த்த மைதா மாவு கரைசலில் முக்கி போட்டு சுசியம் ஆக்கிவிடலாம்.

தோசை மாவு ரொட்டி, மிஞ்சினால்…

தோசை மாவில் துளி உப்பு சேர்த்து ரொட்டியை இருபுறமும் நன்றாக பஜ்ஜிக்கு முக்குவது போல் முக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு போட்டு மூடி வைத்து மூடி… இருபுறமும் வேக விடவும்.மேலே இட்லி பொடி தூவினால் இன்னும் ருசியாக இருக்கும். வித்தியாசமான பிரெட் ஊத்தப்பம் ரெடி…

தோசை மீந்தால்… லேசாக தண்ணீரை கையில் தெளித்துக்கொண்டு சின்ன சின்ன துண்டுகளாக உதிர்த்து… சிறிது உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும் , வாணலியில் எண்ணெய் விட்டு , ( சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்)
கடுகு ,உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, மிளகாய் வற்றல் கிள்ளிப் போட்டு தாளித்து, தோசைத் துண்டுகளை போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்க… சுவையான புது டிஷ் ரெடி ..

ரொட்டி மீந்தால்… சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி வைத்துக்கொள்ளவும் …கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, போட்டு தாளித்துக் கொண்டு … கட் பண்ணி வைத்த ரொட்டி துண்டுகளை லேசாக ஒரு புரட்டு புரட்டி கொண்டு.. கால் கப் கெட்டித் தயிரில் உப்பு போட்டு அதை ரொட்டியின் மேல் தெளித்து விடவும்… பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்… சாப்பிட சுவையாக இருக்கும்.

மீந்து போன உணவை புதுசா மாத்தி குடும்பத்தினரை அசத்துங்கள்…பணமும் மிச்சம் ..உங்களுக்கு பாராட்டும் நிச்சயம்!!!!!!

– தி.வள்ளி, திருநெல்வேலி


சுரைக்காய் அடை

தேவையானவை

 1. புழுங்கல் அரிசி – 2 கப்
 2. பச்சரிசி – கால் கப்
 3. கடலைப்பருப்பு – அரை கப்
 4. துருவிய சுரைக்காய் – ஒரு கப்
 5. மிளகாய் வற்றல் – 4 -6
 6. மஞ்சள் பொடி – 1/4ஸ்பூன்
 7. காயப் பொடி – 1/4 ஸ்பூன்
 8. பெல்லாரி (நறுக்கியது) – 1
 9. கறிவேப்பிலை – கொஞ்சம்
 10. வெள்ளை உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன்

செய்முறை

புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு ,வெள்ளை உளுத்தம் பருப்பு ,நான்கையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற விடவும். பின் அரவை இயந்திரத்தில் இட்டு அத்துடன் மிளகாய் வற்றல், மஞ்சப்பொடி, காயப்பொடி ,துருவிய சுரைக்காய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து உப்பு சேர்த்து வழிக்கவும்.சுடும் போது நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலையை சேர்த்து கொள்ளவும்.சுரைக்காயை அடை மிருதுவாக இருக்கும். பருப்புகள் அதிகம் சேராததால் வயதானவர்களுக்கு கூட எளிதில் செரித்துவிடும்.சக்து மிக்கதும் கூட – ஆரோக்கிய நீரோடை 3

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

1 Response

 1. கதிர் says:

  பயனுள்ள தகவல் நன்றி