அருவம் அருவுருவம் உருவம்

இறைவன் அருவம் அருவுருவம் உருவம் என்ற மூன்று நிலைகளில் உயிர்களின் வினைகளுக்குத் தகுந்தபடி இயக்குகின்றார் .இறைவனின் நிலையான ஒளி நிலை அருவமாகவும் உருவமாகவும் மாறிக்கொண்டே நடத்துவதை ஞானிகளால் பல திருமுறைகளாகும் பாடல்களாகவும் பாடி விளக்கம் கேட்டிருக்கிறோம் – irai arul aanmeega katturaigal.

irai arul aanmeega katturaigal

அப்பர் சுந்தரர் திருநாவுக்கரசர் மாணிக்கவாசகர் என்ற பழம் சிவனடியார்கள் நமக்கு இறைவனின் இன்றியமையாமை பற்றியும் இறைவனை சேரும்படி பற்றியும் பல நூல்களில் ஆகமவிதிப்படி எழுதி வைத்துச் சென்றுள்ளனர் அந்த வரிசையில் திருநாவுக்கரசரின் அருள்மொழி விளக்கங்களை பற்றிய கட்டுரையில் சிறிது காண்போம்.

அருள் உண்மை நிலை

இறைவன் திரு அதிகை வீரட்டானத்தில் திருநாவுக்கரசரின் சூலை நோயைத் தீர்த்து அவருக்கு நாவுக்கரசர் என்ற திருநாமமும் கொடுத்து அவரை ஆசிர்வதித்து அருளிச்செய்தார் .இதனால் அவர் இறை உண்மை நிலையினால் இன்பநிலை அனுபவம் பெற்றவர் ஆனார். அவரது உலகம் முழுமையும் இறைவனின் அருள் வியாபகமாகி உண்மை நிலையை அடைந்தது. அதனால் அவருக்கு இறைநிலையில் தானாகவே உணரத்தக்க முறை அல்லது
ஆற்றலை அவர் பெற்றார்.

உலக மாயையை துறந்த இறைவனின் உண்மை நிலையை விளங்கிக் கொண்டால் ஒவ்வொரு கோவிலாக சென்று இறைவனை தான் இவ்வாறெல்லாம் உணர்ந்தான் என்பதை தனது பாடல்களில் விளக்கி அருளிச் செய்துள்ளார் .தான் கண்டறிந்த உண்மைகளை தனது பாடல்களில் விளக்கியுள்ளார்.

உண்மை உணர்தல் இறையுண்மை , வினையுண்மை, முப்பொருள் உண்மை, நிலையாமையும் நிலையும் உள்ள உலக இன்பத்தின் நிலை , இன்பநிலை இறைப்பணி சரியை ,கிரியை, யோகம் ஞானம் பொருள்வகை, இயல்பு உணர்த்தும் முறைமை, தத்துவங்கள் , தத்துவ நீக்கம், வினை நீக்கம் , திருவைந்தெழுத்து , அருட்கண் உள்ளுறைப் பொருள் அணைந்தோர் தன்மை இவ்வாறான நெறியினை இறையருள் பெற்ற நாவுக்கரசரின் மக்களுடன் எய்தி இருக்க வேண்டும்.

ஆனால் தாங்கள் கற்ற கல்வியினால் உலகம் முழுமையும் தீய எண்ணங்களும் விபரீத மனப்பான்மையும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன அவைகள் அந்த இறை உண்மையை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இனியேனும் இறையருள் பெற்ற திருவருள் செல்வர்கள் அருளிய திருமுறைகளை படித்து வாழ்வில் பயன் பெற வேண்டும்.

உண்மை அறிந்தவர்கள் எப்பொழுதும் இறைவனை சார்ந்த தங்களின் இன்ப துன்பங்களை தன் வினைகளால் வந்தது என்ற தன்னடக்கம் பெற்று முடிவில் இறைவன் திருவடியை அடைந்து பிறவா நிலையை பெற்றுவிடுவார்கள் – irai arul aanmeega katturaigal.

இவ்வாறு உலகியலில் ஒளி வண்ணனாகிய இறைவனை அப்பர் சுவாமிகள் கண்ட விபரங்களை அவரது பாடல்கள் வாயிலாக சிந்தித்து அதனால் இறை உண்மையை அறிந்து கொள்ளலாம் அதுவே உலகத்தையும் உயிர்களையும் படைத்தும் காத்தும் மறைத்தும் அருளியும் இந்த ஒளியின் வழி நடைபெறுகின்றது. இதனை மிக நுணுக்கரிய நுண் உணர்வே அப்பர் சுவாமிகள் அருளிச் செய்து உள்ளார்கள்.

திருமந்திரம்

நவீன விஞ்ஞானம் இன்றைய கண்டுபிடிப்புகளை நமது விஞ்ஞானிகள் தாங்கள் யோகநிலையில் கண்டு விளக்கியுள்ளார்கள் இன்றைய கால கண்டுபிடிப்பான அணுக்களின் விளையாட்டுகளை திருமந்திரம் கீழ்கண்டவாறு விளக்குகின்றது

எங்கும் திருமேனி எங்கும் சக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் சிவமாய்
இருத்தலால் எங்கெங்கும் சிவன் விளையாட்டே …
சக்திசிவன் விளையாட்டால் உயிராகி
ஒத்த இருமாயக் கூட்டத்திடையே பூட்டி
சுத்தம தாக்கும் துரியம் பிரித்து
சித்தம் புகுந்து சிவமாக்குமே.,

சக்தி சிவன் விளையாட்டாம் உயிராகி
சக்தி சிவம் சிவமாஞ் சிவன் சக்தியுமாகுஞ்
சக்தி சிவமன்றி தாபரம் வேறில்லை
சக்திதான் என்றுஞ் சமைர்து ருவாகுமே.

தியான ஒளி நிலை

நமது அருளாளர்கள் தங்களை யோகநிலையில் இருத்தி இடைவிடாது உடலாகிய பருப்பொருளை பகுத்துப் பகுத்து தியான ஒளி நிலையிலே பிரபஞ்சம் முழுமையும் ஆராய்ந்து தங்களின் முடிவினை எடுக்க நமக்கு தந்துள்ளார்கள். இந்த வழியினில் அப்பர் சுவாமிகள் பாடல்கள் இறைவனை தேவி நிலையினை தனது பாடல்களின் விவரமாக விளக்கி அருளிச் செய்துள்ளார் பதிகத்தில் முழுமையாக விளக்கியுள்ளார்கள் – irai arul aanmeega katturaigal.

கடவுளை எவ்வாறான வழிகளில் வடிவமாகத் தான் கண்டதாக அப்பர் சுவாமிகள் தனது பாடல்களில் விலக்கி அருளிச் செய்து உள்ளார்கள் . மானிடர்கள் தங்கள் சிற்றறிவு நாள் இறை உண்மையை முழுதும் உணர்ந்து விடமுடியாது. இறைவனது அருள் கிடைக்கப் கிடைப்பதற்கு மனிதர்கள் தங்கள் உடலக உணர்வினைப் பெருக்கித்தான் இறைவனை உணர முடியும்.

இந்த உடம்பு அளிக்கப்படுவதற்கு இறைவன் தரவில்லை இறைவன் தன்னிடம் மீண்டும் செய்வதற்காகவே தந்துள்ளார் பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் இங்கேதான் மாறிமாறி பிறவிகளில் அலைந்து இன்ப துன்பங்கள் அனுபவித்து, தன்னை இறை அருளால் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஆன்மீகம் . இறைவன் அருளைப் பெறவேண்டும் -irai arul aanmeega katturaigal .

ஆன்மாவின் ஒளி பெருக்கம்

மனிதனால் உணர்வுகளால் மட்டும் வாழ முடியாது ஆனால் அவருடைய உயிர் சக்தி அவனிடம் உள்ள முகுளத்துடன் சார்ந்துள்ள மெடிலா ஆப்லங்கேட்டா வழியாக பாய்ந்து கொண்டிருப்பதினால் அவனுடைய வாழ்வு சிறப்படைகிறது. தன்னை சுற்றியுள்ள உணர்வுள்ள பிரபஞ்சத்தில் தன்னுடைய உடம்பிற்குள் கொண்டுவர உறுதியான மனப்பான்மை ஒரு முக்கியமான விஷயம்

அவர்கள் கடவுளின் தூய்மையான ஒளி 3 மடிப்புகளாக உள்ளன. ஆனால் இந்த மூன்றும் முறையே உடல்நலம் சமநிலை புத்தி ஆன்மாவின் ஒளி பெருக்கம் ஆகியவைகளை தந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே இறை ஒளிபெற ஆலய வழிபாடு மற்றும் கிரிகைகள் அனைத்தும் நியமம் தவறாமல் செய்து சத்வகுணம் பெற்று இறைவன் திருவடியில் அமர்ந்து பேரானந்தம் பெறலாம். அனைவரும் இறையருள் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள் – irai arul aanmeega katturaigal.

You may also like...

2 Responses

  1. Kavi devika says:

    அற்புதமான பதிப்பு.வாழ்த்துகள்

  2. Rajakumari says:

    Useful information thanks